Saturday, February 27, 2010

அறஞ்சொல்லி

என்மனம் புகழ்ந்தால் புல்லரிக்காது,
இகழ்ந்தால் இறந்துபோகாது!

சகோதரர் சக்தியின் தளத்தின் முக அறிவிப்பு இது.உள்ளே சென்றதும் கட்டிப்போடுகிறார் நம்மை.சிந்தனையை தூண்டும் எளிய நடையில் கவிதைகள்,கருத்துரைகள் என.

தளத்தின் பெயரும் வித்தியாசமாகவே உள்ளது,

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் ..!

நான் கவிஞனும் இல்லை, நல்ல ரசிகனும் இல்லை..!


சொல்ல வரும் செய்தி எல்லாமும் அறமானது,உண்மையானது என சொல்ல வருவதை தலைப்பிலேயே கோடிட்டு காட்டி விட்டார்.அவருடைய எண்ணமும்,அவர் பிற தளங்களில் இடும் பின்னூட்டத்தை அவதானிக்கும் போதும் இதை உணர முடிகிறது.


அவரிடம் எந்த வெறியோ,காழ்ப்புணர்வோ இல்லை என்பதும்,பரந்த,திறந்த மனதுடன் ஏனைய மார்க்கத்தை அலசும் உன்னத பாங்கு அவருக்கு இருக்கிறது என்பதும் மிக பாராட்டுக்குரியது.அந்த மனித எனக்கு பிடித்திருக்கிறது,அதனால் இந்த தளத்தை வெளியிட ஆவல் பூண்டேன்.


இனி அவருக்கு வந்த சில பின்னூட்டங்கள்

thenammailakshmanan சொன்னது…

//கண்டதெல்லாம் கடவுள் இல்லை - நாம்
கண்டதிளெல்லாம் கடவுள் இல்லை//

உண்மை சக்தி

பாத்திமா ஜொஹ்ரா சொன்னது…

அருமை

goma சொன்னது…

அருமையாக எழுதுகிறீர்கள்.அடிக்கடி எழுதுங்கள்.

-----------------------------------------------

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்


கண்டதெல்லாம் கடவுள் இல்லை - நாம்
கண்டதிளெல்லாம் கடவுள் இல்லை

காண முடிந்தது கடவுள் இல்லை - நம்
கருத்துக்கு இசைந்தது கடவுள் இல்லை

பிணம் ஆனவன் கடவுள் இல்லை - சிறு
மனம் கொண்டவன் கடவுள் இல்லை

மதம் கொண்டவன் கடவுள் இல்லை - பெரு
சினம் கொண்டவனும் கடவுள் இல்லை

அகமிருப்பது கடவுள் இல்லை - வெறும்
சுகம் தருவது கடவுள் இல்லை

உருகொண்டது கடவுள் இல்லை - யாரும்
உருகொடுப்பது கடவுள் இல்லை

ஓராயிரம் கடவுள் இல்லை - இது
அறியாதவர் சொல் கடவுளே இல்லை.

நெத்தியடி,வேறன்ன சொல்ல.
ஆகட்டும் சக்தி,வெளுத்துக்கட்டுங்கள்.

http://sakthispoem.blogspot.com/

Sunday, February 21, 2010

இனிய பாதையில் ஒரு அரசி..........



அஸ்ஸ்லாமு அலைக்கும்.

என்னைப்பற்றி என்னசொல்வது. நான் அதிரையும், முத்துப்பேட்டையையும் சேர்ந்தவள். தற்போது துபையில் வசிப்பவள்.அன்பான அமைதியான குடும்பத்தைப்பெற்றவள்.அதிகம் படிக்காதவள், இறைவன் மீது அளவுகடந்த பிரியம் வைத்திருப்பவள். அவனின்றி அணுவும் அசையாது என்பதில் உறுதியானவள் உண்மைச்சொல்லனுமென்றால் இறைவனை நேசிபதில் இன்பம் பெறுபவள்.

எனக்கு தெரிந்த நான் அறிந்த சன்மார்க்கத்தை, பிறருக்கும் புரியும் வகையில் இஸ்லாத்தை அனைவருக்கும் எத்திவைக்கவேண்டும் என்பது என் ஆவல்,அதற்கான முயற்ச்சியில் தற்போது இனிய பாதையில். என்ற என் வலைப்பூவிலன்மூலம் ஆரம்பிதிருக்கிறேன்.

எல்லாம் வல்ல இறைவனும் துணைப்புரியவேண்டும்,அவனுடைய அருளிருந்தால் எதையும் வெல்லலாம் இன்ஷா அல்லாஹ்..

கவிதை எழுதுவதிலும் மிகுந்த ஆர்வம்.
கைவண்ணக்கலைகளிலும் ஆர்வம் .

மிக்க நன்றி

அன்புடன் மலிக்கா


இது சகோதரி அவர்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு.

இனிய பாதையில்

இருளை அகற்றி சிறு ஒளியைத் தேடும் என் ஆன்மாவின் பயணம் என்ற அவர்களின் அந்த பிளாக்,எளிய நடையில்-குரான் மற்றும் ஹதீஸின் விளக்கங்களைப்பற்றி பேசுகிறது.

இப்போதுள்ள பிளாக் உலகில் சிலர் தம்மைப் பற்றி பெருமை பேசவும்,அவர்களுடைய பிளாகிற்கு வரும் புகழ் மாலைகளுக்கு மயங்கியும்,விமர்சனம் என்றால் தாங்கிக் கொள்ளாமலும் இருக்கும் பலருக்கு மத்தியில் சத்தியம்-உண்மை எது என்று அறிந்து,அதை மக்களிடயே எடுத்துவைக்கும் சகோதரி மலிக்கா அவர்களுடைய இந்த நல் முயற்சி மிக பாராட்டத்தக்கது.

உண்மை எது என்று தெரிந்து கொண்டுவிட்டு,இதை எழுதினால் நமக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு போய்விடும் என்றோ,நாம் பொதுவாகவே எழுதிவிட்டு போய் விடுவோம் என்று எண்ணமுள்ளவர்கள்,சகோதரி மலிக்காவின் இந்த தளம் சென்று நோக்கி திருந்திக் கொள்ள ஒரு வாய்ப்பு.

உண்மையை எழுதும்போது எல்லாரும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு,அவர்களின் கருத்துக்கு கிடைத்த வரவேற்பை கண்டு புரிந்து கொள்ளலாம்.

அன்புச்சாமி said...

/சோதனை. மண்ணில் பிறந்த, பிறக்கின்ற, பிறக்கப்போகின்ற, ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் உண்டு/

சத்தியமான உண்மை நாங்களும் நல்ல்வைகளை அறிய இன்னும் எதிர்பார்க்கிறோம்.


Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல அருமையான விளக்கங்கள் மலிக்கா
அருமையான துவா
இறைவன் நம் பிராத்தனைகளை செவி சாய்ப்பானாக ஆமீன்


Rajakamal said...

புகழ் போதைக்கு மயங்காத மனிதனே இல்லை இறையச்சம் உடைய மூமீன்களைத் தவிர, இப்போதெல்லாம் மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏதோ ஒரு பலன் கருதிப் புகழ்கினர் உணமையான நெஞ்சார்ந்த புகழ்ச்சிக் குறைவு, தகுதியே இல்லாதவர் புகழப் படுகிறார் முகத்துக்கு நேராகவே. இதன் தீமைகளை விட்டும் அல்லஹ் நம்மை பாதுகாப்பனாக ஆமின். இறைவசனங்களை புகழ்சியின் தீமைக் கெதிராக கேடையமாக பிடித்துக் கொள்வோம். நல்ல அருமையான பதிவு சகோதரி.

இன்னும் நல்ல விளக்கங்கள் பல் எழுதி-ஏகனின் திருப்பொருத்தம் கிடைத்திட இந்த அரசிக்கு (மலிக்கா)வாழ்த்துக்கள் பல.(சகோதரிக்கு சிறு வேண்டுகோள்,சில இடங்களில் எழுத்துப் பிழைகள் காணப்படுகின்றன,அதை திருத்திக்கொள்ளவும்.)

இனி நீங்களும் சென்று-சுவைத்துப் பாருங்கள்.

http://fmalikka.blogspot.com/

Sunday, February 14, 2010

கதம்ப மாலை


இந்த வார தேர்வாகும் பிளாக் http://sumazla.blogspot.com/ ஆகும்.இதுவும் சகோதரி சுமஜ்லா அவர்களுடையதுதான்.

இது ஒரு கதம்ப மாலை.எல்லா அம்சமும் உண்டும் இதில்.கட்டுரையா,கவிதையா,விமர்சனமா,விளக்கமா எல்லாம் உண்டு.தன் கருத்தை எந்த எதிர்ப்பு என்றாலும் பார்க்காமல் சொல்லும் துணிவுள்ளவர். ஹஜ் விளக்கம் என்ற அவர் பிளாக் மூலம் ஏற்கனவே அறிந்துள்ளோம் என்பதால்,அவர் பற்றிய அறிமுகம் தேவை இல்லை என எண்ணுகிறேன்.

இனி -அதை படிச்சிதான் பாருங்களேன்.

Thursday, February 11, 2010

செய்திகள் வாசிப்பது PUTHIYATHENRAL



அநீதிக்கு எதிராக நியாத்தின் குரலாக
உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
அசத்தலான அறிவிப்போடு சிந்திக்க சொல்கிறது இத்தளம்.


இப்போதுள்ள எல்லா பிளாகுகளும் மத,அரசியல்,கட்டுரைகள்,இலக்கியம்,கவிதை என்று ஏதோவதொரு பிரிவிலோ,அல்லது ஊர் சார்ந்த செய்திகள் என்றோ,கதம்பமாக என்றோ பலதரப்பட்டு விஷயங்களை வழங்கி வருகின்றன.

ஆனால்,அதிலெல்லாம் வித்தியாசப்பட்டு-இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் இணைய தளம் மிக மிக வித்தியாசமாக,தினசரி செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து,சிந்திக்க வைக்கிறது.

மேலும்,வெறும் செய்தியாக மட்டும் சொல்லி விடாமல்,அதில் வெளிப்படும் உள் விஷயங்களையும் ஆராய்ந்து ,மூடி மறைக்கப்பட்ட செய்திகளை வெளிக் கொணர்ந்தும் ,உண்மைக்குப் புறம்பான செய்திகளை ஆய்ந்து,உண்மை எது என பறை சாற்றியும் சொல்லும் பாங்கு மிக அருமை.

ஒரு தின செய்திப் பத்திரிகை நடத்தும் தகுதியில் இருக்கிறார் இந்த இணைய தள நடத்துனர் PUTHIYATHENRAL அவர்கள். அவர்களின் அந்த தள முகவரி http://sinthikkavum.blogspot.com/

PUTHIYATHENRAL  அவர்கள் தூத்துக்குடி பகுதியை சேர்ந்தவர்.பள்ளிப் படிப்பை சொந்த ஊரில் முடித்து,சொந்த தொழில் பல செய்து(அரிசி மண்டி)இப்போது அமெரிக்காவில் வணிகம் புரிந்து வருகிறார்.படிக்கும் காலத்திலிருந்தே சமூக நாட்டம் கொண்டு,பல தொண்டுகளை செய்து வருகிறார்.

அவரைப்பற்றிய சிறு வரைவு,அவரே கூறுகிறார்,"எனக்கு 19 வயது இருக்கும் இலங்கையில் இருந்த என்மாமா முறை உறவினர் ஒருவர் வூர் வந்திருந்தார். அவரு என்னையும் எங்கள் வூரு சில முஸ்லிம் பையன்கலயும் அழைத்து ஒரு விருந்து கொடுத்தார். விருந்து முடிஞ்சதும் ஒரு பயான் செய்தார் இளஞ்சர்கள் எல்லாம் ஒழுக்கமா இருக்கணும், இஸ்லாத்தை பத்தி நல்லா தெரிஞ்சிகிடனும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லணும் என்றார். எங்களுக்கு எல்லாம் நிறைய இஸ்லாமிய புத்தகங்கள் கொடுத்தார். நாங்க அப்போ 6 பேர் அவர் அழைப்பை ஏற்று அந்த விருந்தில் கலந்துகிட்டோம். எங்க 6 பேரை வைத்து ஒரு சங்கத்தை அவர் உண்டாக்கினார். அதன் பேர் லஜ்னதுள் இர்ஷத் ( தமிழில் நேர்வழி என்று பொருள்) இதன் செயலாளர் ஆகா இருந்து என் முதல் சமூக பணிகளை தொடங்கினேன். என் 21 வயதில் தௌஹீத் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தர்கா வழிபாடுகளை விட்டு விலகினேன் அல்ஹம்துலில்லாஹ்"

வாழ்த்துக்கள் PUTHIYATHENRAL.
இன்ஷா அல்லாஹ்,அடுத்த வாரம்,நல்லதொரு தள அறிமுகம் காணலாம்.
அதுவரை,சிந்திச்சுகிட்டே இருங்க!

Sunday, February 7, 2010

அநீதிக்கெதிராக ஒரு தூரிகை.


இந்தவார தேர்வாக சகோதரி பாத்திமா ஜொஹ்ராவின் அன்போடு உங்களை அறிமுகப்படுத்தப்படுகிறது.பேச்சு வழக்க முறையில் எழுதினாலும்,வரதட்சணை,வட்டி,ஹராமான சம்பாத்தியம் போன்ற அநியாயங்களை ஒரு பெண்ணாக இருந்து கடுமையாக சாடி,மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு செல்லும் பாங்கு அருமை.அந்த பேச்சு வழக்கு மக்களிடம் நன்றாக ரீச் ஆகி வருகிறது என்பதை அவர்களின் பதிவுக்கு கிடைத்த சில கமெண்ட்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

ஏனோ தானோ என எழுதும் (ஆணோ-பெண்ணோ)இக்காலத்தில் உண்மையை-சத்தியத்தை தைரியமாக எழுதும் எழுத்துப் போராளிகள் பாத்திமா ஜோஹரா,சுமஜலா ஆகியோர் என்றால் மிகை அல்ல.

கமெண்ட்கள் பார்வைக்கு சில............

Anbu Thozhan said...

தெளிவான சிந்தனையோட..... தெள்ள தெளிவான விளக்கத்தோடு..... சம்மந்த பட்டவர்களுக்கு மண்டையில் நறுக்குனு நாலு கொட்டு கொட்டி புரியவைப்பது போன்ற எழிய நடையுடன் கூடிய ஒரு ஆக்க பூர்வமான பதிவு.... எல்லாம் வல்ல இறைவன் நம் எல்லோருக்கும் நேர்வழி புரிவானாக....

thenammailakshmanan said...

உங்கள் கருத்துகள் அனைத்தோடும் ஒத்துஇசைகிறேன் சகோதரி

மிக அருமையாக மென்மையாக கூறி இருக்கிறீர்கள்

ஹுஸைனம்மா said...//இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?//

அதானே?

நல்ல விரிவா, தெளிவா விளக்கியிருக்கீங்க ஃபாத்திமா. மாஷா அல்லாஹ்

அன்புடன் மலிக்கா said...

மிக மிக தெளிவான கட்டுரை அல்ஹம்துல்லிஹ் நம் அனைவரையும் இறைவன் நேரான பாதையின்பக்கம் நம்மை வழிநடத்திச்செல்வாகாக!

கவிக்கிழவன் said...

அழகான வரி நல்லா எழுதி இருக்குது

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு. முயற்சி, உழைப்பு. கூடவே பிரார்த்த்னை. மிகச் சரி.

சக்தி த வேல்..! said...

தகவலுக்கு நன்றி... நான் ஒரு ஹிந்துவாய் இருப்பினும் இஸ்லாம் மீதும் இஸ்லாத் மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவன்...இந்த பாவ பட்ட பூமியில் அல்லாஹ் வின் புகழ் ஒரு நாள் ஓங்கும்... பாவங்களெல்லாம் காணமல் கரைந்து ஓடும் என முஹமது நபிகள் போலவே நானும் நம்புகிறேன்.. அன்புடன் சக்தி..

இது சில துளிகள் மட்டுமே.

இனி,நீங்களும் சென்றுதான் பாருங்களேன்.

அவர்களின் இணைய தள முகவரி.


http://anboduungalai.blogspot.com/