மூமீன் ஒப்பீடு )

ஆத்து நீரை ...சேத்து வச்ச
அழகான குளம் தன்னில்
அல்லியும் தாமரையும் ..
தாடக மானம் காத்து நிக்க
அல்லியும் தாமரையும் 
அழகாக பூத்து நிக்க
அதை பாத்த கொக்கு வந்து காத்து நிக்க .
கருடனும் வச்ச கண்ணு மாறாம
குலத்தினையே சுற்றி வர ..

என்ன காரணம் ...!
கெண்ட மீனும் கெளுத்தி மீனும் ..
வளர்ந்து வரும் தருணமல்லவா??

தாய் மீன்... குஞ்சு மீனிடம் ..சொல்லியது
நான் பெற்ற செல்ல மக்கா ...
மேல் மட்டம் போகாதே ..
மேல் மட்டம் போவதினால்
மீன் கொத்தி எனும் பாவி அவன்
உன்னை கொத்திக்கொண்டு 
போய் விடுவான்

கரை பக்கம் போகாதே ..
கொக்கு வந்து கொத்திபுடும்
கருடனின் பார்வைக்கு 
கெலுத்தினு பார்க்காது
கெண்டைனு பார்க்காது .
அடித்து அது சென்று விடும்

அமைதியான நேரமதில் ..
தூண்டில் தனில் இரயதனை தான் கோத்து
காத்து நிக்கான் குறவணவன்
கரை தன்னில் தான் மக்கா ..என்று
தாய் மீனும் தான் சொல்ல .
.
இளைய மீன் இலக்காரமாய்
போ அம்மா ...உனக்கு
பயமே வாழ்வாயிற்று ..
துள்ளி திரியும் வயசு இது
கரையோரம் காத்து வாங்கி .வரேன்
.மேகமது கருத்திருக்கா
போய் நானும் பாத்து வாரேன் ..

பாவி மக்கா ..போகாதே
பார்க்க நல்லா பருத்திருக்கே
தூண்டில் போட்டு புடிதிடுவான்
தூய எண்ணையில் வருதிடுவான்
உண்டு விட்டு முள்  தன்னை
நாய்க்கு இறையாகிடுவான்

பாவி மீன் குஞ்சும் ..
பெற்றோர் சொல் கேக்காது .
கரையோரம் .ஒதுங்க .
கழுகு கொக்குக்கு இரையாகி
மீதமுள்ள மீன்களுமே தூண்டில் முள் இறைபிடித்து
குறவன் கை சேர்ந்ததுவே 
நெஞ்சம் பதைததுவே 

இது மீன்களின் நிலை ...

மனித குலத்தில் 

முமீனான மங்கையர் இடத்தில
மதிமயக்கம் கூடுதலாகி 
 இஸ்லாத்தின் மாண்பு உணராத 
மங்கையர் சிலர் 

அந்த சதிகாரர்களின்
தூண்டிலில் மாட்டியும்
காவிப்பருந்தின் 
சதிப்பிடியில் 
சிக்கி - சின்னாபின்னமாகும் 
அவலம் - இப்படி 
வழி மாறி,படி தாண்டி 
செல்வதனால்
கேடு கெட்ட வாழ்க்கை இங்கும்
நரக வாழ்க்கை அங்கும் என்று 
ஐயோ!இரண்டையும் தொலைத்துவிட்டு
நெருப்பில் வீழ்ந்து 
மடிவதுதான் மிச்சம்,
கவலையே சொச்சம்.

மீன் போனால் குளத்திற்கு நஷ்டமில்ல
தனக்கே நஷ்டம்
அறிவீரோ பெண் இனமே!!!


அதிரை சித்தீக்