Tuesday, July 10, 2012

உயிரின் வேர்கள் -9..உமர் (ரலி )அவர்கள் வரலாறு ..




நுஐம் எனும் நபி தோழர் மனமதில்
பயமதை புறம்தள்ளி 
தெளிவாக உமர் ரலி  நோக்கி
முகம்மது (ஸல் ) அவர்களை 
கொல்வது (நவூதுபில்லாஹ்)இருக்கட்டும்
அவர் தம் வழியை கடை பிடிக்கும்
 உமது
உடன் பிறந்த சகோதரியை போய் கேளும்
என்றுரைத்தார் ....





இலக்கு நோக்கி பயணித்த அம்பு
திசை திரும்பி செல்ல.....
நுஐம் எனும் தோழரின் 
ஒரு சொல்லால்
வில்லுக்கே சென்றது போல் ..

கோபங்கள் திசை மாறி
 சகோதரி இல்லம் நோக்கி
 விரைந்திட்டார் ..


வீரர் உமர் ரலியும் 
அவர் தம் தங்கை இல்லமது நெருங்கிடவே
வேகமது குறைந்திற்று ..

உமரவரின் காதின் வழியாக
உள்ளத்தின் வாசலுக்கு இளம் தென்றலாக
உச்சரிப்பு நலம் உள்ள உன்னத திருமறை
வேத வார்த்தைகள் விளங்கடவே செய்தது ...


குதிரை அதை கட்டிவிட்டு
கோபமதை அவிழ்த்து விட்டார் .
உண்மையான வேதமதை உன்னதமாய்
ஓதி வந்த உத்தம சகோதரியை ...
ஓங்கி ஒரு அறை விட்டார் உமர் ரலி  அவர்கள்


உறுதியான கரத்திலினால் 
அறைந்ததுமே 
உதிரங்கள் கொட்டியது 
உமரவரின் சகோதரிக்கு ..



சிங்கத்துக்கு குருதிகள் புதிதல்ல 
ஆனால்
சகோதரி நிலை கண்டு 
நிலை குலைந்தே உமர் போனார்
உள்ளத்தில் உள்ள கோபம் பறந்து 
அதுவும்  போயிற்று .


குல தெய்வம், குல பெருமை மறந்து 
நீயும்போனாயோ
நான் வரும் போதினிலே
உரக்க நீயும் ஒதினாயே .
மீண்டும் அதை ஓதி நீயும் காட்டு என்றார் .



வேதமதை ஓதிடவே உடை சுத்தம்
 உடலால் சுத்தம்
உள்ளம் சுத்தத்தோடு
 ஒதிடவும் வேண்டும் இதை
உதிரங்கள் வந்ததினால்
 சுத்தம் செய்து வருகின்றேன்



உளு எனும் 
உடல் சுத்தம் செய்து வந்து
வேதமதை(சூரதுல் தாஹா )
ஒதியுமே காண்பித்தார்


நடந்தது அதிசயம்
கிடைத்தது ஈமான் எனும் 
பொக்கிஷம்


----------------
அந்த அதிசயம்தான் என்ன???
இன்ஷா அல்லாஹ் 
அடுத்த பதிவில்.....


அதிரை சித்திக் 






No comments:

Post a Comment