Sunday, July 1, 2012

உயிரின் வேர்கள் ....3 அபூபக்கர் சித்தீக் (ரலி)


அபூபக்கர் சித்தீக் (ரலி)

அறியாமை காலத்தில் ....
அல்லாஹ்வின் தூது தன்னை ..
அறிவித்த நாளன்றே ...
நன் நபி (ஸல் )நாதருக்கு
நட்பு கரம் நீட்டியவர் தான்
நல்லார் அபூபக்கர் சித்தீக் (ரலி)அவர்கள்
நபி தூதை பறை சாட்டும்
நாட்களிலெல்லாம் நபி(ஸல்)பட்ட
 கஷ்டங்கள்
சொல்லென்னா துயரங்கள் ..
எழுத்திலும் அடங்காது
ஏட்டிலும் அடங்காது ...

ஒரு நாள் நபிகளாரின்
 நபித்துவத்தை
ஒப்பில்லா 
இஸ்லாத்தின் கொள்கைகளை
அபூபக்கர் (ரலி ) அவர்கள்
மக்கத்து மக்களிடம்
 இஸ்லாத்தின்
மகத்துவத்தை மாண்புடனே ..
சபை தன்னில் எடுத்து வைத்தார் ..
சினம் கொண்ட மக்கவினர் ..
சிறு நரி கூட்டமாக 
சித்தீக் (ரலி )அவர்களை
அடித்தனர்,அதனால் 
துடித்தனர் -
அடி தாங்கா
அபூபக்கர் (ரலி)நிலை குலைந்து
மயக்கமுற்று தரை சாய்ந்தார் ..
குணத்திலோ  பெரியவராம்
 செல்வததில் சிறந்தவராம்
அபூபக்கர் ரலி எனும் தோழர் ...
கொள்கைகள் வேறென்றாலும் 
கோத்திரத்தில்
ஒன்றாகக்கூடி வந்த மக்கள்
தன குல செல்வரவர் மற்றோர்கள் தாக்குவதா
தன குல பெருமை போய் விடும் என்பதாலே
கோத்திரத்தார் ஓடிவந்து ......
அபூபக்கர் (ரலி) அவரை அள்ளிச்சென்று
மருந்திட்டார் அவர் கூட்டம் 
மயக்கமது தெளிந்ததுமே
என் தோழர் எங்கே என்றார் ...
நபி நாதர் நலம் தானே ...
நலமதனை அறிந்த பின்னர் ,
நான் குடிப்பேன் மிடறு நீரும் ..
அபூபக்கர் ரலி கோத்திரத்தார் பதறி சென்று
 நபிகளாரின்
நலமதனை தேடிசென்று 
அறிந்து வந்து ..
அபூபக்கர் (ரலி ) அவர்களிடம் சொன்னதுமே ..
நீரருந்தி புத்துயிர் பெற்றார் அபூபக்கர் (ரலி ) அவர்கள்

இவரைப் போல் 
இந்தப் பாருலகம் 
கண்டதுண்டா?
இல்லை 
கேட்டதுண்டா?

எங்கள் உயிரே போனாலும்
எங்கள் உடைமையே இழந்தாலும்
இழப்போமே - ஆனால் 
எங்கள் உயிரினும் மேலான 
அண்ணல் நபிகளின் 
மேலே ஒரு தூசி பட சகியோம்


இதுதான் அந்த 
உத்தமர்களின் 
மொத்த வரலாறு........

அதிலும் தலையானவர் 
நம் அபூபக்கர் ரலி எனும்
முமீன்களின் முதல் தலைவர்.


(இன்ஷா அல்லாஹ் இன்னும் வேர் விடும் ......)

அதிரை சித்திக் 
 

No comments:

Post a Comment