அரேபியாவின் ஆட்சியாளர் ..
படை சூழ வருவார் என
எதிர் பார்த்த அனைவருமே
அதிர்ந்துதான் போயினரே .
வேதங்கள் பல படித்த ..
பண்டிதரும் வந்திருக்க .
உண்மையான உமர் அவர்கள்
ஒட்டகையை நடத்தி வருவார்
என்பதனை ..முன்பே யாம் அறிந்திருந்தோம்
என்று கவர்னரிடம் உரைத்தனரே...
நபி நாதர் (ஸல்) வாழ்க்கைதனை ..
கடை பிடித்து வந்தவராம் .
உமரென்னும் உயர் தோழர் ..
ஒவொரு அசைவுகளும் ..
நபி வாழ்வை சொல்லிற்று ..
உலகெங்கும் வாழ்ந்தவர்கள்
உமர் ஆட்சி மெச்சினரே..
அவர் ஆட்சி ஆணைதனை
அக்ரினையும் கேட்டதுவே ..
மிசிறி எனும் நாட்டினிலே ...
வீர ஆவேசமாக ஓடுகின்ற ..
நைல் நதியின் ஆவேசத்தை .
அறிந்த உமர் அவர்கள் ..
நைல் நதிக்கு ஆணையிட்டார் ..
நதி அதுவும் அடங்கியதே ...
எனக்கு பிறகு ..
நபிஎன்றிருந்தால் அது உமராகதானிருக்கும்
என்று சொன்ன நபி மொழியே
உமர் சிறப்புக்கு சான்றாகும் ..
(வளரும் இன்ஷா அல்லாஹ்
ரமலான் வளர் பிறை போல )
அதிரை சித்திக்
/மிசிறி எனும் நாட்டினிலே ...
ReplyDeleteவீர ஆவேசமாக ஓடுகின்ற ..
நைல் நதியின் ஆவேசத்தை .
அறிந்த உமர் அவர்கள் ..
நைல் நதிக்கு ஆணையிட்டார் ..
நதி அதுவும் அடங்கியதே .../
விளக்க முடியுமா?
உமர் (ரலி)அவர்கள் ஆட்சி காலத்தில்
ReplyDeleteமிஸ்ரி நாடும் அவர்கள் ஆட்சிக்கு
உட்பட்டு இருந்த காலம் நைல் நதியில்
பெருவெள்ளம் கட்டுப்பாடற்ற சூழல்
அமீருல் மூமினீன் உமர் (ரலி) அவர்களின்
கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது ..
அவர்கள் அல்லாஹ்வின் பெயரால்
கடிதமெழுதி நைல்நதியில் மிதக்க
விட செய்தது ஆற்றின் வேகம் குறைந்தது
என்ற தகவல் ஒரு இஸ்லாமிய கருத்தரங்கில்
கேட்டத்தை கவிமூலம் சேர்த்தேன் ...