Saturday, June 30, 2012

உயிரின் வேர்கள் -2


அறியாமையை போக்கி .....
நன் நெறியை நோக்கி ...
இஸ்லாத்தின் வெற்றி ..
வள்ளல் நபி முகம்மது (ஸல் ) அவர்கள் ..
மறைவு செய்தி கேட்ட உமர் ரலி  
வாள் எடுத்தார்.
மறைந்தார் என சொன்னவனை 
கொய்திடுவேன் என
சிம்மமென கர்ஜித்தார் ,,
சினம் வேண்டாம் உமர் ரலியே 
சினம் ஏன் என உணரு ...
சினத்துக்கும்
சிந்தனைக்கும் 
அறிவான இஸ்லாத்தில்
அழகான இடமுண்டு 
என 
சித்தீக் (ரலி ) குளிர செய்தார்
ஒவ்வொரு ஆன்மாவும் ...
மரணத்தை ருசித்தே ஆக வேண்டும் 
என்று
குர் ஆனில் கூறப்பட்டதை 
நாம் நன்கறிவோம் ..
வள்ளல் நபி வாக்குப்படி 
நாம் நடப்போம் 
வாரும் மென்றார் ..

சினம் தணித்தார் 
உமர் ரலியும் 
மூத்தோர் சொல் கேட்பதுவும்
 அறிவார்ந்த நற்பண்பு
வீரத்தின் விளைநிலமாம் உமர் (ரலி ) அவர்கள்
விவேகத்தின் 
உரைவிடமும்தான்
முகம்மது (ஸல் ) அவர்கள் 
உற்ற தோழர்களின்
உறுதுணை நன்குணர்ந்து
தான் செய்த பணிதம்மை
தோழர்கள் தொடவார்கள் என 
தனக்கு இறை அழைப்பை
என்றோ அவர் சொல்லிருந்தார் ,
தூதர் சொன்ன வாக்கு தன்னை 
அற்புதமாய்
செய்திடவே 
வள்ளல் நபி ஆசானிடம்
செம்மையாக கற்றிருந்த சஹாபாக்கள் 
நபி
விட்டு சென்ற பணிதம்மை செய்திடவே 
அற்புதமாய்
பயிற்சி தன்னை வள்ளல் நபி (ஸல் ) வாழ்நாளில்
கொடுத்திருந்தார் ..
தான் விட்ட பணிதன்னை 
தடையில்லாமல்
சென்றிடவே செம்மையாக வகுத்திருந்தார்
செம்மல் நபி (ஸல் ) நாதருமே
வெற்றிடமாய் இருந்ததில்லை ..வள்ளல் நபி (ஸல்) சேவையுமே
வகை சூடி வாழ்ந்த வேந்தர்
ஆனாலும்,
வேந்தராக சொகுசு காணவில்லை
அவ்வழியே நபி தோழர்களும் நடந்து வந்த சரித்திரமே
உயிரின் வேர்கள் 
மாந்தரே கேளீரோ!

விண்ணகம் அழைத்தான் 
இறைவன்
சென்று வந்தேன்,
தொழுகை கொண்டு வந்தேன்
அங்கு நபி ஆதம் அலை முதற்கொண்டு
பல நபிமார்கள் கண்டு வந்தேன்,
இன்னும் சொர்க்கம்,நரகம் 
நிலவும் காட்சிகளை 
பார்த்து வந்தேன்
என்றுரைத்தார்கள் அண்ணல்
மாற்றாரோ மறுதலிக்க
"விண்ணகம் சென்றேன் என 
அண்ணலா சொன்னார்கள்
அப்படியென்றால் "ஆம்"உண்மைதான்
என அடித்து சொன்னார்கள்
அபூபக்கர் ரலியுமே.

சத்தியம் சொன்ன 
உத்தமர் அவரின் 
பெயரின் பின்னே 
சித்திக் எனும்
செல்லப் பெயரும் 
சேர்ந்து கொண்டது...
அந்த உத்தமரின் 
சரிதம் கேளீரோ
மாந்தரே-வாருங்கள் 


தொடரும் இன்ஷா அல்லாஹ் 

அதிரை சித்திக்  

Friday, June 29, 2012

உயிரின் வேர்கள்..........உன்னத சஹாபாக்களின் உளமார்ந்த வரலாறு,கவிதை வடிவில்

உயிரின் வேர்கள் ....!
இஸ்லாம் எனும் விருட்சம் ..
வளர்ந்த விதம் ,பெரும் உழைப்பு ..,
பாலையில் பசுமைக்கு போராடி ..
வென்ற வரலாறு 

உயிரின் வேர்கள் ..
******
விதை போட்டு வளர்க்க ..
நல்ல நிலம் வேண்டும் 

நீர் வேண்டும் ..
தோண்டி பார்க்கும் நிலத்தில் ..
பா
றை யில்லா குணம் வேண்டும் ..

பாறையிலும் பாலையிலும் ..,
பசுமை புரட்சி செய்த வரலாறு
உயிரின் வேர்கள் ..,
******************
பல தெய்வ கொள்கைகள் ..

பெண்ணுக்கு நிந்தனை
சிசு கொலை ,

குல பெருமை பேசி - பழிவாங்கும்
மடந்தை நிறைந்த காலத்தில்
மனிதம் தழைக்க 

உழைத்த வரலாறு
உயிரின் வேர்கள் .,
*******************
இறைவன் எனக்களித்தான் 

இறைதூது எனும்பதவி ...
என்றுரைத்தார் எம்நபி (ஸல்)...

உண்மையே சொன்னீர்கள்
என நவின்ற நற் தோழர் அபூபக்கர் (ரலி )போன்றோரின்
வரலாறே உயிரின் வேர்கள் ..
****************************
செல்வத்தை துறந்து ..,
உத்தமராம் நபி நாதர் (ஸல் )வழிவந்த
வடித்த செந்நீர் ஓட்டம்தான்
உயிரின் வேர்கள்
************************
சிறு நிலத்தில் தான் நினைக்கும்
செடி கொடிகள் வளர்க்கதான் ...
விவசாயி முயற்சிப்பான் 

கடும் மழையும்
கொடும் வெயிலும் 

தாக்காமல் போராடும் விவசாயி

செடிகொடிகள் வாடினால் 

அவன் வாடி போவான் .
இந்நிலத்தில் பயிர் செய்து 

நமகேதும் பலனில்லை
இடம்பெயர்ந்து நாடோடியாய்

 நல்நிலம் தேடிடுவான் ..
புயல் 
மழை  என்றாலும் ..

கடு கோடை என்றாலும் ..
பயிர் தன்னை உயிராகிய வரலாறு ..
உயிரின் வேர்கள்
*********************
வினோதங்கள் யாதென்றால் ..
விவசாயி தியாகத்தில் விளைபயிரும்
பங்கெடுத்த வரலாறுதான் ..
உயிரின் வேர்கள் ..
*********************
வன் காபிர்  வதைத்த போதெல்லாம்...
வாடாமல் வல்ல இறை பெயர்சொல்லி
உயிர்தாங்கி ..

இஸ்லாத்திற்கு உயிர் கொடுத்த வரலாறு
உயிரின் வேர்கள் ..  
*****************
 உணவளிக்காத போதும் ...
உறவுகளை 
முறித்துக் கொண்ட போதும்

உயிருக்கு உலை வைத்த போதும் ..
கொள்கை குணம் மாறாமல் -
உண்மைநபி (ஸல் )நாதர்
வழிவந்த நபி தோழர் சஹாபாக்களின் வரலாறே
உயிரின் வேர்கள் ...,



அதிரை சித்திக் 




Thursday, June 28, 2012

சங்கையுள்ள ரமலான் - கவிதை


கள்ள மனம் இல்லா ...!
வெள்ளை மனம் உள்ள ..
நல்லவர்கள் போற்றும் ..
உன்னதமானதொரு சங்கையுள்ள மாதம் ..
*************
பஞ்சமில்லா ஊரில் ...
பசித்திருக்கும் மாதம் ..
பசிஎனும் கொடுமை
பணக்காரன் அறிய
வல்ல இறை வகுத்தளித்த மாதம்
*******************
வாதங்கள் செய்தால் ..
வைத்திருக்கேன் நோன்பு என்று
தவிர்க்க சொன்ன நபி (ஸல் )போற்றும் மாதம்
பேதங்கள் பேசாது திரு மறை வேதம் ஓதும் மாதம்
*******************
ஒன்றுக்கு பத்தென்று
பல மடங்கு நன்மைகள்
குவிக்க வாய்ப்பு தரும் நல்லதொரு மாதம்
பேரொளியாம் அல்லாஹ்வின்
திருமறை நமக்கு வந்திறங்கிய நல்லதொரு மாதம்
*******************
ஆயிரம் மாதங்களைவிட ..
சிறந்த இரவாம் லைலதுல் கதிரிரவை
தாங்கி வரும் தங்கமென மிளிரும் மாதம்
*******************
முழு நாளும் உழைத்தாலும்
ஒரு நூறை சேமிக்க முடியாமல்
தள்ளாடும் முமினான ஏழைக்கு
சில நூறை கொடுத்து சிறப்பிக்கும்
நல்ல மாதம் ....
*********************
சில்லறையை எண்ணிய கைகள்
கரன்சிகளை காணும் ஏழைக்கு
கண்ணியம் தரும் மாதம் ..
******************
ஜக்காத் எனும் நான்காம் கடமையை
நன்றே தெரிந்த நம்மவர் ...
நம்மையை பத்தாய் பெருக்கி பெற்றிட
நல தருமம் செய்ய தூண்டிடும் நர்மாதம்
**********
ஏழையின் சிரிப்பு ..
பணக்காரனின் பசி வாட்டம் ..
சிறுவர்கள் நோன்பிருந்து ..ஆசையாய்
பண்டங்கள் பலவைத்து நோன்பு திறந்து மகிழும்
மங்கள நிகழ்வு மகிமையான மாதம் ..
*******************
ரமளானின் வருகைக்கு ..
ஷபானிலே வரவேற்க
காத்திருந்த நபி (ஸல் )அவர்கள்அன்பு பெற்ற மாதம்
*****************
பள்ளிகளில் அமல்
பளிச்சென தெரியும் ..
இரவில் தராவிஹ் தொழுகை
பகலில் பசித்திருந்து தவம்
ஒரு வருட தவ உணர்வு ஒரு மாதத்தில்
மகிழ்வுகளை அள்ளி தரும் புண்ணிய மாதம்
*****************
மாதம் அது மணித்துளியாய் கரைந்து போக
பெருநாள்;அன்று புத்தாடை உடுத்தி
குதூகலமாய் கொண்டாடி மகிழ்ந்து
இன்பமாய் கொண்டாடினாலும்
மறுநாள் ரமலான் பிரிந்த சோகம்
நம்மை தொற்றிக்கொள்ளும்
மறு பிறை காண காத்திருக்க
*************

மறு பிறை காண
வான் நோக்கும் நம் கூட்டம்
வானே புன்னகைக்கும்
வளைந்த ஒளிக்கீற்றாய்
அதுதான் முதல் பிறை ..
************
ரமலான் வந்ததும் மறு குதூகலம்
ஏழையின் சிரிப்புடன் ரமளானின் துவக்கம் .....
தொடரும் இன்பங்கள் ..கருகும் துன்பங்கள்
து ஆக்கள் ,கபூலாகும் தருணம்
தயாராகுங்கள் ..பாவம் போக்கி நன்மை சேர்ப்போம் ..!

அதிரை சித்திக்

Thursday, June 21, 2012

இந்துக்களைக் காபிர்கள் என்று இஸ்லாம் ஏசுகிறது.


முஸ்லிமல்லாதவர்களைப் பற்றித் திருக்குர்ஆன் கூறும் போது காபிர்கள் என்றும் முஷ்ரிக்குகள் என்றும் கூறப்பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் இதையும் தவறாக விமர்சனம் செய்கிறார்கள். அதாவது இந்துக்களைக் காபிர்கள் என்று திருக்குர்ஆன் ஏசுகிறது என்பதும் இவர்களின் விமர்சனமாகும்

முஸ்லிமல்லாதவர்களைப் பற்றி காபிர்கள் என்று இஸ்லாம் கூறுவது உண்மை தான்இந்துக்களும் கூட இந்த அடிப்படையில் காபிர்கள் தாம் என்பது உண்மையே. ஆனால் காபிர்கள் என்றால் அது ஏசும் சொல் என்கிறார்களே அதில் தான் உண்மையில்லை.

காபிர் என்பதற்கு கிறுக்கன்பைத்தியக்காரன்முட்டாள் என்றெல்லாம் பொருள் இருந்தால் அதை ஏசுகின்ற சொல்லாகக் கருத முடியும்.அப்படியெல்லாம் அந்தச் சொல்லுக்குப் பொருள் இல்லை.

காபிர் என்ற அரபுச் சொல்லின் நேரடிப் பொருள் மறுப்பவர்ஏற்காதவர் என்பது தான்இஸ்லாத்தை ஏற்றவர்களை முஸ்லிம்கள் (ஏற்றவர்கள்)என்று கூறும் திருக்குர்ஆன் ஏற்காதவர்களை ஏற்காதவர்கள் (காபிர்கள்)எனக் கூறுகிறதுஏற்காதவர்களை ஏற்றவர்கள் என்று கூற முடியாது.ஏற்காதவர்கள் என்று தான் கூற முடியும்இதில் ஏசுவது ஒன்றுமே இல்லை.

இந்துக்களைப் பார்த்து உரை நிகழ்த்தும் போது முஸ்லிமல்லாத மக்களே என அழைத்தால் அதை ஏச்சாக யாரும் கருத மாட்டார்கள்இது போன்ற வார்த்தைப் பிரயோகமே காபிர் என்பது.

சில சமயங்களில் முஸ்லிமல்லாதவர்களில் ஒரு சாராரைக் கூறும் போது முஷ்ரிக்குகள் என்று குர்ஆன் கூறுகிறதுமுஷ்ரீக் என்றால் பல கடவுள்களை நம்புபவர்கள் என்பது பொருள்பல கடவுள்களை வழிபடும் மக்களைப் பற்றிக் குறிப்பிடும் போது இந்தச் சொல்லைத் திருக்குர்ஆன் பயன்படுத்துகிறதுபல கடவுள் நம்பிக்கையுடையவர்களை ஒரே ஒரு கடவுளை மட்டும் நம்பும் மக்கள் என்று கூற முடியுமாபல கடவுளை நம்பும் மக்கள் என்று கூற முடியுமாபல கடவுளை நம்பும் மக்கள் என்று தானே கூற முடியும்இது எப்படி ஏச்சாக ஆகும்!

இந்துக்களையோ இன்ன பிற மக்களையோ வசைச் சொற்களால் குர்ஆன் ஏசவில்லை என்பது தான் உண்மை.

10. ஜிஸ்யா வரி
பெரும்பாலான முஸ்லிம்களாலும்முஸ்லிமல்லாதவர்களாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட விஷயங்களில் ஜிஸ்யா வரி என்பதும் ஒன்றாகும்.

இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா எனும் வரி விதிக்கப்பட்டு வந்ததுஅவுரங்கசீப் போன்ற முகலாய மன்னர்கள் இத்தகைய வரியை இந்துக்களுக்கு மட்டும் விதித்தனர். என்று பரவலாக விமர்சனம் செய்யப்படுகிறதுஅரசாங்கத்தால் வெளியிடப்படும் பாடப் புத்தகங்களிலும் கூட இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.

இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாடுகளில் முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டு வந்ததும்அவ்வாறு விதிக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடுவதும் உண்மையேஅதில் உள்ள நியாயத்தையும் முஸ்லிமல்லாதவர்களுக்கு அது எவ்வளவு நன்மை பயக்கக் கூடியது என்பதையும் உணர்ந்தால் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டதாக முஸ்லிமல்லாதவர்கள் குறை கூற மாட்டார்கள்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்த வரி முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு இதில் இருந்து விலக்களிக்கப்பட்டதுபாரபட்சமாகவும்அநியாயமாகவும் தோன்றலாம்.உண்மையில் வரிவிதிப்பில் பாரபட்சம் ஏதும் காட்டப்படவில்லை.

ஒரு அரசாங்கம் தனது குடிக்களின் நலன்களைக் காக்கக் கடமைப்பட்டுள்ளதுதனது குடிமக்களில் வறியவர்களுக்கு உதவி செய்யும் கடமை அரசாங்கத்திற்கு இருக்கின்றதுஒருவரது உரிமையை இன்னொருவர் பறித்துவிடாமல் காப்பதற்காக காவலர்களை நியமித்து கண்காணிக்கும் கடமையும் அரசாங்கத்திற்கு இருக்கிறதுஅன்னியப் படையெடுப்பின் போது தனது குடிமக்களைக் காப்பதற்காக இராணுவத்தை அமைக்கும் கடமையும் அரசுக்கு இருக்கின்றதுபொருளாதாரமின்றிஇந்தக் கடமைகளை எந்த அரசும் செய்ய முடியாதுமக்களிடமிருந்து வரிவிதிப்பதன் மூலம் மட்டுமே அரசாங்கம் பொருள் திரட்ட முடியும்.

ஒரு இஸ்லாமிய ஆட்சியில் எவ்வாறு வரி விதிக்கப்படுகிறதுஇதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்முஸ்லிம்கள் மீது இஸ்லாம் ஜகாத் எனும் வரியைக் கடமையாக்கியுள்ளதுமுஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம்வெள்ளி மற்றும் கரன்சிகள்அவர்களிடமுள்ள வியாபாரப் பொருட்கள்ஆடுமாடுஒட்டகம் ஆகிய கால்நடைகள்அவர்கள் விளைவிக்கும் தானியங்கள்மற்றும் பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் அவர்கள் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

தங்கம்வெள்ளி மற்றும் கரன்சிகளில் இரண்டரை சதவீதமும்நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவீதமும்இயற்கையாக விளைவிக்கும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும்இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருவர் விரும்பினால் செய்யலாம்விரும்பாவிட்டால் தவிர்க்கலாம் என்ற அடிப்படையில் அமைந்த தர்மம் அல்ல இந்த ஜகாத்மாறாகஇஸ்லாமிய அரசால் கட்டாயமாகக் கணக்குப் பார்த்து வசூலிக்கப்பட வேண்டிய வரியாகும்ஜகாத் என்ற பெயரில் பெரும் தொகையை இஸ்லாமிய சமுதாயம் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.

ஏழைகள்பரம ஏழைகள்கடன்பட்டிருப்பவர்கள்அடிமைகள்,அறப்போருக்காக தங்களை அர்பணித்துக் கொண்ட இராணுவ வீரர்கள்,திக்கற்றோர் ஆகியோர் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும்சுருங்கச் சொன்னால்ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப்பட்டன.

மொத்த அரசாங்கமும்முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது அந்த நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்திக் கொண்டிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்கள் விஷயமாகக் கீழ்காணும் மூன்று வழிகளில் ஒன்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும். முஸ்லிமல்லாதவர்கள் மீது எந்த வரியும் விதிக்காமலிருப்பது.

முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஜகாத் வரி விதிப்பது. முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜகாத் அல்லாத வேறு வரி விதிப்பது. இதில் முதல் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை முதலில் அலசுவோம்.

முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தும் போது முஸ்லிமல்லாதவர்கள் எந்த வித வரியும் செலுத்தாமல் அரசாங்கத்தின் நன்மைகளைப் பெற்று வந்தால் வரி செலுத்துவோர் கூடுதலான உரிமையை இயல்பாகவே எதிர் பார்க்கும் நிலை ஏற்படும். வரி ஏதும் செலுத்தாமல் அரசாங்கத்தின் பயன்களை அவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் கேட்கும்.

முஸ்லிம் அல்லாதவர்கள் வரி ஏதும் செலுத்தாததால் அவர்களே கூட தங்கள் உரிமையைக் கேட்கத் தயங்குவர்மனோரீதியாக தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்று எண்ணத் துவங்குவர்.

ஒரு சமுதாயத்திடம் மட்டும் வரி வாங்கி இன்னொரு சமுதாயத்திடம் வரி வாங்காவிட்டால் இதில் அவமானம் வரி வாங்கப்படாதவர்களுக்கேவரி வாங்கப்படாதது சட்டப்படியாக அவர்களுக்கு உரிமை இல்லை என்பதற்கு அடையாளமாகும்ஆகஇந்த நிலையை நடைமுறைப்படுத்தும் போது இரு தரப்பிலும் எதிர்ப்பு கடுமையாகும்.

தங்களிடம் மட்டும் வரி வாங்கிவிட்டு மற்றவர்களுக்கு விலக்களிக்கப்படுவதை முஸ்லிம்களும் எதிர்ப்பார்கள்தங்களிடம் மட்டும் வரி  வாங்காததால் தங்களுக்குச் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படவில்லை எனக் கருதி முஸ்லிமல்லாதாரும் இதை எதிர்ப்பார்கள்எனவே முதல் வழி சாத்தியமாகாது.

இரண்டாம் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம். ஜகாத் என்பது ஒரு வரியாக இருந்தாலும்முஸ்லிம்களைப் பொறுத்தவரை தொழுகைநோன்பு போன்ற மதக் கடமையாகவும் ஜகாத் அமைந்துள்ளது.

இந்த ஜகாத் வரியை முஸ்லிமல்லாதவர்கள் மீது திணிக்கும் போது இன்னொரு மதச் சட்டம் தங்கள் மீது திணிக்கப்படுவதாக அவர்களுக்குத் தோன்றும்இஸ்லாமியர்கள் செய்ய வேண்டிய கடமைகள் வணக்கங்கள்யாவும் தங்கள் மீதும் கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படும்இது அவர்களுக்கு ஜீரணிக்க முடியாததாக அமைந்து விடும்இஸ்லாம்தன் மதச் சட்டங்களைப் பிற சமயத்தவர்கள் மீது திணித்தது என்ற குற்றச்சாட்டு எழும்.

முஸ்லிமல்லாதவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாக அமையும் என்பதால் அவர்கள் மீது ஜகாத் எனும் வரியை விதிக்க முடியாது. அப்படியே விதித்தாலும் அவர்களிடமிருந்து அதைப் பெற இயலாமல் போய் விடும் என்பது மற்றொரு விளைவாகும்.

ஜகாத் வரி என்பது அவரவர் சொத்துக்களை மதிப்பிட்டு வசூலிக்கப்பட வேண்டியதாகும்சம்பந்தப்பட்டவர்களும் சரியாகக் கணக்குக் காட்டி ஒத்துழைத்தால் மட்டுமே ஜகாத்தை முழுமையாக வசூலிக்க முடியும்.முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அது மதக் கடமையாகவும் உள்ளதால் இறைவனுக்கு அஞ்சி முறையாக அவர்கள் கணக்கு காட்ட முடியும்.

முஸ்லிமல்லாதவர்களைப் பொறுத்த வரை இது ஒரு வரியாக மட்டுமே கருதப்படும்இன்னொரு மதத்தின் கடமை என்பதால் அதில் அவர்கள் முழு ஒத்துழைப்பு தர மாட்டார்கள்இயன்றவரை தவறாகக் கணக்குக் காட்டி குறைவான வரி செலுத்தும் வழிகளையே தேடுவார்கள்இந்தக் காரணத்தினாலும் ஜகாத் என்ற வரியை இவர்கள் மீது விதிக்க முடியாது.வரி விதிக்காமலும் இருக்க முடியாதுமுஸ்லிம்களுக்கு விதிப்பது போன்ற வரியையும் அவர்கள் மீது விதிக்க முடியாது.இப்போது மூன்றாவது வழியை நடைமுறைப்படுத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஜகாத் என்ற வகையில்லாத புதிய வரியை அவர்கள் மீது விதிப்பதன் மூலம் இந்தத் தீய விளைவுகளைத் தவிர்க்க முடியும்இந்த அடிப்படையிலேயே ஜிஸ்யா எனும் வரி விதிக்கப்பட்டதுமுஸ்லிம்கள் ஜகாத் என்ற பெயரால் ஜிஸ்யாவை விட பலமடங்கு அதிகமாக வரி செலுத்தினர்பாரபட்சம் காட்டப்பட்டு பாதிப்புக்கு ஆளானார்கள் என்று சொல்வதென்றால் முஸ்லிம்கள் தான் பாதிப்புக்கு ஆளானார்களே தவிர முஸ்லிமல்லாதவர்கள் அல்லஇதைப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே ஜிஸ்யா வரி பற்றி தவறான விமர்சனம் செய்து வருகின்றனர்.


பேரரசுகள்சிற்றரசுகள் மீது கப்பம் விதிப்பதும்தான் கைப்பற்றிக் கொண்ட நாட்டு மக்கள் மீது அதிகப்படியான வரிகளைச் சுமத்துவதும் உலக வரலாற்றில் பரவலாக நடந்து வந்ததுஇந்த அக்கிரமத்தையெல்லாம் ஜீரணித்துக் கொள்பவர்கள் மிகவும் நியாயமான முறையில் விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியைக் குறை கூறுவதற்கு இஸ்லாத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்வு தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

ஜிஸ்யா வரி விதிக்கும் போது கூட இஸ்லாம் நடந்து கொண்ட முறை நாகரீகமானதாக இருந்துள்ளதுபெண்கள்சிறுவர்கள்உழைக்க முடியாத முதிய வயதினர்பைத்தியக்காரர்கள் ஆகியோருக்கு இந்த வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்ததுதிடகாத்திரமான ஆண்கள் மீது மட்டுமே இந்த வரி விதிக்கப்ட்டிருந்ததுஇவ்வாறு சலுகை காட்டுவது அவசியமில்லாதிருந்தும் இவ்வாறு சலுகை வழங்கப்பட்டது.

சகட்டு மேனிக்கு இந்த வரி விதிக்கப்படாமல் மக்களின் பொருளாதார வசதியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதுதனிநபர் வருவாய் அதிகமாக உள்ள சிரியா வாசிகள் மீது தலைக்கு ஆண்டுக்கு நான்கு தீனார்கள் எனவும் தனி நபர் வருவாய் குறைவாக உள்ள ஏமன் வாசிகளுக்கு தலைக்கு ஒரு தீனார் என்றும் நபியவர்களால் ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.

பத்து நாட்கள் ஆடு மேய்ப்பவர்களுக்கு ஒரு தீனார் கூலி கொடுக்கப்பட்டு வந்ததுஇதிலிருந்து தீனார் என்பது எவ்வளவு அற்பமான தொகை என்பதை அறிந்து கொள்ளலாம்இந்த ஒரு தீனார் என்பது மிக மிக சாதாரண ஏழைக் குடிமகன் இந்தியாவில் செலுத்தும் வரியை விட பலமடங்கு குறைவானதாகும்.

சொத்துவரிவிற்பனைவரிவருமானவரிசாலைவரிதண்ணீர் வரி,நுழைவு வரிவீட்டு வரி என்று நேரடியாகவும் பத்து பைசா தீப்பெட்டி முதல் பத்தாயிரம் ரூபாய் தொலைக்காட்சிப் பெட்டிவரை எதை வாங்கினாலும் மறை(முகமாகவும்இந்தியக் குடி மகன் இன்று வரி செலுத்துகிறான்இந்த வரியை விட பல மடங்கு குறைவானதே இஸ்லாம் விதித்த ஜிஸ்யா வரி.

செலுத்துவதற்கு எளிதான தொகையாகவும்செலுத்த இயலாதவர்களுக்கு விலக்களிக்கப்பட்டதாகவும் முஸ்லிம்கள் செலுத்தி வந்த வரியை விட மிகவும் குறைவானதாகவும் தான் இந்த ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.

அந்த அற்பமான வரியைச் செலுத்துவதன் மூலம் அதிகம் வரி செலுத்தும் முஸ்லிம்கள் பெற்று வந்த அத்தனை உரிமைகளையும் அவர்கள் பெற முடிந்ததுஅவர்களின் வழிபாட்டு உரிமைகள் காக்கப்பட்டனஅவர்களின் ஆலயங்கள் பாதுகாக்கப்பட்டனஅவர்களின் சொத்துரிமை பேணப்பட்டது.இது முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாமிய நாட்டில் பெற்று வந்த சலுகைகள்.அவர்களின் சலுகைக்கு வழி வகுத்த ஜிஸ்யா வரியைக் குறை கூறுவது எந்த வகையிலும் நியாயமாகாது.

இந்த இடத்தில் எழக் கூடிய ஒரு நியாயமான சந்தேகத்தையும் நாம் நீக்கி கொள்ள வேண்டும்.

முஸ்லிம்கள் மீது விதிக்கப்பட்ட ஜகாத் என்பது முஸ்லிம் செல்வந்தர்கள் மீதே விதிக்கப்பட்டு வந்ததுமுஸ்லிம் ஏழைகள் அந்த வரியைச் செலுத்தவில்லைஎந்த வரியும் செலுத்தாமல் முஸ்லிம்களில் பெரும்பாலோர் இருந்துள்ளார்களே இது என்ன நியாயம்என்ற என்பதே அந்த ஐயம். இரண்டு காரணங்களால் இந்தக் கேள்வி தவறாகும்.

நூறு முஸ்லிம்கள் இருக்கும் ஊரில் பத்துப் பேர் மட்டும் ஜகாத் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்நூறு பேர் சார்பாக பத்து வசதியானவர்கள் கொடுக்கும் ஜகாத் வரி நூறு முஸ்லிமல்லாதவர்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியை விட அதிகமாகும்.

முஸ்லிம்முஸ்லிமல்லாதார் என்ற அடிப்படையில் கேள்வி எழுப்பப்படுவதால் இந்த அடிப்படையிலேயே இதை அணுக வேண்டும். ஒரு லட்சம் முஸ்லிமல்லாதவர்கள் அனைவரும் செலுத்தும் ஜிஸ்யா வரியைவிட ஒரு இலட்சம் முஸ்லிம்களில் பத்தாயிரம் பேர் செலுத்தும் ஜகாத் வரி அதிகமாகும்.

அடுத்து ஏழை முஸ்லிம்கள் வரி விலக்கு பெறுவது போலவே முஸ்லிமல்லாத ஏழைகளும் கூட சலுகை பெற்றிருந்தார்கள்.முஸ்லிமல்லாத ஏழைகள் இஸ்லாமிய அரசு விதிக்கும் குறைந்த பட்ச ஜிஸ்யா செலுத்தக் கூட விலக்கு பெறுவார். ”எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான் என்று குர்ஆன் கூறுகிறது. எனவே ஜிஸ்வே வரியைக் குறை கூற நியாயம் ஏதும் இல்லை.நியாய உணர்வு படைத்த மாற்று மதத்தினர் இதைக் குறை கூற மாட்டார்கள். முஸ்லிமல்லாதவர்கள் மீது ஜிஸ்யா வரி விதித்ததன் மூலம் முஸ்லிமல்லாதவர்களை மதம் மாற்ற இஸ்லாம் முயன்றது என்ற குற்றச்சாட்டும் தவறானதே.

மிக மிக சொற்பமான இந்த வரியிலிருந்து தப்புவதற்காக பரம ஏழைகள்,பெண்கள்பைத்தியங்கள்சிறுவர்கள்முதியவர்கள் விலக்களிக்கப்பட்டு திடகாத்திரமானவர்கள் மீது மட்டுமே விதிக்கப்பட்ட இந்த வரியில் இருந்து தப்புவதற்காக தங்கள் மதத்தையே மாற்றிக் கொண்டார்கள் என்பதை எந்த அறிவுடையவனும் ஏற்க முடியாது.

ஒரு மதத்தின் மீது கொண்ட நம்பிக்கை (அந்த மதம் எவ்வளவு பலவீனமானதாக இருந்தாலும்சிறிய வரியிலிருந்து தப்புவதற்காக சிதறுண்டு விடும் என்று எவருமே கூற மாட்டார்கள்.

அவ்வாறு கூறுபவர்கள் அந்த மதத்தையும்அந்த மதத்தைச் சேர்ந்தவர்களையும் ஒரு சேர இழிவு செய்கிறார்கள் என்பதே அர்த்தமாகும்.

இதை விடக் கூடுதலாக முஸ்லிம்கள் வரி செலுத்திய நிலையில் இஸ்லாத்தில் சேருவதால் முஸ்லிமல்லாதவர்களுக்கு என்ன பொருளாதாரச் சலுகை கிடைத்து விடும்இதைச் சிந்தித்தால் இவ்வாறெல்லாம் அபத்தமாக உளற மாட்டார்கள்.

PJ

Wednesday, June 6, 2012

சோதிடனிடம் சென்று


யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் அவனது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்கப்படாது என்பது நபிமொழி.                                                                                                                                                               நூல் : முஸ்லிம் 4137

யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு  அருளப்பட்ட மார்க்கத்தை அவன் நிராகரித்து விட்டான் என்பதும் நபி மொழி :                                                                                             அஹ்மத் 9171

Tuesday, June 5, 2012

பத்துக்கு அடுத்து...


10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.
1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (ITI)
பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல் நிலை (+1,+2) படிப்புதான். அதை பற்றி முதலில் பார்ப்போம். 
I.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு : 
1. First Group எனப்படும் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவு : பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு. இந்த பிரிவில் படிப்பதன் மூலம், பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc...), சட்டம், ஆசிரியர் படிப்புகள்,  ஆராய்சி படிப்புகள் என பெரும்பாலான  துறைகளில் மேல் படிப்பு படிக்கலாம். அரசு துறை,  தனியார்துறை என பெரும்பாலான துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.   இந்த பிரிவில் படிப்பது மிக சிறந்தது. எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்பு உள்ள பிரிவு இதுதான், எனவேதான் இந்த பிரிவிற்க்கு அதிக போட்டி இருக்கும், மாணவர்கள் பெரும்பாலும் இந்த பிரிவில் படிக்க முயற்சி செய்யவும்.   குறிபிட்ட பள்ளிகளில் இந்த குரூப் கிடைக்காவிட்டால், இந்த குரூப் கிடைக்கும் பள்ளியில் சேருங்கள். 

2. கணிதம், வேதியில், இயற்பில், கணினி அறிவியல் பிரிவு : பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (மருத்துவம் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது).   மருத்துவ துறை தவிர்த்து மற்ற பெரும்பாலன துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. First Group கிடைக்காத மாணவர்கள் இந்த குரூபையாவது தேர்ந்தெடுக்கவும்.  அதிக வேலைவாய்ப்பு பெற்றுதரும் குரூப்பில் இதுவும் ஒன்று.

3. வேதியில், இயற்பில், தாவரவியல், விலங்கியல் பிரிவு : மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc...) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (பொறியியல் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது).  அதிகமாக மருத்துவம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது

4. Commerce, Accountancy, பொருளாதாரவியல் பிரிவு : B.Com, CA (Charted accountant ), M.Com  படிப்பதர்க்கான பிரிவு, அரசு வேலை, Accountancy துறையில்  நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளது. 

5. வரலாறு, பொருளாதாரவியல் : எதிர்காலதில் B.A. M.A படிக்கலாம். அரசு தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு, ஆசிரியர் பணிகள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன

6. Vocational  குரூப் :  தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவு, பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. 
II. பட்டய படிப்பு (டிப்ளோமா):
    இது 3 ஆண்டு படிப்பு. தொழில் நுட்பதுறைகள் , மருத்துவ துறைகள், கடல்சார் துறைகள், ஆசிரியர் படிப்புகள்  என பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன. தொழில் நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, civil  etc... போன்ற துறைகள் சிறந்த துறைகள்.  மேலும் பல சிறந்த பிரிவுகள் உள்ளன.  டிப்ளோமா படித்து மேற்கொண்டு பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம்.  பொறியியல் (B.E/B.Tech) படிக்க ஆர்வம் உள்ளவர்கள்  டிப்ளோமா படித்து பொறியியல் படிப்பது சிறந்ததல்ல (Not Advisable ).  12 ஆம் வகுப்பு முடித்து பொறியியல் படிக்கவும். டிப்ளோமா மட்டும் படிக்க விரும்புவர்கள் 10 -ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது.  
III. சான்றிதழ் படிப்பு (ITI):
   இது ஓராண்டு படிப்பு. Fitter welder, machinist , AC mechanic  போன்ற துறைகள் சிறந்த துறைகள். இன்னும் மருத்துவம் சார்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த பல்வேறு படிப்புகள் ITI-ல் உள்ளது. உடனடி வேலைவாய்பிற்க்கு ஏற்ற படிப்பு, ஆனால் அதிக சம்பளம் கிடைக்காது. 

10 - ஆம் வகுப்பு முடித்த பிறகு வேலை வாய்ப்பு (கோரிக்கை:- தயவு செய்து மாணவர்களை 10 -ஆம் வகுப்பு மேல் படிக்க வையுங்கள்)
1. சிறு தொழில் நுட்ப பயிற்சிக்கு பிறகு வேலை. (தமிழகத்தில் அரசு, மாணவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் தொழில் பயிற்சி அளித்து வருகின்றது.) 
2. இராணுவத்தில் வேலை மற்றும் அரசு வேலை, இரயில்வேயில் வேலை etc...
3. Date Entry வேலைகள்
4. சமுதாய கல்லூரிகள் மூலம் 6 மாத பயிற்சிக்கு பிறகு உடனடி வேலைவாய்ப்பு.

மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு , ITI, டிப்ளோமா படிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள sithiqu.mtech@gmail.com என்ற ஈ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்
S.சித்தீக்.M.Tech