Wednesday, July 11, 2012

பேனா முனை:

..
உயிரின் வேர்கள் -10
உமர் (ரலி)அவர்களின் வாழ்க்கை வரலாறு

என்னருமை சகோதரியே ..
எனை நீயும் பொருத்தருள்வாய் ..
உள்ளத்தில் கொண்ட இருள் ...
என் அறியாமை மதியிழந்து உன்னை
தாக்கிவிட்டேனே ..எனை பொறுப்பாய்
என்றுரைத்தார் உமர் அவர்களும் ..

இஸ்லாத்தின் மான்புதனை ...
இரு வரியில் உள்ளடக்கி உள்ள
கலிமா தனை ஏற்றால்தான் ..
இனி உன்னுடன் உறவுண்டு ..
இனி உனக்கு இங்கு வேலையில்லை ...
என உமரின் சகோதரி கூறி சென்றார் ..

என்னவோ ஓதினாயே..மீண்டும் ஓதுவாயா?
சகோதரனின் மாற்றமதனை கண்ட சகோதரி
மீண்டும் திரு மறையை ஓதினார்கள் ..
உமரவரின் உள்ளமது வெள்ளையாக போனதுவே
கறைபடிந்த கருவெல்லாம் கற்பூரமாய் கரைந்ததுவே ..

உச்சி முதல் உள்ளங்கால் வரை ..
மெய் மறந்து போனவராய் ...
எப்படி பட்ட மார்கமதை ..
இறைவன் அல்லாஹ் தந்துள்ளான்
அவன் தூதராக முகம்மது (ஸல்)மூலம்
தந்துள்ளான் .உடனே முகம்மது (ஸல் )
அவர்களை பார்க்க வேண்டும் ,
சகாதா கலிமா கூற வேண்டும் என்றுரைத்தார் ..

மறைத்து நின்ற கப்பாப் (ரலி ) அவர்கள்
நான் அழைத்து செல்கிறேன் என்று முன்வந்தார்
உமரின் மைத்துனர் சயீத் அவர்களும்
முகம் மலர்ந்து முன் வந்தார்கள் ..

விரைத்து நின்ற பனிப்பாறை ..
உருகியதை பார்த்துள்ளோம் ..
வாளெடுத்து விரைத்து வந்த ..
வீரர் உமர் உள்ளமது உருகியதை காண்கின்றோம் ...
(தொடரும்..)

No comments:

Post a Comment