Friday, February 17, 2012

குகையினுள் தஞ்சம்


அல்லாஹ் தன் திருமறையில் பின்வாறு விவரிக்கிறான்.

(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?

அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் “எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள்.

ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம்.

பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம்.

(நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.

அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.

எங்கள் சமூகத்தாராகிய அவர்கள் அவனையன்றி வேறு நாயனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அவற்றின் மீது தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா? ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்? (என்றும் கூறினார்கள்).

அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).

சூரியன் உதயமாகும் போது (அவர்கள் மீது படாமல்) அது அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் ஒரு விசாலமான இடத்தில் இருக்கின்றனர் - இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும், எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்.

மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது; அவர்களை நீர் உற்றுப்பார்த்தால், அவர்களை விட்டும் வெருண்டு ஓடிப் பின்வாங்குவீர்; அவர்களில் நின்றும் உண்டாகும் பயத்தைக் கொண்டு நிரம்பிவிடுவீர்,

இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) “நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்?” எனக் கேட்டார்; “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்” எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) “நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்).

ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள்; அப்புறம், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்” (என்றும் கூறினர்).

இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) “இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே! நினைவு கூறும்) “இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்: “நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்” என்று கூறினார்கள்.

(அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர்(இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்” என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) “ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்” என்று சொல்கிறார்கள் - (நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம். அல்குர்ஆன் 18:9-22
Bones of Cave peopleBones of Cave people
அவர்களது எலும்புகள்

குகை
Jaw bones of Cave people's dog
அந்த நாயின் மண்டை ஓடு மற்றும் தாடை எலும்பு
அவர்களது சடலங்கள் குகைக்குள் வெவ்வேறு கல்லறைக்குள் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் ஓரே கல்லறைக்குள் மாற்றப்பட்டன. இப்பொழுதும் அவர்களது எலும்புகளை கல்லறைக்குள் காணலாம்.

இக்குகை ஜோர்டான் நாட்டு தலைநகரம் அம்மானுக்கு அருகில் ரக்கீம் என்ற இடத்தில் இருக்கிறது. 
 

Saturday, February 11, 2012

அமெரிக்காவில் என்ன நடக்கிறது

முன்பெல்லாம் மாணவர்கள் தங்கள் தாய்,தந்தை,குடும்ப உறுப்பினர்கள்,ஆசிரியர்,ஆலிம்கள் என்று மரியாதை வைத்து இருந்தார்கள்.அவர்கள் ஏதும் சொல்லி விடுவார்களோ என்ற அச்சம் இருந்தது,அதுக்கும் மேல்,அல்லாஹ்வின் மேல் பயமும்,ரசூல் ஸல் அவர்களின் மீது மிக்க மேலான பாசமும் இருந்தது,(இன்றும் இருக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை).ஆனால் அன்று நம் மாணவர்களை மார்க்கம் வழி நடத்தியது,இன்று கேடு கெட்ட சினிமாவும்,நாடகமும்,சீரழிவு ஊடகங்களும் வழி நடத்துகின்றன.

அல்லாஹ்வை நினைத்து அழுத பெண்கள்,இன்று நாடகத்தில் வரும் காட்சிகளை பார்த்து அழுகின்றனர்.ஆசிரியர்கள் பள்ளியில் நடப்பதை வைத்து மட்டுமே மாணவர்களை திருத்த முடியும்,எனவே,பெற்றோகளுக்கு மட்டுமே அதிக அக்கறை வேண்டும்.

அரசு,காவல் துறை,ஆசிரியர்,பெற்றோர்,மாணவர்கள் என்று ஒரு லிங்க் இருக்க வேண்டும். 
ஒரு உதாரணமாக,அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்பதை சொல்ல விரும்புகிறேன்.

காலை எட்டு மணிக்கு பள்ளிகள் திறந்து,மதியம் இரண்டு - முப்பதுக்கு முடியும்.இந்த இடைபட்ட நேரத்தில் மாணவர்களை ரோட்டிலோ,ஷாப்பிங் மால்களிலோ,வேறு எங்கோ கண்டால்- காவல் துறையினர் பிடித்து விசாரிப்பார்கள்.

மாணவர்கள் பள்ளிக்கு வராத நாளில்,வீட்டுக்கு உடனே பள்ளியிலிருந்து போன் வந்து விடும்.

ஹோம் வொர்க் மற்றும் பள்ளி சம்பந்தமான எல்லா வேலைகளையும் முடித்து மாணவர்கள் - பெற்றோரிடம் கையெழுத்து வாங்க வேண்டும்.

அடிக்கடி மாணவர்கள் - பள்ளிக்கு விடுமுறை எடுத்தால்,காவல் துறை தலைவரிடமிருந்து(ஷெரீப்)பெற்றோருக்கு சம்மன் வரும்.

பள்ளி நேரம் முழுக்க காவல் துறை பள்ளி வளாகத்தை(patrol) சுற்றி வரும்.

ஆசிரியர்,மாணவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் ஒரு சக மாணவன் போல் பழகுவார்கள்.

பள்ளி சம்பந்தமான போர்ட் மீட்டிங்குக்கு கூட,பெற்றோர்களை அழைத்து கருத்து கேட்பார்கள்.

இப்படி நம்மூரிலும்,செய்யலாம்.

கொசுறு :(இங்கும் - பள்ளிகளில் துப்பாக்கி சூடு நடந்து கொண்டுதான் இருக்கிறது,ஆனால் அதைக் களைய மேற்சொன்ன மற்றும் பலவிதங்களில் போராடிவருகின்றாகள்.)

Result:அமெரிக்காவோ,இந்தியாவோ இஸ்லாம் சொல்வதை கேட்டு நடந்தால் - அமுல் படுத்தினால் எல்லாரும் நன்றாக இருக்கலாம்.இல்லையெனில் இது போன்று நடப்பதை தவிர்க்க இயலாது.இதை ஒரு எச்சரிக்கையாகவே சொல்லி வைக்கிறேன்.

Wednesday, February 8, 2012

குர்ஆனை ஓதுங்கள், தினமும் மாற்றத்தை உணருங்கள்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று! வாசனையும்நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர்பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதிவருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனைநன்றுசுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்புஅதற்கு வாசனையும் கிடையாது.
அறிவிப்பவர் : அபூமூஸல் அஷ்அரீ (ரலி)நூல் : புகாரி (5020)

TO READ MORE........