தாலாட்டு
கருவறையில் உறங்கிட
கருணையாளன் வழங்கிடும்
அருமையான முறைகளே
அளவற்ற தாலாட்டு!
தூளியை ஆட்டி
தாயவள் பொழிவாள்
தோளில் சாய்த்து
தந்தையும் தருவார்
தாலாட்டுப் பாடலாய்த்
தணிக்கும் அழுகையை
வாலாட்டும் மழலையும்
வாய்பொத்தி உறங்கவே
கற்றவர் சபையிலே
கண்ணியமாய்க் கைதட்டிப்
போற்றப் படுதலும்
புண்ணியமாய்த் தாலாட்டு
வணிகமும் தொழிலும்
வளம்தரும் ஆக்கம்
பணிகளும் சீர்பட
பயன்தரும் ஊக்கம்
அரியதாய்த் தாலாட்டு
அஃதொரு சீராட்டு
பெரியதாய்ச் சாதிக்க
பேறுபெற்ற பாராட்டு
மனைவிதரும் அன்பு
மடிமீது சாய்ந்து
மனமெங்கும் பூசும்
மகிழ்வானத் தாலாட்டு
படகுக்குத் துடுப்பும்
படிப்புக்குத் துடிப்பும்
கடலுக்கு அலையும்
காற்றுக்கு இலையும்
தாலாட்டு என்பேன்!
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
ஒவ்வொரு வரியும் அருமை... ரசித்தேன்....
ReplyDeleteநன்றி...
(இன்னொரு தளத்திலும் கருத்திட்டேன்...)
நன்னெறி படுத்தும் தாலாட்டு .நல்லதோர் கவிதையில் தாலாட்டு .
ReplyDelete