உமர் (ரலி)அவர்கள்..
தனது குல பெருமைகளை ...
தனது குல தெய்வங்களை ...
மறுகின்ற முகமது (ஸல் )அவர்களை
கொன்று விட்டு வருகிறேன் (நவூதுபில்லா)
என்று புரவியில் ஏறி புறப்பட்டார் ...
சினம் கொண்ட வேங்கையது ..
சீறி பாய்ந்து வருவதை கண்ட மக்கள்
வழி போக்கர் அனைவருமே...
வழிவிட்டு ஒதுங்கினர்
சினத்தின்காரணத்தை
கப்பாப் (ரலி )எனும் நபி தோழர் ..
உமர் ரலி அவரிடம் வினவிடவே ....
நபி மீது தாக்கிடவே ..
தாம் வருவதாக -
கூறியதை கேட்ட
கப்பாப் (ரலி )அவர்கள்
நடுநடுங்கி போனார்கள் ...
சிங்கமது புரவியிலே ..
ஏறி சென்றதை பார்த்ததுண்டா பாரினிலே
உமர் ரலி அவர்கள் புரவியிலே ..
போன காட்சி அது வென்பேன் ..
மக்கா வீதியிலே
புழுதி பறக்க ..
பயணித்த புயல்
கண்டவரெல்லாம்
அரண்டு நிற்க
நுஐம் என்ற இளைஞரிடம் ..
வீறு கொண்டு
நபி (ஸல் )எங்கே ? என்று கர்ஜித்தார் ..
நபி இருக்கும் வழியை
ரகசியமாய் வைத்திருந்த
நுஐம் எனும் இளைஞருக்கு ..
மனதில் பயம் பயணிக்க
புத்திசாலி தனமாக
ஒரே சொல்லில்
உமர் (ரலி )அவர்களின்
கோபத்தின் திசை தன்னை
திருப்பி விட்டார் ....
(அது எந்த திசை???
அடுத்த பதிவில்
இன்ஷா அல்லாஹ் தொடரும் .....)
அதிரை சித்திக்
No comments:
Post a Comment