Monday, July 16, 2012

முகவரி இல்லா முகம்




(கள்ள காதலில் அகப்பட்டு சீரழிந்த 
அபலையின் கண்ணீர் கவிதை ..).!

கவலைகள் பல அடுக்கி ..
செந்நீரை கண்ணீராய் பொழியும்
இளம்மங்கை
குழந்தைக்கு பால் கொடுப்பாள் ...
பசி தீர்ந்து தாயை பார்த்து 
புன்னகைக்கும் ...
**************************
வறுமையின் வலி தன்னை ..
மனதில் அவள் ஏற்றியதால் ..
மனதறியா பாலகனிடம் ...
மனம் விட்டு பேசுகிறாள் இதோ ...!
***********************
ஓரிரவு வாழ்க்கையிலே ..
வந்த நீ பாலகனே ...!
வறியோர் வீட்டில் வந்து வசமாக
மாட்டி கொண்டாய்...!
**************************
வம்பிழுத்து வசைபாட ..
உனக்கு ஒரு நாதி இல்ல...
வாஞ்சையாக கொஞ்சிடவும் ..
வளமும் இங்கே கொஞ்சம் இல்லே ..
**********************
உன் வயிறு நிறைஞ்சிருச்சு ..
என் வயிறு காஞ்சிருச்சு ..
பசிஎடுத்தா பாலகனே ..
பொறுமை  காத்திடுவாய் ..
*************************
நான் பசிச்சா யாரிடமோ ..
கத்தி நானும் கேட்டிடுவேன் ..
உடல் பசி எனக்கு வந்து 
பல கால மாயாச்சி
உனை தந்த கள்வனுமே 
ஊர்மறைந்து நாளாச்சி ..
*****************
அதி காலை எழுந்ததுமே ..!
ஏன் புலர்ந்தே என கேட்பேன் .!
நாட்கள் நகர்ந்து விட்டால் ..
நாலு காசு வேணுமடா ..
**********************
நாலு வீட்டில் நானும் போயி ..
பத்து பாத்திரம் கழுவிடணும் ..
வீட்டு கார எசமானி பேச்சு கேட்டு ..
வீடு வந்து அழுதிடனும் ...
*******************
அதுக்குள்ளே நீ அழுது..
என் அழுகையை அடக்கி புட்டே ..
என் தங்கம் அழுகாதே ...
நாளை நானும் அழுகமாட்டேன்
*********************
இன்று மட்டும் அழுதுகிறேன் '...
அதுவரை நீ கரையாதிரு ..
கண்ணே நீ அழுகாதே ..நான்
கொஞ்சம் அழுதுகிறேன் ..
*****************
என் அம்மாவிடம் சொல்லி அழ
எனக்கு அருகதையும் இல்லையடா ..
சொல் பேச்சு கேட்காம நான்
சோரம் தான் போய் விட்டேன் ..
****************************
நீ அழுதா நானிருக்கேன் ..
நான் அழுதா யாரிருக்கா ..
திசை மாறி சென்றதாலே ...
வசை பொழியுது ,,ஊர் சனங்க .
******************
இசுலாத்தின் கொள்கை தனை ..
இயல்பாக்கி கொண்டாலே ..
வளமான வாழ்வு தன்னும் ..
தனங்கத்தே வந்து சேரும் ..
**********************
கூடாத பழக்கமெல்லாம் ..
கூட்டி நாமும் வந்துபுட்டா
ஈருலக வாழ்க்கையும்தான்
நாசமாக போய் விடுமே ...
*****************
இவ்வுலக வாழ்க்கையிலே
தடம் மாறி போகாம ..
தக்க பலன் பெற்றிடவே
இசுலாம் மார்க்கத்தை பேணிடனும்...
**************************
இசுலாம் சொன்ன சொல்லை
நகைப்பாக கருதாதே ...
உடம்புக்கு புர்காவை போட்டு விடு
உள்ளத்திற்கும் புர்காவை போட்டு விடு
என்று நானும் எனக்கு 
நானே சொல்லிக்கிறேன் ..
******************************
சோரம் போனதினால் ..
சொந்தமாய் நீ வந்துப்புட்டே ..
வளந்து நீயும் சமத்தாக
என் சொல்லை கேள் மகவே ..
***********************
உனக்கென்று ஒரு கொள்கை
ஒரு போதும் எடுக்காதே ..
ஊரில் நல்ல பிள்ளை என்று
பேரு நீயும் வாங்கிடனும் ...

வழுக்கி யாரும் விழ வேண்டாம் ..ஆனா
வளமாக வாழ்ந்திடுங்க ...
இப்போ எனக்கு முகவரியும் வந்தாச்சு ..
என்மகனின் வளத்தாலே ...
நான் அழுது நாளாச்சு ...
புர்காவை உள்ளத்துக்கு முதலில் போடுங்க
உடம்புக்கும் சேர்த்து தாங்க ....

அதிரை சித்தீக்

No comments:

Post a Comment