நானே வளர முடிந்திடுமா
நல்ல உணவும் கிடைத்ததனால்
தானே வளர்ந்தேன் உனதருளால்
தேடும் வளமும் கிடைத்தனவே
ஆனால் மறந்தேன் உனதருளை
ஆளும் இறைவா இனியெனது
பேனா வனையும் கவிகளிலே
பொய்மை கலவா திருப்பதுவே
தாயின் கருவில் வளர்ந்திடவே
தங்கி நலமாய் வெளிவரவே
நீயும் உணவு தருவதையும்
நித்தம் மறந்து விலகினனே
வாயும் உளறும் கெடுதிகளால்
வாழ்வு குலைந்து முடிவினிலே
தீய நரகம் புகுவதற
தீமை அகல வரமருளே
கல்விக் கலைகள் வளமுடனே
கற்பித் ததனால் உனதருளால்
செல்லும் இடந்த(னில்) சிறப்புடனே
செம்மைப் பெறவே முடிந்ததுவே
பொல்லாச் செயலால் பெரும்பிழைகள்
பெற்றுப் பழிகள் வருவதனால்
எல்லா மறிந்த உனதருகில்
என்றும் திருந்தி வருவதுவே
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
No comments:
Post a Comment