Monday, July 23, 2012

உயிரின் வேர்கள் -12 - உமர் (ரலி)வாழ்க்கை வரலாறு கவி வடிவில் ......


நல்லாட்சி என்பதெல்லாம் ...
இன்றைய 
தலைவர்களின் 
சொல்லாடல் மட்டும்தான் -
அரசு கஜானா 
இன்றைய அரசியல்வாதிகள் 
பாக்கெட்டில்..

தியாகத்தின் உறைவிடமாய் .வந்த 
திரு மகனார் உமரென்னும் உயர் தோழர் ..
கருவூலம் நிறைந்திருந்தும் ..தனகென்று 
ஒருபோதும் ஒரு துரும்பும் எடுத்ததில்லை ..
உமர் (ரலி)அவர்கள் ஆட்சி தன்னில் ..மக்களுக்கு 
ஒரு குறையும் இருந்த தில்லை ...
நல்லாட்சி செய்யும் செயல் ..
நல்ல பல செயல் 
வரலாற்று சுவடுகள் 
இன்றும் சொல்கிறது 
மணமாகி சில நாளில் ..
கணவன் சிப்பாய் பணிக்கு 
சென்றதினால் -
பிரிவின் ஆற்றாமையை 
ஒரு மங்கையின் மூலம் 
உணர்ந்த அப் பெருமகனார் 
ஆணையிட்டார்
தனது தவறுணர்ந்து 
ஆறு மாதம் -ஒரு முறை 
பணி விடுப்பு
மக்கள் மகிழ்ச்சி பெருக்கில் 
மூழ்கிப்போயினர் 
உமர் (ரலி)ஆட்சி அது!
அதுதான் ஆட்சி!!
தனது தேவை பல சுருக்கி ..
ஏழ்மையான வாழ்வுதனை ..
தனது வாழ்வாக்கி 
எங்கள் அமீருல் முஹ்மினூன் 
வாழ்ந்து வந்தார் ..
அடிமைக்கும் அரசனுக்கும் ..
வேறுபாடு தெரியாத ..
வினோதம் ..இவராட்சியில் 
கண்டதுதான் இவராட் சியின் சரித்திரம் ...
ஒரு முறை ..


பாலை நிலப்பரப்பில் 
 உமர் (ரலி) சென்ற போது-
அன்னாரும்
அவர் வேலையாலும் 
மாறி - மாறி
ஒட்டகம் மீதேறி
நடந்தும் வந்தனர்
 ஒருதடவை கலீபாவும்,
மறுமுறை
வேலையாலும் என
இப்படி-
ஒட்டக பயணம் ..
ஊர் வந்து சேரும் போது ..
பெருமகனார் ஒட்டகத்தை 
வழி நடத்தி வந்த போது ..
வர வேற்ற ஆளுநரும் 
அதிர்த்து தான் போயினரே ...


ஏன்?ஏன்? 
(இன்ஷா அல்லாஹ்  

தொடரும் ...)  

No comments:

Post a Comment