Monday, August 13, 2012

உயிரின் வேர்கள் 14


உமர் (ரலி)அவர்கள் வரலாற்று சுருக்கம் ...

வீரத்தின் விளைநிலம் ..
விவேகத்தின் உறைவிடம் ..
ஆட்சி அதிகாரத்தில் ..
நேர்மை என குணமதில் 
கலங்கரை விளக்கமாய் 
திகழ்ந்த உமரவர்கள் ...
 
நபி வழி நடப்பதில்.
நுண்ணறிவாய் செயல் படுவார் 
உமர் வரும் வீதி தன்னில் 
சைத்தான் வர மறுத்திடுவான்
அவர் வரும் வீதி மாறி ..
மறு வீதி சென்றிடுவான் ..என 
செம்மல் நபி பகர்ந்தார்கள் ..
 
மார்க்கத்தில் ஷிர்க் நுழையாமல் 
கண் விழித்து இருந்தார்கள் 
நபி யவர்கள் சில நேரம் 
விருச்சதின் நிழல் தன்னில் 
இளைப்பாறும் நிகழ்வு தன்னை 
நபியவர்கள் மறைவுக்கு பின் 
சில நபர்கள் நினைவு கூற 
 
மரத்திற்கு மதிப்பு கூடி 
வணங்கிடவும் செய்திடலாம் ..
முன் கூடி நுண் மதியால் ..
மரத்தினை வெட்டிடவும்செய்தனரே ..
 
தமிழகத்தில் பல தர்கா ..
அறியாமையின் ஊற்றாக 
திகழ்வதுவும்.நுண் மதி இல்லா 
மூடர்கள் வழி  முறையாம் ..
 
அவ்லியாக்கள் என்று சொல்லி 
அவர்  இருந்த இடம் ..எனக் கொண்டு 
பாத்தியாக்கள் ஓதி ..
ஷிர்க்கை அவிழ்த்துவிட்டு -.
தொட்டு தொட்டு முகர்ந்திடும் 
குணமதனை..இன்றும் நாம் காண்கின்றோம் 
 
ஆயிரம் வருட முன்பே 
வள்ளல் நபி வழிவந்த 
உமர் என்னும் உயர் தோழர் 
நபி அவர் மீது அன்பு எல்லாம் 
மனதளவில் இருக்க வேண்டும் 
மார்க்கம் சொல்லா செயல் செய்து 
வரம்புகளை மீற  வேண்டாம் .....
என போதித்தாரே 

(தொடரும் ..) 

அதிரை சித்திக் 

No comments:

Post a Comment