Sunday, August 26, 2012

மரணத்தின் பிடிப்பிலே....மகத்தான படிப்பினை!!

மரணத்தின் பிடிப்பிலே....மகத்தான படிப்பினை!!

  மச்சானின் இறப்பு
    .....மாபெரும் போதனை
    அச்சாகப் பதிந்து
    ..... அச்சமாய் ஆனதே

    முடிவாகும் நாளில்
    ....முடிவைக் கண்டேனே
    முடிவாக நானே
    .....முடிவு செய்தேனே


    கலிமாவைச் சொல்லி
    .....கடைசி மூச்சுபோக
    சலியாமல் நாவும்
    ....சதாவும் ஓதவேண்டும்

    அசைவுகள் எல்லாம்
    .....ஆன்மாவில் அடங்கும்
    அசைவிலாத் தோற்றம்
    ....அங்கேதான் கிடக்கும்

    அகத்தின் ஒளியே
    ....அழகாய் மிளிர
    முகத்தின் சிரிப்பில்
    .....முழுதாய் உணர்ந்தேன்

    ஓடி உழைப்பதும்
    ....ஓரதிர்வில் ஓயும்
    ஆடி அடங்கிடும்
    ...ஆறடியில் சாயும்

    மரணம் பயமன்று
    ...மறுமையின் பயணமென்று
    வரணும் விசுவாசம்
    ....வளரணும் சுயமுயற்சி

    நன்மைகள் செய்தாலே
    .....நல்லவர்கள் வழுத்தும்
    தன்மையில் கைகூடும்
    ...தன்னிறுதிப் பயணம்




அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

No comments:

Post a Comment