Tuesday, April 20, 2010

சிறப்புக் கட்டுரை!தமிழக அரசே,உமர் தம்பிக்கு உரிய அங்கீகாரம் கொடு!!!

தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஓரிருவரிகொண்ட மென்பொருள் நிரழிகளை இலட்சக்கணக்காண ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் பல மென்பொருள் நிரழிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டுக்கு வைத்தவர் திரு.உமர் தம்பி அவர்கள்.

விண்டோஸ் 98 பயனர்கள் தமிழிணைய தளங்களை எவ்வித சிரமமுமின்றி கணினியில் பார்வையிடவும், யூனிகோட் ஒருங்குறியில் தட்டச்சவும் உமர் தம்பி உருவாக்கிய 'தேனீ' வகை எழுத்துருக்கள் மற்றும் நிரழிகள் இன்றும் பல தமிழ்தளங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் எழுத்துறுக்கள் (Theenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அவற்றிற்குண்டான கிரடிட்டோ எதிர்பாராது சேவையாற்றியவர்.

கணினித் தமிழ் தளங்களான சங்கமம், தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி திரட்டியான தமிழ்மணம், எழில்நிலா மற்றும் அதிரை.காமிலும் பல்சுவை கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுதப்பழகுவோம் HTML, யுனிகோடும் இயங்கு எழுத்துருவும், யுனிகோடும் தமிழ் இணையமும், யுனிகோடின் பன்முகங்கள்-RSS ஓடை-ஒரு அறிமுகம்,தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு மற்றும் பல கணினித் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நான்காம் இணையத் தமிழுக்காகச்செய்த தமிழ்ச்சேவை மகத்தானது. இ-கலப்பை தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்களில் உமர்தம்பியும் ஒருவர்.

சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் (INFITT) சார்பில் நடந்த மாநாட்டில் 'உமர்தம்பி அரங்கு' என்று பெயரிட்டிருந்ததாக தமிழூற்று மாஹிர் தெரிவித்திருந்தார்.

தமிழா,அன்புடன்,அதிரை வெப் கம்யூனிடி மற்றும் பல குழுமங்களிலிலும் உமர்தம்பி அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.

மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் என்பது தமிழ் கணிமை பயனர்களின் அவா!

தமிழக முதல்வரும், உலகதமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுவினரும் உரிய நேரத்தில் இதைச் செய்வார்களா?

Monday, April 12, 2010

யுனிகோட் உமர் தம்பி மாமா ............

"சிறு வயதிலிருந்து இஸ்லாமிய பற்று, ஒற்றுமையை வழியுறுத்துவதில் அதிக ஆர்வம், இன்னும் நம் சமுதாயத்தை நிறைய திருத்த வேண்டியிருக்குதே என்ற நீண்ட ஏக்கத்துடன் அனைத்து இயக்கத்தவர்கள் செய்யும் நல்ல காரியங்களை மட்டும் எந்த கருத்து வேறுபாடுமில்லாமல் ஒற்றுமை நோக்கத்தில் பங்கு கொள்வதில், பாராட்டுவதில் ஆருவம் செலுத்துகிறேன். நம் சமுதாயம் எப்போது ஒற்றுமையாகும் என்ற ஏக்கம் கொண்ட கேள்வி சிறு வயதிலிருந்து ஒவ்வொரு நாளும் என் மனதில் வருகிறது."

"யூனிகோட் உமர்தம்பி அவர்கள் என் தாயாருடன் பிறந்தவர்கள், எங்கள் யூனிகோட் உமர்தம்பி மாமாவை நல்ல விசையங்களை பற்றி எழுதும் தமிழ் உலகுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும், அவர்கள் நினைவாக என் சார்பாக ஒரு வலைப் பூவை வைத்திருக்கிறேன். http://thaj77deen.blogspot.com/

படிப்பு முதுகலை பட்டம் (MBA Marketing), சாகும் வரை ஹலான முறையில் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செய்யும் வேலையிலும், செயலிலும் அல்லாஹ்வுக்கு பயந்து கவணமாக இருந்து வருகிறேன். அல்லாஹ் தான் கடைசி வரைக்கும் பாதுகாக்க வேண்டும்."

"சினிமாக்கள், டீவி சீரியல்கள், சிகரேட், குடிபோதை, விபச்சாரம், வட்டி, ஸிர்க், இஸ்லாம் எதிர்ப்பு கருத்துக்கள், இஸ்லாத்தில் குழப்பம் ஏற்படுத்துவது, மாற்று கருத்து என்ற போர்வையில் கண்டதை உளறுவது மற்றும் பல தடுக்கப்பட்ட பாவங்கள் இவை அனைத்துக்கும் அடிமையானவர்களுக்கு தகுந்த முறையில் இஸ்லாமிய அடிப்படையில் எனக்கு தெரிந்தவரை பதிலளிப்பது, முடிந்தால் எதிர்த்து பகிரங்கமாக குரல் கொடுப்பது, முடிந்தால் வீதிக்கு வந்து போராடுவது."

"இஸ்லாமிய ஒற்றுமையை எப்படியாவது ஏற்படுத்த வேண்டும் என்ற நீண்டகால குறிக்கோளுடன் அனைத்து சகோதரர்களுடன் பழகி வருகிறேன். "

மேற்கண்ட சிறு குறிப்புடன் நம்மிடையே அறிமுகமாகிறார் சகோதரர் தாஜுதீன்.இன்றைய இளைஞர்கள் இவரிடம் பாடம் படிக்க வேண்டியுள்ளது நிறைய உள்ளது.எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்,எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்,என்ன செய்தாவது பணம் பண்ணினா சரிதான் என்ற மனோபாவம் நிறைந்துள்ள இத்தருணத்தில்,ஹலாலைப் பேணி,ஹராமைப் புறந்தள்ளி இஸ்லாத்தின் உன்னத கொள்கைகளே லட்சியம் என வாழத்துடிக்கும் இந்த சகோதரரின் இத்தளத்தை http://thaj77deen.blogspot.com/ இன்று அறிந்து கொள்வதில் மிக்க மகிழ்வு கொள்கிறது.

தன் பிளாக்கின் பெயராக தன் தாய் மாமா,தமிழுக்கு யுனிகோடு முறையை தந்த யுனிகோடு உமர்தம்பி அவர்களின் பெயரை சூட்டியுள்ளார்.

தன் ஒவ்வொரு கட்டுரையிலும் சினிமாவுக்கு எதிரான - ஆபாச பாடல்களுக்கு எதிரான அவர் போக்கு - சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறை வெளிப்படுகிறது.புதிதாக எழுதியுள்ள 'உணவு விடுதியில் காலை உணவு சாப்பிடும்போது.....'
என்ற கட்டுரையில் தாய்,தந்தை,சகோதரிகளின் வாழ்வு - அவர்களின் முன்னேற்றம் பற்றியுள்ள அந்த பாசம்,தியாகியாக எத்தனையோ அண்ணன்கள்,தம்பிகள் உலாவருவதை நிதர்சனமாய் காணமுடிகிறது.

இப்படி சமுதாய சிந்தனை - வாஞ்சை நிரம்பி எழுதும் இந்த http://thaj77deen.blogspot.com/  தளத்தை நாமும் பார்த்து,படிப்பினை பெறுவோமே!
பீஸ் ட்ரைன் குழுமத்தில் ஒருவராக இணைந்தமைக்கு இத்தருணத்தில் வாழ்த்துக்களும்,நன்றிகளும் என சொல்லி.......
இனி அடுத்த புதிய செய்திகள்,பிளாக் தகவலோடு சந்திப்போமே இன்ஷா அல்லாஹ்.