Tuesday, July 24, 2012

ஸஹருக்கான நேரம்


''நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!'' 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 1923.

''நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஹ்ர் செய்தோம், பின்னர் தொழுகைக்கு அவர்கள் தயாராகி விட்டார்கள்!'' என்று ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார் நான் 'பாங்குக்கும் ஸஹ்ருக்குமிடையே எவ்வளவு நேரம் இருந்தது?' என்று கேட்டேன். அதற்கவர் 'ஐம்பது வசனங்கள் (ஓதும்) நேரம் இருந்தது!'' என்று பதிலளித்தார். நூல். புகாரி 1921. அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஐம்பது வசனங்கள் ஓதுவதற்கான நேரம் எவ்வளவு இருக்கும் என்பதை திருக்குர்ஆனை ஓதக் கூடியவர்கள் கணித்துக் கொள்வர்.

அல்லாஹ்வும்அல்லாஹ்வுடைய தூதரும் கூறிய நேரத்தில் ஸஹர் நேரத்து உணவை உண்டு ஃபஜ்ரு தொழுகையை அதன் நேரத்தில் தொழுதுநோன்பை நோற்று அல்லாஹ்வின் அபிவிருத்தியை அடைந்து உடலை சோர்விலிருந்து காக்கவும் நன்மைகளை அடைந்து கொள்ளவும் முயற்சி செய்வோம்.

No comments:

Post a Comment