Thursday, June 28, 2012

சங்கையுள்ள ரமலான் - கவிதை


கள்ள மனம் இல்லா ...!
வெள்ளை மனம் உள்ள ..
நல்லவர்கள் போற்றும் ..
உன்னதமானதொரு சங்கையுள்ள மாதம் ..
*************
பஞ்சமில்லா ஊரில் ...
பசித்திருக்கும் மாதம் ..
பசிஎனும் கொடுமை
பணக்காரன் அறிய
வல்ல இறை வகுத்தளித்த மாதம்
*******************
வாதங்கள் செய்தால் ..
வைத்திருக்கேன் நோன்பு என்று
தவிர்க்க சொன்ன நபி (ஸல் )போற்றும் மாதம்
பேதங்கள் பேசாது திரு மறை வேதம் ஓதும் மாதம்
*******************
ஒன்றுக்கு பத்தென்று
பல மடங்கு நன்மைகள்
குவிக்க வாய்ப்பு தரும் நல்லதொரு மாதம்
பேரொளியாம் அல்லாஹ்வின்
திருமறை நமக்கு வந்திறங்கிய நல்லதொரு மாதம்
*******************
ஆயிரம் மாதங்களைவிட ..
சிறந்த இரவாம் லைலதுல் கதிரிரவை
தாங்கி வரும் தங்கமென மிளிரும் மாதம்
*******************
முழு நாளும் உழைத்தாலும்
ஒரு நூறை சேமிக்க முடியாமல்
தள்ளாடும் முமினான ஏழைக்கு
சில நூறை கொடுத்து சிறப்பிக்கும்
நல்ல மாதம் ....
*********************
சில்லறையை எண்ணிய கைகள்
கரன்சிகளை காணும் ஏழைக்கு
கண்ணியம் தரும் மாதம் ..
******************
ஜக்காத் எனும் நான்காம் கடமையை
நன்றே தெரிந்த நம்மவர் ...
நம்மையை பத்தாய் பெருக்கி பெற்றிட
நல தருமம் செய்ய தூண்டிடும் நர்மாதம்
**********
ஏழையின் சிரிப்பு ..
பணக்காரனின் பசி வாட்டம் ..
சிறுவர்கள் நோன்பிருந்து ..ஆசையாய்
பண்டங்கள் பலவைத்து நோன்பு திறந்து மகிழும்
மங்கள நிகழ்வு மகிமையான மாதம் ..
*******************
ரமளானின் வருகைக்கு ..
ஷபானிலே வரவேற்க
காத்திருந்த நபி (ஸல் )அவர்கள்அன்பு பெற்ற மாதம்
*****************
பள்ளிகளில் அமல்
பளிச்சென தெரியும் ..
இரவில் தராவிஹ் தொழுகை
பகலில் பசித்திருந்து தவம்
ஒரு வருட தவ உணர்வு ஒரு மாதத்தில்
மகிழ்வுகளை அள்ளி தரும் புண்ணிய மாதம்
*****************
மாதம் அது மணித்துளியாய் கரைந்து போக
பெருநாள்;அன்று புத்தாடை உடுத்தி
குதூகலமாய் கொண்டாடி மகிழ்ந்து
இன்பமாய் கொண்டாடினாலும்
மறுநாள் ரமலான் பிரிந்த சோகம்
நம்மை தொற்றிக்கொள்ளும்
மறு பிறை காண காத்திருக்க
*************

மறு பிறை காண
வான் நோக்கும் நம் கூட்டம்
வானே புன்னகைக்கும்
வளைந்த ஒளிக்கீற்றாய்
அதுதான் முதல் பிறை ..
************
ரமலான் வந்ததும் மறு குதூகலம்
ஏழையின் சிரிப்புடன் ரமளானின் துவக்கம் .....
தொடரும் இன்பங்கள் ..கருகும் துன்பங்கள்
து ஆக்கள் ,கபூலாகும் தருணம்
தயாராகுங்கள் ..பாவம் போக்கி நன்மை சேர்ப்போம் ..!

அதிரை சித்திக்

2 comments:

  1. பலே...பலே......

    வாழ்த்துகள் சகோ. அதிரை சித்திக் அவர்களுக்கு,

    அருமையான கவிதை......!

    ரமலானே வரவேற்கும் கவிதை.....!!

    நல்ல அமல் செய்யத் தூண்டும் கவிதை !!!

    ஜக்காத்’தை வாரி வழங்கச் சொல்லும் கவிதை !!!!

    பாவங்களை விரட்டச் சொல்லும் கவிதை !!!!!

    அனைவருக்கும் வாழ்த்தை தெரிவிக்கும் கவிதை !!!!!!

    ReplyDelete
  2. செந்தமிழும் நாப்பழக்கம் சித்திக்கின் சொற்பழக்கம்
    தந்துவிழும் பாக்களாய்த் தான்

    அமலால் நிறையும் அருமைப் புனித
    ரமலான் வருகை ரசித்து

    ReplyDelete