1)
ஆற்றல் மிக்கோ னாற்றற் றானே
ஆற்று நீரும்; அள்ளி நீயும்
போற்றி நன்றாய்ப் பேண்.
2)
கடவுளி னருளினால் கடலிலே உயிரினம்;
படகிலே வலையுடன் பயணமாம் முயற்சியால்
நடக்குமே வணிகமும் நலம்
3)
கிணற்றுநீரும் பெருகுவதும் கருணையா ளனருட்டானே
உணர்ந்துநீயும் முயல்கின்றா யுனதுவாளி கயிற்றினாலே
குணங்களிலே விடாமுயற்சி குழைத்து.
4)
கதிரவனொளி கடலுறவினால் கருமேகமாய் உருவாகுதல்
கதியமைத்திடும் பரம்பொருளருள்; கருணையாளனை மறவாமலே
துதித்துதினமும் முயற்சிகளிலேத் தொடர்.
5)
தூணின்றி நிற்கின்ற தூக்கிய வானத்தை
வீணின்றி தந்தவனை வீணாக நிந்திக்கும்
வீணர்கள் காண விய்ப்பு.
வாய்ப்பாக வாழ்வை வழங்கு மவனைத்தான்
வாயுடன் நாக்கும் வழங்கு மவனைத்தான்
வாயாலேத் தூற்றும் வியப்பு.
இல்லாமை மூலம்நாம்: இல்லை அவனன்றி
இல்லை அவனென்று எப்படித்தான் சொல்கின்றனர்
வில்லைப்போல் நின்றேன் வியந்து.
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை)
அபுதபி(தொழிற்சாலை)
என் வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir. blogspot.com/
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
அலை பேசி: 056-7822844
/
No comments:
Post a Comment