பேனா முனை: உயிரின் வேர்கள் -11 உமர் (ரலி)வாழ்க்கை வரலாறு கவி நடையில் ...
உயிரின் வேர்கள் -11
உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்று சுருக்கம் கவி நடையில் ....
புயலாக கிளம்பி வந்த வீரர் ..
புனித குர் ஆனின் போதனையால் ..
குளிர் தென்றலாக போன விதம் -உடல்
புல்லரிக்கும் சம்பவமே ....
வாளுக்கு இனி வேலை இல்லை ..
நாவுக்கு தான் வேலையாகி..
நவிண்டார்கள் கலிமாவை ...
நபிகள் நாயகத்தின் முன்னிலையில் ..
மூடனாக இல்லாமல் ...
மூமினாக மாறி விட்டார் ..
கொடுமைகள் பல செய்த மா பாதகங்கள் ..,
இவரால் இனி இல்லாமல் போயிற்று ..
கடும் பாறை போல் இருந்தது ..
அறியாமை வாழ்கையிலே ..,
இபோது ..பிறர் துன்பம் கண்டாலும் ..
இவர் உருக காண்கின்றோம் ..
அனல் பறக்கும் பார்வை போய் ..
கனிவான பார்வைகள் ...
கண்ணிமைக்கும் நேரத்திலே ..
கலிமாவால் வந்ததுவே ...
வீரங்கள் இனி எல்லாம் ..
வீனர்களிடம் மட்டும்தான் ..
ஏழைக்கு இனி இவரால் துன்பம்
ஏதும்..இல்லை ...இல்லை .
சிலை மீது வைத்த பாசம் ..
சீரழியும் ..வாழ்க்கை யாவும் ..
குலம் மீது வைத்த பாசம் ..
கொலையில் தானே வந்ததுவே ..
எல்லோர்க்கும் ஏற்ற வழி
எம்பெருமான் நபி சொன்ன வழி ..
என்றும் நாமும் பேனிடுவோம்...
ஈகையுடன் ..வாழ்ந்திடுவோம் ..
(உமர் (ரலி )நல்லாட்சி தொடரும் ..)
No comments:
Post a Comment