Saturday, January 30, 2010

உள்ளம் கவர்ந்தது,அதனால் வென்றது.





இந்த தளத்தை, மற்ற சிறந்த தளங்களை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் ஒரு தளமாக ஆக்க வேண்டும் எனும் அவா எழுந்தவுடன்,எனக்கு முதலாய் பட்டது சகோதரி சுமஜ்லா அவர்களின் ஹஜ் விளக்கம் எனும் http://hajvilakkam.blogspot.com/ இத்தளம்தான்.மாஷா அல்லாஹ்,மிக அருமை.

ஊரிலிருந்து புறப்பட்டு,சென்னை வந்து,அங்கிருந்து கிளம்பி மக்கா,மதினா புனித தலங்களை தரிசித்து முடித்து திரும்பி ஊர் வந்து சேரும்வரை,ஒவ்வொரு செய்திகளையும் அழகாக அலசியுள்ளார்.தெளிந்த நடையும்,எளிமையான மொழியும்,விளக்கும் பாங்கும் மிக அருமை.இதை நீங்கள் படிக்கும்போதே கண்டு கொள்வீர்கள்.

அவருக்கு,அவர் வாசகர்கள் வழங்கிய சில பின்னூட்டத்தை காண்போம்.



Mrs. Hussain said...

சுஹைனா,

வாழ்த்துக்கள்!! அழகாக எழுதுகிறீர்கள். ஹஜ் விளக்கத்திற்காக பிளாக் தொடங்கி, இப்ப தமிழகம் முழுதும் தெரிந்த ஒரு எழுத்தாளராகி விட்டீர்கள்!! புகழனைத்தும் இறைவனுக்கே!!

41 பகுதிகளையும் தவறாமல் படித்து வந்தேன். விளக்கமாக எழுதுகிறீர்கள். வியத்தற்க ஞாபகசக்தியும் இருக்கிறது!!

தொடர்ந்து எழுதிவர இறைவன் அருள்புரிவானாக!!

Biruntha said...

வணக்கம் சுஹைனா,
பிளைட்டில் இருந்தபடியே அந்த அற்புதக் காட்சிகளை அழகாக படம் எடுத்துள்ளீர்கள். ஏதோ சொர்க்கத்தில் இருப்பது போல் ஒரு உணர்வு தென்படும். நான் எப்போதும் பிளைட்டில் பயணம் செய்யும்போதும் இக்காட்சிகளை ரசிப்பேன். ஏதோ ஒரு இனம் புரியாத களிப்பு மனதில் ஒட்டிக் கொள்ளும். இரவு நேரத்திலும் விமானத்திலிருந்து கீழ் நோக்கி மின்விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும் ஊரைக் காண கண் கோடி வேண்டும்.

இது வரை காலமும் நீங்கள் உங்கள் ஹஜ் பயணத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் ஞாபகத்தில் வைத்து என்னைப் போன்ற (ஹஜ் பயணத்தைப் பற்றி சரி வரத் தெரியாதவர்களுக்கும்), மற்றும் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கும், ஹஜ் பயணத்தைப் பற்றி இதுவரை காலமும் சிந்தித்திராதவர்களை அங்கு போகத் தூண்டுமளவிற்கும் அங்குள்ள அனைத்துத் தேவையான விடயங்களையும், எந்தெந்த விடயத்தில் முன்னேற்பாடாக, அவதானமாகச் செயல் படவேண்டும் என்று அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அழகான எளிய எழுத்து நடையில் புரிய வைத்ததற்கு மிக்க நன்றி. எல்லாம் வல்ல இறை அருளால் உங்கள் திறமைகள் மேன்மேலும் வளரவும் அது அனைவரையும் சென்றடையவும் வாழ்த்துகின்றேன்.

அன்புடன் பிருந்தா

Nataraj said...

ஈரோடு சங்கமம் பதிவு வாயிலாக ஹஜ் பதிவுக்கு வந்தேன். மிகுந்த ஈர்ப்புகுள்ளாகி இரவு 9 மணிக்கு ஆரம்பித்தவன் 42 அத்தியாயத்தையும் முடிக்கும் போது மணி இப்போது 1.30. மிக மிக அருமையாக நெகிழ்ச்சியாக எழுதப்பட்ட பதிவுகள்.
நான் எந்த அளவு தொடரில், அல்லாவின் பால் ஈர்க்கப்பட்டேன் என்பதற்கு ஒரு உதாரணம். நான் கமெண்டை கிளிக் பண்ண அங்கு எனக்கு முன்னாடி கடைசியாக நடராஜ் (nats ) என்ற நண்பர் கமெண்ட் குடுத்து இருக்க, நான் ஒரு நிமிடம் குழம்பி விட்டேன். என்னடா, நாம் ஏற்கனவே இந்த பதிவுக்கு வந்து இருக்கிறோமா, இல்லை அல்லாவின் விளையாட்டா இது (நீங்கள் வேறு ஒரு முஸ்லிமாக இல்லா விட்டாலும் அந்த நண்பரின் ஈடுபாட்டை பாராட்டிநீர்களா) , எனக்கு குழப்பம் ஆகிவிட்டது. ஏனென்றால் நானும் நடராஜ் தான். என்னையும் Nats என்று தான் அழைப்பார்கள்.

வெறுமனே tourist guide போன்று இல்லாமல் உங்கள் இறை அனுபவங்கள், சிறு பிணக்குகள், உங்கள் பிள்ளை பாசம், உங்கள் மகனின் innocence எல்லாம் சேர்த்து எழுதிய விதம் மிக மிக அருமை. இன்ஷா அல்லாஹ் !

Jaleela said...

சுகைனா ரொம்ப வே ஆச்சரியம் அந்த டெஷனிலும் நீஙக் போட்டோ எடுத்தது.
வாழ்த்துக்கள் ஹஜ் போய் வந்தது ஒன்று விடாமல் மறக்காமல் ஞாபகம வைத்து போட்டு இருக்கிறீர்கள்.
எங்களுக்கும் தூஆ செய்யுங்கள் ஹஜ் பாக்கியம் கூடிய விரைவில் கிடைக்க.
கடைசி நேரத்திலும் நபிகள் நாயகத்தை புழந்து உடனே கவிதையை பாடலை அமைத்து இருக்கிறீர்கள், நானும் வாசித்துக் கொண்டேன்.

அவர்களின் அந்த ஆழ்ந்த ஈடுபாட்டுக்கு இந்த சில கமெண்ட்கள் ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

மஸ்ஜித் நபவி கண்ட நம் ஆசிரியை இவ்வாறு பாடுகிறார்:

ஆலயம் முழுதும் ஸலவாத் ஒலி கேட்டேன்
அருள் மொழி கூறும் நபிகளின் மொழி கேட்டேன்!

என் தலைவர் அவரே அவரே!
எனக் கூறும் மொழி கேட்டேன்!!
இறை தூதர் அவரே அவரே!
என பாடும் ஒலி கேட்டேன்!!

(ஆலயம்)

இளகும் மாலை பொழுதினிலே - என்
நபிகளைக் கண்டேன் நேரினிலே!
தேடிய இன்பம் கிடைத்திடவே,
இரு விழி நீரில் கலங்கி நின்றேன் (2)

(என்)

பிரியும் நேரம் நெருங்கிடவே,
கருணைத் தேவர் நினைவினிலே
யாரும் அறியாப் பொழுதினிலே,
அழுதிட கண்ணீர் விழிகளிலே!!

(என்)


அவர்களைப்போலவே நாமும் அழுகிறோம்.

இப்படி நிறைய இருக்கிறது அத்தளத்தில்,நீங்களும் வாசியுங்களேன்.

இனி ஆசிரியை அவர்கள் பற்றிய சிறு குறிப்பு,

நான் எழுதுவதைவிட,அவர்களே கூறுவதை கேளுங்கள்.

“எல்லா வளங்களையும் நலங்களையும் குறைவறத் தந்த என்னிறைவனுக்கே எல்லாப் புகழும்!

ஈரோட்டில், பாரம்பரியமிக்க இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து இஸ்லாமிய முறைப்படி வளர்க்கப்பட்டேன். என் தந்தையார் அல்ஹாஜ் ஆர்.ஜே.எம். முகமது இஸ்பஹானி, தாயார் ராபியா இஸ்பஹானி. சுபஹானி, சுரைஜ் என்று இளைய சகோதரர்கள் இருவர்.

சிறு வயதில் திருமணம் நடந்ததால், பள்ளிப் படிப்பைத் தாண்ட முடியவில்லை! என் மகள் பிறந்த பிறகு, என் படிப்பை அஞ்சல் வழியில் தொடர்ந்து, பி.ஏ ஆங்கில இலக்கியமும், எம்.காமும் படித்தேன். ஆசிரியை ஆக வேண்டும் என்ற ஆசையில் தற்சமயம் சாரா மகளிர் கல்லூரியில் பி.எட் ம், அஞ்சலில் எம்.ஏ. ஆங்கில இலக்கியமும் படித்து வருகிறேன்.

சிறு வயது முதல் எனக்கு கலைத்தாகம் மிக உண்டு. பள்ளி நாட்களில் கவிதைகள், கதைகள் எழுதுவதோடு ஓவியமும் நன்றாக வரைவேன். அந்நாட்களில் நான் எழுதிய ஆங்கில மற்றும் தமிழ் கவிதைகளை பள்ளியில் ஒரு புத்தகமாகத் தொகுத்துத் தந்தார்கள்.

என்னுடைய எல்லாவித முன்னேற்றத்துக்கும் எனக்கு அமைந்த இனிய கணவர் அல்ஹாஜ். கே.எம். மஜ்ஹர் அலி அவர்களும் ஒரு தந்தையைப் போல வழிகாட்டும் மாமனார் அல்ஹாஜ் ஏ.ஓ.கே. முஹமது இப்ராஹிம் அவர்களும் தான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

என்னருமை செல்வி லாஃபிரா பாத்திமா தற்சமயம் ஒன்பதாம் வகுப்புப் படித்து வருகிறார். மகன் லாமின் முஹமது இரண்டாம் வகுப்புப் படித்து வருகிறார்கள். மகள் என்னைப் போலவே கவிதைகள், கதைகள் எழுதுவதில் எனக்கு மகிழ்ச்சி!

என் திறமைகளை உரமிட்டு வளர்த்தது நான் படித்த கலைமகள் கல்வி நிலையம் என்னும் ஈரோட்டிலேயே சிறப்பு வாய்ந்த பள்ளி தான் காரணமாகும்.“

சுருக்கமாக சொன்னால்,அல்ஹம்துலில்லாஹ்.எல்லாப் புகழும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே.
சுஹைனா என்ற சுமஜ்லா இன்னும் நிறைய எழுதி,சமூக தொண்டு புரியவேண்டும் என ஏக இறைவனை போற்றி வணங்குகிறேன்.



இன்ஷா அல்லாஹ்,அடுத்த வாரம்-இன்னொரு பிளாக் பற்றி அறிந்துகொள்வோம்.

Thursday, January 28, 2010

இது புதுசு

அனைத்து சொந்தங்களே,நம் அனைவர் மீதும் ஏகனின் சாந்தியும்,சமாதானமும் நிலவட்டுமாக.

இது புதுசு,
அதுனால
இதுல வரபோற விஷயங்களும் புதுசு,இன்ஷா அல்லாஹ்.
கட்டுரைகளுடன் நல்ல நல்ல பிலாகுகளை தேர்ந்தெடுத்து,
அதை அறிமுகப்படுத்தி-அதுல வர்ரதுல நல்லது-ஹெட்டது
எல்லாத்தையும் அலசி,சரி சரி பெரிய பில்ட் அப் வேனான்றியலா,ஓகே.இன்ஷா அல்லாஹ்-பொறவு தொடரலாம்.