[2:127] இப்ராஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அஸ்திவாரத்தை உயர்த்தியபொழுது "எங்களுடைய இறைவனே! (உனக்காக நாங்கள் செய்த இப்பணியை) எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (எங்களுடைய இந்த பிரார்த்தனையைச்) செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கின்றாய்.
[2:128] எங்கள் இறைவனே! எங்களிருவரையும் உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும், எங்களுடைய சந்ததியிலிருந்தும் ஒரு கூட்டத்தினரை உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும் ஆக்கிவைப்பாயாக! ("ஹஜ்ஜு" காலத்தில்) நாங்கள் புரிய வேண்டிய வணக்கங்களையும் அறிவிப்பாயாக! (நாங்கள் தவறிழைத்து விட்டாலும்) எங்களை நீ மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றாய்.

No comments:
Post a Comment