Saturday, March 20, 2010

வயிற்றுக்கு உணவு,??? வாங்க,ஜலீலாகிட்டே கேட்போம்!

என் பெயர் ஜலீலா, சென்னையில் பிறந்து வளர்ந்து, இப்போது துபாயில் வசிக்கிறேன். அன்பான‌ க‌ண‌வ‌ன், பாசமான இர‌ண்டு ஆண் குழ‌ந்தைக‌ள்.

எனக்கு தெரிந்த விஷியங்களை பெண்களுக்கான பயனுள்ள டிப்ஸ்கள்,குழந்தை வளர்பு,சமையல், மற்றும் தையற்கலை ,என்னிடம் உள்ள (நான் சேகரித்து வைத்துள்ள)முத்தான தூஆக்களை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

மற்றும் பிரபல வலைதளங்கள் அருசுவை.காம் மில் சமையல் குறிப்புகள், தமிழ்குடும்பம்.காம் மில் டிப்ஸ்கள், சமையல் குறிப்புகள்,குழந்தை வளர்பு கடந்த நான்கு வருடங்களாக கொடுத்து வருகிறேன், சில குறிப்புகள் சமையலறை.காம் மிலும் கொடுத்துள்ளேன்.

நான் கொடுக்கும் ஓவ்வோரு டிப்ஸ்க‌ளும் நேரில் க‌ண்ட‌ அனுப‌வ‌ங்க‌ள்.
அதே போல் குழ‌ந்தை வள‌ர்பும் எல்லாம் என் அனுப‌வ‌ங்க‌ள் ம‌ற்றும் நேரில் க‌ண்ட‌வை.

ச‌மைய‌ல் குறிப்பு கொடுக்க‌ கார‌ண‌ம், வெளிநாட்டில் திரும‌ண‌ம் ஆகி செல்லும் ப‌ல‌ பெண்க‌ள் ச‌ரியாக‌ ச‌மைக்க‌ தெரியாம‌ல், க‌ண‌வ‌ன் ம‌னைவி பெரும் ச‌ண்டைக்குள்ளாகி, பெண்க‌ளுக்கு ம‌ன‌வேத‌னை அடைகிறார்க‌ள், அவ‌ர்க‌ளுக்கு உத‌வும் வ‌ண்ண‌ம் என் குறிப்புக‌ளை போட்டு வ‌ருகிறேன்.

நாம் இம்ம‌ண்ணில் பிறந்து விட்டோம்.அப்படியே அன்றாட வேலைகளை முடித்து கொண்டு திறமைகள் நம்முடன் புதைந்து போகாமல் மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவனும் என்ற எண்ணத்தில் எனக்கு தெரிந்த ப‌திவுக‌ளை வ‌ழ‌ங்கிக்கொண்டிருக்கிறேன்.

இப்படிக்கு
ஜலீலா பானு
துபாய்.

உண்மையிலேயே,இந்த சகோதரியின் ஒவ்வொரு கட்டுரையும் மிக ஆழமான விஷயங்களில் கூட - எல்லாருக்கும் எளிதில் புரியும் வண்ணம் எழுதக்கூடியவர்.அவர்களின் ஒவ்வொரு சமையல் குறிப்பையும் பார்த்து - பெண்கள் மட்டுமல்ல,ஆண்களும் சமையல் கற்றுக் கொள்ளலாம்,அந்த அளவுக்கு எளிமைப்படுத்தி எழுதி வருகிறார்.

சரி வயிற்றுக்கு உணவு??? அதையும் விடவில்லை அந்த சகோதரி.இறைவன் படைத்த அந்த உயிருக்கு முத்தான துவாக்கள் என பிளாக் தொடங்கி-இறைவனை எப்படிப் புகழ வேண்டும் என நமக்கு சொல்லித்தருகிறார்.இறைவனின் நினைப்பில்லா இதயம் செத்துவிட்ட இதயம்.இறைவனை நினைந்து அவனைப் போற்றும் இதயமே உயிருள்ளது,ஜீவனுள்ளது.அதற்கு தன் எழுத்துகள் மூலம் தொண்டு செய்யும் நற்பண்பு எல்லா பெண்களுக்கும் மட்டுமல்ல,ஆண்களுக்கும் அந்த உணர்வு வேண்டும்.

சிலர் பிளாக் வைத்திருக்கிறேன் பேர்வழி என்று நையாண்டி-கேலி-கேளிக்கைகளில் தங்கள் கவனத்தை சிதற விட்டுவிட்டு,சுவனத்தை - இறைவன் நமக்கு பரிசாக தரும் அந்த இன்பத்தை இழந்துவிடுகின்றனர்.ஆனால்,நம்(என்)சகோதரி ஜலீலா அவர்கள் அதற்கெல்லாம் வேறுபட்டு அறுசுவை உணவின் ருசியையும்,இறை நினைப்பின் அவசியத்தையும் உணர்ந்து,செயல்படுத்தி வருகின்றார்.

இதுபோதாதென்று,டிப்சுக்கேன்றே ஒரு பிளாக்,அதில் பல பயனுள்ள தகவல்கள்,குறிப்புக்களை தந்து உதவுகிறார்.
அதேபோன்று குழந்தை வளர்ப்பு பற்றிய அடிப்படை தகவல் கொண்ட அவர்களுடைய பிளாக் மூலம் புதிதாக பிள்ளை பெறப்போகும் பெண்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

(அக்கா,நீங்க ஆண்களுக்கேன்றே ஒரு பிளாக் ஆரம்பிச்சு,அதுல ஆண்கள் பிரயோசனப்படுற மாதிரி எழுதுங்களேன்.)

மொத்தத்துல,எது நல்லதோ,அதை மக்களுக்கு நம்மால் உதவி செய்யவேண்டும் என எண்ணி-தன் எழுத்து மூலம் தொண்டு செய்து வரும் சகோதரியும்,அவர் கணவர்,பிள்ளைகள்,மற்றும் குடும்ப உறுப்பினர் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளுக்கும்அன்புக்கும் பாத்தியதை உடையவர்களாக ஆகி,இம்மையிலும்,மறுமையிலும் வெற்றி பெற நாம் துவா செய்வோமாக.

வாழ்த்துக்கள் ஆல் இன் ஆல் ஜலீலா அக்கா!

சகோதரியின் முகவரிகள்

http://allinalljaleela.blogspot.com/

http://jaleela-duwa.blogspot.com/

http://tips-jaleela.blogspot.com/

http://kidsfood-jaleela.blogspot.com/

17 comments:

  1. சதேகமே இல்லை ஆல் இன் ஆல் தான்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ஜலீலா அக்கா.நல்ல சிறப்பான தேர்வு.

    ReplyDelete
  3. என்னையும் சிறந்த பிளாக்காக தேர்ந்தெடுத்து அறுமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி
    என்னை பற்றி நிறைய புகழ்ந்து இருக்கீங்க,நான் சாத‌ரான‌மாக‌ போட்ட‌ ப‌திவுக‌ள் தான். இப்ப‌டி ம‌லை போல் குவிந்துள்ள‌து.இன்னும் என்னால் முடிந்த, தெரிந்த நலல் விஷியங்களை க‌ண்டிப்பாக‌ தொட‌ர்வேன்.என‌க்காக‌ தூஆ செய்த‌த‌ற்கு ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்.

    எல்லா புகழும் இறைவனுக்கே.

    ReplyDelete
  4. மிக்க‌ நன்றி பாத்திமா ஜொஹ்ரா.

    ReplyDelete
  5. ஜெய்லானி என் பதிவுகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. வாழ்த்துகள் ஜலீலா, இன்னும் நிறைய பதிவுகள் கொடுங்க

    ReplyDelete
  7. ஜலீலாக்கா தி கிரேட்...

    ReplyDelete
  8. சிலர் பிளாக் வைத்திருக்கிறேன் பேர்வழி என்று நையாண்டி-கேலி-கேளிக்கைகளில் தங்கள் கவனத்தை சிதற விட்டுவிட்டு,சுவனத்தை - இறைவன் நமக்கு பரிசாக தரும் அந்த இன்பத்தை இழந்துவிடுகின்றனர்.ஆனால்,நம்(என்)சகோதரி ஜலீலா அவர்கள் அதற்கெல்லாம் வேறுபட்டு அறுசுவை உணவின் ருசியையும்,இறை நினைப்பின் அவசியத்தையும் உணர்ந்து,செயல்படுத்தி வருகின்றார்.

    ..........உண்மை. வாழ்த்துக்கள், ஜலீலா அக்கா.
    உங்களுக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. அகா ஜலில்லான்னா சும்மாவா, அதான் என் பதிவுகளில் அடிக்கடி அவர் பெயரைக் குறிப்பிடுக்கின்றேன். சகோதரியின் வெற்றிப் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள். அறிமுகத்திற்கு மிக்க நன்றி பேனா முனை.

    ReplyDelete
  10. பேனா முனை ரொம்ப சார்ப்.....

    வாழ்துக்கள்

    ReplyDelete
  11. நண்பரே நல்லா செலக்ட் பண்ணியிருக்கீங்க, ஜலீலா அக்கா இன்னும் பல திறமைகள் வாழ்ந்தவர், அக்கா தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள், அவரை சிறந்த பதிவராக செலக்ட் செய்த நீங்களும் தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரியவும்

    ReplyDelete
  12. ஜலீலா,இப்படி பாராட்டுக்களை பார்க்கும் பொழுது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது.பேனா முனை உங்களூக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. கற்பித்தலும் (அனுபவமாக இருந்தாலும் சரி) கற்றல்தான்

    ஆல் இன் ஆல் சகோ ஜலீலாவின் சேவை இன்னும் தேவை

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் ஜலீலா அக்கா.நல்ல சிறப்பான தேர்வு.



    பேனா முனை உங்களூக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. சகோ.ஜமால்.


    நாஞ்சில் பிரதாப்
    சுதாகர் சார்
    ம‌லர்

    ச‌சிகுமார்

    ஆசியா
    அபு அஃப்ஸ‌ர்

    பிர‌பா

    வாழ்த்து தெரிவித்த‌ அனைத்து ந‌ல்ல‌ உள்ள‌ங்க‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி.
    க‌ண்டிப்பாக‌ என‌க்கு தெரிந்த‌ ந‌ல்ல‌ விஷிய‌ங்க‌ளை டிப்ஸ் , ப‌திவுக‌ளாக‌ ப‌கிர்ந்து கொள்வேன்.
    பேனா முனைக்கு மிக்க‌ ந‌ன்றி//

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் ஜலீலா அக்கா.
    அருமையான தேர்வு நீங்க.
    இன்னும் பல புகழ்பெற

    எல்லாவல்ல இறைவன் நல்லருள் பாளிப்பானாக!

    ReplyDelete
  17. என்னுடைய வலை முகவரி,
    http://allinalljaleela.blogspot.com/இருத்து
    http://samaiyalattakaasam.blogspot.com/இப்படி மாறி விட்டது.
    முடிந்தால் பதிவில் சேர்த்து கொள்ளுங்கள்.

    ReplyDelete