Monday, August 13, 2012

மீட்டர் வட்டியில் மூழ்கியுள்ள பிலால் நகர் சகோதரிகளின் உருக்கமான வேண்டுகோள் [காணொளி] !!!

தமிழகத்தில் முஸ்லிம்கள் பெருபான்மையாக வாழக்கூடிய, வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரபல கல்வி நிறுவனங்கள், மார்க்கத்தைப் பயிற்றுவிக்கும் மதரசாக்கள், மனித நேயத்தை வளர்க்க மஸ்ஜித்கள், சமுதாயச் சேவைகளுக்கென்று இஸ்லாமிய அமைப்புகள், பைத்துல்மால், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரபல அரசியல் கட்சிகள் அமையப்பெற்ற ஊர்களில் அதிரைப்பட்டினமும் ஒன்று. இவ்வூரில் - பிரபல தொழில் அதிபர்கள், கல்விச் சீமான்கள், கொடை வள்ளல்கள், மார்க்க அறிஞர்கள், கல்வி பயின்ற மேதைகள், கணினி வல்லுனர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், சட்ட வல்லுனர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டுருக்கின்ற ஊரில் - வட்டி !

மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட, கடுமையாக விலக்கி வைக்கப்பட்ட இவ்வட்டியினால் எத்தனையோ குடும்பங்கள் அவர்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து நடு வீதிக்கு வந்துள்ளார்கள்.

நமதூரில் பல தெருக்களைச் சார்ந்தவர்கள் வட்டியில் முழ்கி இருந்தாலும் ஏழை எளியோர், முதியோர், நலிவுற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், அன்றாடம் தொழில்செய்து பிழைப்போர், வீட்டு வேலை செய்வோர் என வாழ்ந்து வருகின்ற பிலால் நகரில் வட்டிக்கடனில் மூழ்கிருப்போர் சற்றுக் கூடுதலாகவே உள்ளனர் என்றால் மிகையாகாது.

இனி மீட்டர் வட்டியில் மூழ்கியுள்ள பிலால் நகர் பகுதியைச் சார்ந்த சகோதரிகளின் உருக்கமான வேண்டுகோளைக் காண்போம்....


இதுபோன்ற வட்டிக்கு பணம் கொடுக்கும் கந்துவட்டி கொடூரர்கள், வசூல் ராஜாக்கள் என நமது சமூகத்திலும் இருக்கின்றனர் என்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும் வேதனைதருவதாகவும் உள்ளன.

நமதூர் இஸ்லாமிய பொது அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள் !

1. இது போன்ற மக்களிடேய விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும்.......

2. வரவுக்கேற்ற செலவு செய்ய ஒவ்வொரு குடும்பமும் முன்வந்து, ஒரு ஒழுங்கு முறையைப் பின்பற்ற கேட்டுக்கொள்ளலாம்........

3. இம்மக்களிடையே COUNSELLING செய்து, அவர்களுடைய அறியாமையை அகற்றிட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.......

4. உரியவர்களை இனம்கண்டு நிபந்தனைக்கு உட்பட்ட “வட்டியில்லாத கடன்”களை வழங்க ஏற்பாடு செய்யலாம்.......

5. அதிரையில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், இஸ்லாமிய அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பிரபல அரசியல் கட்சிகள் மற்றும் வெளிநாடுவாழ்  சகோதரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இதனால் மக்களுக்கு ஏற்படுகிற இழப்புகளைக் கருத்தில் கொண்டு, சட்டச் சிக்கல்களை ஆராய்ந்து, தெருவில் புழங்கும் வசூல் ராஜாக்களையும், நமதூரில் உள்ள பைனான்ஸ் நிறுவனங்களையும் தடை செய்வதற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ள முன்வரவேண்டும்......

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் !

    மிக்க நன்றி பேனாமுனை நிர்வாகி அவர்களுக்கு,

    ReplyDelete