Wednesday, August 1, 2012

பர்மியர்க்கு அருள்வாய்ப் படைத்தோனே!

பர்மிய முஸ்லிம் படுகின்ற வேதனை
தர்மம் நியாயம் தலைகீழாய்ப் போனதை
புத்தன் பெயரில் புரியும் படுகொலை
நித்தம் அழுதேன் நினைத்து


பச்சிளம் பாலகர்ப் பற்றிய நோன்பினை
மெச்சியும் பார்த்து மெழுகாய் உருகினன்
நாதி யிலாநிலை நாட்டில் அகதியாய்;
நீதி வழங்குவாய் நீ


தாயை இழந்து தவிக்கும் குழந்தையை
நாயாய்க் கருதி நடுவீதி(யில்) சுட்டுப்
பொசுக்கும் மிருகமாய்ப் போனர்; இனத்தை
நசுக்கு மிவர்கள் நடப்பு

நோன்பின் தருணத்தில் நோவினைச் சேர்ந்ததைக்
காண்போர் களின்கண்கள் கண்ணீர் சொரியுமே
துன்பத்தை யெல்லாம் துடைக்கும் இறைவனே
இன்பத்தை அங்கே இறக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

2 comments:

  1. எல்லாம் வல்ல அல்லாஹ்,இந்த சகோதரர்களுக்கும் - உலகில் உள்ள ஏனைய முஸ்லிம் சகோதரர்களுக்கும் அருள் செய்வானாக.கண்கள் பனிக்கும் கவிதை யாத்த கலாம் காக்கா அவர்களுக்கு நன்றியும்,துவாவும்.

    ReplyDelete
  2. “பர்மிய முஸ்லிம்...”என்ற வரியின் துவக்கம் என் தூக்கத்திலும் வந்து விழுந்ததால் முதலில் இப்பாடலை எழுதுவோம் என்று முடித்தேன்(பொதுவாக, கவிஞர்களின் கண்கள் தூங்கும்; ஆனால் ஆன்மா-சிந்தனை-கல்பு தூங்காது)கனவில் வந்தது போல் இப்படி எனக்கு அடிக்கடி பாடல் வரிகள் உதிக்கும் பொழுது அஃது அல்லாஹ்வின் ஏற்பாடோ (இப்படி பாடல் எழுது என்று என்னைத் தூண்டுகின்றானோ) என்ற ஓர் உறுதியான எண்ணம் வந்து விடும்; அதனால் அவ்வரிகள் அல்லாஹ் எனக்கு “அடி எடுத்துக் கொடுப்பதாகவே” எண்ணிக் கொள்வேன்; அதனாற்றான். இவ்வரிகளின் அந்த முதல் இரண்டு சீர்களும் வெண்பாவின் இலக்கணத்திற்குட்பட்டு விட்டதை கணித்து விட்டேன்; தொடர்ந்து அதே இலக்கணத்திற்குட்பட்டு மழைபோல் (இறையருளால்) பொழியும் சொற்களைக் கோர்த்துக் கொண்டே முழு விடயமும் இவ்வெண்பாவிலக்கணப் பாடலில் அமைத்துக் கொள்ள அல்லாஹ்வும் எனக்கு உதவியாக இருந்தான். அல்ஹம்துலில்லாஹ்!

    முதலில் இப்பாடலை “வெள்ளோட்டமாக” என் சக கவிஞர் குழுவினர்கட்கு விட்டேன்; அவர்களில் சிலர் உருகினர்; சிலர் ,”இஃது ஓர் அரசியல் குழப்பம்;தேவையற்ற ஒரு சூழலை நம்மவர்களே ஏற்படுத்தியதன் விளைவு;அஸ்ஸாமிலும் பர்மாவிலும் பங்காளிகள் குடியேறியதால் வந்த பழிவாங்கும் போக்கு” என்றெல்லாம் விமர்சனம் எழுதினர். ஆயினும், இவ்வரிகள் எனக்கு அல்லாஹ்வால் உதிப்பில் போடப்பட்டவைகள்; எக்காரணமானாலும் எம்மக்கள் எங்கெல்லாம் சோதனைக்குட்படுகின்றார்களோ அதனைப் பார்த்து என் உள்ளம் சும்மா இருக்க இடந்தராது என்ற ஒரே உறுதியில் இப்பாடலை நீங்கள் அனுமதி தந்த வண்ணம் நேரிடையாக இத்தளத்திலும் பதிந்தேன்; உங்களின் பாராட்டும் பெற்றேன்; ஜஸாக்கல்லாஹ் கைரன் தம்பி அர.அல.

    உங்களின் துஆ வை அல்லாஹ் கபூல் செய்வானாக (ஆமீன்)

    ReplyDelete