குதூகல துவக்கம் ..
வான வேடிக்கை ..
வண்ண மயம்..
நாட்டின் முகவரிக்காக ..
கொடிமூலம் கையசைத்து ..
கம்பீர நடை வரை தான் ..
கண் கொள்ளா காட்சி ..
போட்டி துவக்கம் ..
உள்ளத்தின் உருக்கம் ..
ஹிப்னாட்க்ஸ் போட்டிதனில் ..
இளந்தளிர்கள் வளைந்து ..
நெளிந்து திறமையை ..
காட்டிய காட்சி....
எனக்கு போட்டியாய் தெரிய வில்லை
திறமையை வெளிகொணர்வு
என்ற பெயரில் வன்கொடுமையாய்
எங்கண்ணுக்கு தெரிந்தது..
ஒரு சான் வயற்றுக்காக
தெரு கூத்தில் இளம்பிள்ளைகளின்
வித்தைகள் ..பரிதாபமாக தெரிவது போல்
அந்தரத்தில் தொங்கி விளையாடி ..
நூலிலையில் தவறி ..
போட்டியிலிருந்து நீங்கும் .
இளம் அரும்புகளின் வெம்புதல் ..
நான்கு வருட ..வறுத்தெடுத்த ..
பயிற்சி ..வீணான வருத்தம்
நாட்டிற்கு பதக்கம் குவிக்க
பாலகனின் வருத்தங்கள்
மீடியாவின் கண்ணுக்கு
ரத்த கண்ணீராய் தெரிகிறது
பர்மாவில் மனித பிரேத குவியல் கள்
மீடியாவின் கண்ணுக்கு
குளிர்ச்சியாய் போனது .
ஒலிம்பிக்கின் விசும்பல்கள்
பர்மா மரண ஓலங்கள்
தெரியாமல் போனதுதான்
தற்கால ஊடகத்தின் மரபாகும் ..
அதிரை சித்திக்
No comments:
Post a Comment