Tuesday, July 3, 2012

உயிரின் வேர்கள் -4


இறையின் நேசத்திற்கு 
பிறகு ..
இவர் நேசமே எனக்குண்டு 
என்று
அபூபக்கர் (ரலி )அவர்கள் பக்கம்
நம் நபி (ஸல் )பகர்ந்தார்கள் 

இஸ்லாத்தின் பிரச்சாரம் ...
துவங்கிய 
காலமதில்..
இன்னல்கள் பல ஏற்று 
ஏந்தல் நபி
வழி சென்றார் ..
நன்மை செய்வதில்
 நபி தோழர்களுக்குள் 
செல்வத்தை இழந்தாலும்
 நன்மை பெற
முயலும் நபி தோழர்கள் 
எல்லா சஹாபிகளும்
வியக்கும் வண்ணம் 
நன்மைகள் பல செய்து
முதன்மையாய்
 வந்து நிற்பார் ..
அபூபக்கர் ரலி எனும் தோழர் ...

மக்கத்து காபிர்கள் ...
நபிகளாரின் உயிருக்கு ...
உலை வைக்க 
நினைத்ததுமே ...
மதீனா மண்ணிற்கு ஹிஜ்ரத் எனும்
இடம் பெயர்வு நிகழ்ந்த பொழுது
நபிகளாரின் நிழலாக ..
உடன் சென்றார் 
உத்தம நபி தோழரவர்

கவுர் எனும் குகை தங்கி ..
காத்தமுநபியுடன் சென்றவரும்
அபூபக்கர் (ரலி ) அவர்களே


குறைவில்லா செல்வமதை பெற்றிருந்த
பெருமகனார் 
பூமான் நபி (ஸல் ) அவர்களோடு
மதினாவிற்கு சென்ற பொழுது ...
ஈமான் எனும் செல்வத்தை மட்டுமே
உள்ளத்தில் எடுத்து சென்றார் ..

நபி (ஸல் )சொன்ன வார்த்தைக்கு
ஆம் என்ற பதில் மட்டும் ..
அபூபக்கர் (ரலி ) வாழ்வு தன்னில்
வந்ததுதான் சரித்திரம் ..

உயிரையும் உடமையையும்
காத்திடவே நாம் நினைப்போம் ..
உயிரையும் உடமையையும் ..
அல்லாஹ்வின் தூதருக்காக 
உதறி செல்ல ..
நினைத்த தோழர்கள் 
அவர்களே நம் 
உயிரின் வேர்கள் ..

(இன்ஷா அல்லாஹ் தியாகங்கள் தொடரும் )

அதிரை சித்திக் 

2 comments:

  1. சகோ. அதிரை சித்திக் அவர்களே,

    பதிவு...! எளிய வடிவில் உள்ளது ! தொடர்ந்து எழுதுங்கள்.....கண்டிப்பாக என் பங்கு அதில் இருக்கும் ஒரு வாசகனாய் !

    அபூபக்கர் சித்திக்(ரலி) அவர்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய அதே எளிமையில் ஆட்சி முறையை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நம்மூர் அரசியல்வாதிகள் இவர்களின் எளிமையை கடைபிடிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

    குறிப்பு : பதிவில் அபூபக்கர் (ரலி) என்று உள்ளது “சித்திக்” என்ற அவர்களின் முழுப்பெயரையும் சகோ. சித்திக் அவர்கள் சேர்த்துப் பதிய வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி சகோ .நிஜாம் ...

    இன்ஷாஅல்லாஹ் வரும் பதிவுகளில்

    உமர் (ரலி ) உதுமான் (ரலி)அலி (ரலி)அவர்களை

    வாழ்க்கை வரலாறு தொடரலாம் என உள்ளேன்

    தங்களின் உதவி வராற்று புத்தக ரீதியாக தேவை படலாம் ..

    உதுவுவீர்களா ..இத்தொடரை எழுத தூண்டு கோலாக இருந்த

    அர .அல.அவர்களுக்கு நன்றி சொல்லணும் ..

    எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ....!

    ReplyDelete