Saturday, November 17, 2012

தியாகம்


தியாகம்





தீயகம் களைவதே
....தூயநல் தியாகமாம்
ஐயமில் விருப்பமும்
....ஆங்குதான் உதயமாம்



சோம்பலின் எதிரியாம்
....சொர்க்கத்தைத் தருவதாம்
காண்பதில் அரியதாம்
....கர்ப்பத்தில் உரியதாம்



தூய்மையின் பிறப்பிடம்
....தியாகத்தின் உறைவிடம்
தாய்மையின் சிறப்புதான்
....தரணிக்கே முதலிடம்



விழுப்புண் போலவே
...வியர்வை விழவே
உழைக்கும் தந்தையும்
....உயர்வின் தியாகி


தோணியாய்க் கரைசேர்க்கத்
...தோழமையின் உணர்வுடன்
ஏணியாய் இருந்தார்கள்
....ஏற்றிவிட்ட  தியாகிகள்



வானத்தின் தியாகமதை
....வடித்துவைக்கும் மேகமழை
தானத்தின் செடிகளெலாம்
....தியாகவிதை   வீசியதே


பசித்தவரின் துயரத்தைப்
....பசித்திருக்கும் பயிற்சியினால்
ருசித்துணரும் தியாகத்தை
.....ருசித்தவர்தான் உணர்ந்திடுவர்



இறையின் கட்டளை
....இறுதிக் கடமையை
முறையாய்ச் செய்வதும்
....முழுமைத் தியாகமே




-- அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர் “கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

3 comments:

  1. அருமை...

    தியாகம் நல்ல மனித உருவாக்கம்...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வரும் உங்களின் அன்பான வருகைக்கு நெஞ்சம் படர்ந்து வரும் நன்றியை உரித்தாக்குகிறேன்!

      Delete