Sunday, September 18, 2011

முன்மாதிரி கிராமம்- வி.களத்தூர்


வரதட்சணை என்ற கொடி நோயை விரட்டி நாட்டிற்கே நல்ல முன் மாதிரியாகவும் பல ஊர்களுக்கும் முன்னோடியாக விளங்கி வருவது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.களத்தூர் கிராமம்.

1999-லேயே வி.களத்தூரில் வரதட்சணை ஒழிப்புக்கான கருத்தாய்வு செய்யபட்பட்டு இதற்கான முன்வடிவை ஐமாஅத் ஒருங்கிணைந்த வி.களத்தூர் முஸ்லிம் பொதுமக்கள் கொண்டுவந்தனர். இது பலவிதமான பரீட்சார்த்த முறைகளை கண்டறிந்து சோதனைக் காலமாக இரண்டு வருடம் நடைமுறைப்படுத்திää பின் இறுதிகட்ட வடிவைக் கண்டது. இறுதிக் கட்டவடிவை ஒரு சட்ட நூலைப் போல் உண்டாக்கி அதை வி.களத்தூர் முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் விநியோகித்தனர். அதன் பிறகு வரதட்சணை எனும் கொடிய நோய் அல்லாஹ்வின் அருளால் வி.களத்தூரிலிருந்;து விரட்டியடிக்கப்பட்டு விட்டது.

திருமணத்தின்போதே வரதட்சணை வாங்கவோ கொடுக்கவோ இல்லை என்றும் இனியும் வாங்கவோ கொடுக்கவோ மாட்டோம்  என்றும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உறுதிமொழி வாங்கிவிடுகின்றனர்.

நிச்சயதார்த்த நிகழ்ச்சி; தேநீர் பிஸ்கட்டுடன் எளிமையான முறையில் நடைபெற முறைப்படுத்தப்பட்டுள்ளது. பெண் அழைப்புதிருமணத்திற்கு பிறகான விருந்து போன்ற இன்னபிற ஆடம்பர செலவினங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்போது அங்கே பெண் கொடுப்பதும் வாங்குவதும் எளிதாகிவிட்டது. இவ்வூரின் சமுதாய சீர்திருத்தத்தைக் கண்ட பெரம்பலூர் மாவட்டத்தின் பிற ஊர்களும் நடைமுறைப் படுத்திவருகின்றனர். அங்கும் வரதட்சனை ஒழிப்பு நூல் வெளியிடப்பட்டு பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்யப்படுகிறது என்பது வி.களத்தூர் ஐமாஅத் மற்றும் இளைஞர்களின் முயற்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

இவை அனைத்தும் வி.களத்தூரில் நடைமுறையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு
வருகிறது.  தற்போது ரமளானில் இருந்து  ஜகாத் பவுண்டேஷன் செயல் பட துவக்கியுள்ளார்கள்.இந்நடைமுறைகள் அனைத்து ஜமாஅத்களிலும் செயல்படுத்தபட வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி துஆ செய்தவனாக வி.களத்தூர் ஜமாஅத்தினர்களையும் எமது திருபுவனம் வலைதளம் சார்பாக பாராட்டுகிறேன்.

தனக்கு என்று வாழ்வதைவிட நமக்கு என்று வாழ்வது சிறப்பு, அதனினும் நம் சுற்றத்தாரின் துயர் துடைக்க பொதுநலனுக்காக வாழ்வது சிறப்பு. அந்த நல்ல சிந்தனையை மனதில் கொண்டு நமதூர் சகோதரர்களால் வி.களத்தூர் ஜக்காத் பவுண்டேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஜக்காத் பவுண்டேஷன் நமதூரில் ஒரு புதிய புரட்சி ஒன்றை மலரச்செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஷா அல்லாஹ்…
இந்த ஜக்காத் பவுண்டேஷன் அமைப்பதற்காக கடந்த வாரம் புஷ்ரா, ஐஎம்சிடி மற்றும் பொதுச்சேவையில் நாட்டம் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பினை ஏற்று அனைவரும் வருகை தந்தனர். வெள்ளிக்கிழமை (05.08.2011) இரவு துபை பிஸ்மில்லா ரூம் மாடியில் கூட்டம் நடந்தது. சிறப்பு மிக்க இந்த கூட்டத்தில் வி.களத்தூர் ஜக்காத் பவுண்டேஷன் என்ற அமைப்பு உறுவாக்கப்பட்டு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்த ஜக்காத் பவுண்டேஷன் மூலமாக நமதூர் மக்களிடம் அவர் அவர்களின் ஜக்காத் தொகை மற்றும் சதக்காவினை வசூல் செய்து நமதூரில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு கொடுத்து அவர்களை ஏழ்மையில் இருந்த வெளிவரச்செய்வது இதன் முக்கிய நோக்கமாகும். இந்த அரவனைப்பின் மூலம் அடுத்த அடுத்த ஆண்டுகளில் அவர்கள் மற்றவர்களுக்கு ஜக்காத் தரக்கூடிய சூழலை உருவாக்க நாடியுள்ளது. இன்ஷா அல்லாஹ்..
இந்த ஜக்காத் பவுண்டேஷன் பற்றி உங்களுக்கு சில கேள்விகள் தோன்றும் அதாவது முதலில் நமது சொந்த பந்தங்களுக்கு ஜக்காத் கொடுப்பது தானே சிறப்பு. இந்த அமைப்பிற்கு நாம் நம்முடைய ஜக்காத் தொகையை கொடுத்துவிட்டால் ஜக்காத் வாங்குவதற்காக நமது வீடு தேடி வரும் நமது சொந்த பந்தங்களுக்கு என்ன செய்வது, அவர்களுக்கு எப்படி இல்லை என்று சொல்வது, நாம் கொடுக்கும் தொகையை நமது சொந்த பந்தங்களுக்கு கொடுப்பார்களா? என்று என்ன தோன்றும். ஜக்காத் தொகையை நமது சொந்த பந்தங்களுக்கு தான் கொடுக்க வேண்டும் அது தான் சிறந்ததும் ஆகும். ஆனால் நீங்கள் கொடுக்கும் சிறு தொகையை வைத்து அவர்களுக்கு அன்றாட வாழ்விற்குத்தான் சரியாக இருக்கும். அதுவே அனைத்து ஜக்காத் தொகையும் ஒன்றாக இனைத்து கொடுக்கும் போது அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவுவதோடல்லாமல் ஏழ்மையில் இருந்து விடு பட ஏதுவாக இருக்கும்.
அதற்காக இதுவரைவந்து ஜக்காத்தை வாங்கி சென்றவர்களிடம் இல்லை என்று சொல்ல வேண்டாம். அவர்களுக்கும் கொடுங்கள் உங்களுடைய ஜக்காத் தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்லது சதக்காவாக நமது ஜக்காத் பவுண்டேஷனுக்கு கொடுங்கள். இந்த வருடம் நாம் செய்ய இருக்கும் வினியோக முறைகளைப் பார்த்து அடுத்தடுத்த வருடங்களில் ஜக்காத் தொகை கூடுதலாக வரும்போது நமதூரை எழைகளே இல்லாத ஊராக மாற்றலாம். இது சற்றென்று முடியும் காரியமல்ல என்பது எல்லோருக்கும் தெரியும் சில வருடங்கள் ஆகலாம் ஆனால் மாற்ற முடியும் ஆண்டவன் உதவியுடன்.
நீண்ட, நெடிய ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த ஜக்காத் பவுண்டேஷன் நிறுவப்பட்டுள்ளது. இது எந்த ஒரு சேவை அமைப்பையும் சார்ந்ததல்ல நமதூருக்கு பொதுவானது. நமதூரின் சேவை அமைப்புகளின் பிரதிநிதிகளையும் பொதுச்சேவை மணம் கொண்டவர்களையும் மார்க்க ஆலோசனைகளுக்காக ஆலிம்களையும் இனைத்து நமதூருக்காக துவக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வசூல் செய்யப்படும் அனைத்து ஜக்காத் மற்றும் சதக்காக்களை முறையாக வினியோகம் செய்ய இருக்கிறார்கள். வரவு செலவுகள் முறையாக ஆடிட்டிங் செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
இந்த வி.களத்தூர் ஜக்காத் பவுண்டேஷன் தலைவராக மௌலவி. எம்.ஹெச். நூருல்லாஹ், அவர்கள் செயல்படுவார்கள். துபையில் ஜனாப். எப். அலிராஜா, ஜனாப். சேட் சர்புதீன் (வி.களத்தூர் துபை சங்க துணை தலைவர்) சகோதரர் பி. அஹமது அலி (தலைவர் ஐஎம்சிடி), எப். அப்துர் ரஹ்மான் (பொருளாளர் புஷ்ரா சேவை அமைப்பு) ஆகியோர் நிர்வாகிகளாக செயல் படுவார்கள்.
2:277 إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
2:277. யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
1403. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, ‘நானே உன்னுடைய செல்வம்” ‘நானே உன்னுடைய புதையல்” என்று கூறும்.”
இதைக் கூறிவிட்டு, ‘அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.” என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஆதாரம் : ஸஹீஹ் புஹாரி 1403
உங்களுடைய ஜக்காத் தொகை கீழ்கண்ட நபர்களிடம் கொடுக்கவும்.
துபை
1. எப். அலிராஜா மொபைல் – 050 6523501
2. சேட் சர்புதீன் மொபைல் – 055 9828616
3. பி. அஹமது அலி மொபைல் – 050 5848935
4. எப். அப்துர் ரஹ்மான் மொபைல் – 050 6402386
அபுதாபி
1. நூருல் ஹக் மொபைல் – 050 5660780
2. கெ. அப்துல் ஹக்கீம் மொபைல் – 050 3440786
3. எம். ஜாபர் சாதிக் மொபைல் – 050 7565955
ராசல் கைமா
1. ஜெ. பாருக் மொபைல் – 055 4434452
2. எஸ். சாதிக் பாஷா மொபைல் – 050 3230329
சார்ஜா
1. எ. சேக் தாவுத் மொபைல் – 055 4813518
சவுதி அரேபியா
1. பி. அப்துல் காதர் மொபைல் – +966558930403
2. நூர் முஹம்மது மொபைல் – +966595957492
கத்தார்
1. அப்துல் சுபஹான் மொபைல் – +97455201235
குவைத்
1. முஹம்மது யூனுஸ் மொபைல் – +96597239359
பஹ்ரின்
1. அன்ஸர் பாஷா மொபைல் – +97339774852
தாங்கள் எந்த நாட்டில் இருக்கின்றீர்களோ அந்தந்த நபர்களை தொடர்பு கொண்டு உங்களின் ஜக்காத் தொகை அல்லது சதக்காவை கொடுக்கவும். முக்கியமா ஜக்காத் கொடுத்தால் ஜக்காத்திற்கா என்றும் சதக்கா கொடுப்பதாக இருந்தால் சதக்கா என்றும் தெளிவாக சொல்லி கொடுக்கவும்.
உங்களுடைய ஜக்காத் தொகையை கணக்கிடுவதில் ஏதும் சந்தேகம் இருந்தால் மௌலவி எம்.ஹெச் நூருல்லாஹ் ஹஜ்ரத் அவர்களிடம் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு 050 3486824
ஜஸாக்கல்லாஹ் கைர்:

முஸ்லிம்கள் பெரும்பாண்மையான ஜமாஅத்களில் இது நடைமுறை சாத்தியம்தான். 
முயற்சி செய்யுங்கள் சகோதரர்களே! 
வல்ல அல்லாஹ் துணையிருப்பானாக! 

No comments:

Post a Comment