அதிரை. யுனிக்கோட் தேனீ உமர்தம்பி அவர்களுக்கு செம்மொழி மாநாட்டில்: உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவைய அங்கீகரிக்கும் வகையில் கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர்தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது
"உலக தமிழ் செம்மொழி மாநாட்டின்" ஒரு நாள் தமிழ் இணைய மாநாடு நடைபெற இருக்கிறது.. 24 ஆம் தேதி... அம்மாநாட்டு அரங்கில் உமர் தம்பி அவர்களின் பணிக்கு சிறப்பு சேர்பிக்கும் வகையில் ஓர் அரங்கிற்கு "உமர் தம்பி அரங்கம்" எனப் பெயர் சூட்டியுள்ளனர் இந்த அங்கீகாரம் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியான செய்தி.
உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டி நான் ஒரு பதிவை என் வலைதளமான கலைச்சாரலில் April 21, 2010 8:59.க்கு போட்டேன். அதில் நிறைய சகோதர சகோதரிகளின் ஆதரவும் இருந்தது. அத்துடன் அப்பதிவிலேயே சகோதரர் காஞ்சி முரளி அவர்கள் வலைத்தளப் பதிவில் போட்டால் மட்டும் போதாது. இக்கோரிக்கை நேரடியாகவோ அல்லது பேக்ஸ் மூலமாகவோ தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில் இது அரசு சம்மந்தப்பட்டது எதையும் நேரடியாக செய்யவேண்டும் என்றார்கள். அதனால் அவர்களை மெயில்மூலம் தொடர்புகொண்டு என்ன செய்யவேண்டுமென விபரம் கேட்டேன். அவர்கள் மெயில் ஐடிகள் தந்தார்கள்.
இதை இப்படி இப்படிசெய்யவேண்டும். இன்ன இன்னாருக்கு கடிதம் அனுப்பவேண்டுமென விபரமாக சொன்னார்கள். அவர்கள்சொன்னதுபோல் தமிழக துணை முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு . Tue, Apr 27, 2010 at 6:40 AM அன்று கடிதம் எழுதினேன்
அக்கடிதத்தோடு, நான் கலைச்சாரலில் போட்ட பதிவிற்கு ஆதரவு தெரிவித்த அத்தனை கருத்துரைகளையும் சேர்த்து மாண்புமிகு துணை முதல்வர் வலைதளத்தின் தலைமை நிர்வாகியான திரு ஹசன் முகம்மது ஜின்னா அவர்களுக்கு, துணை முதல்வர் பெயரில்
Wed, 5 May 2010 10:23:11அன்று உமர் தம்பி தொடர்பான கோரிக்கை அனுப்பினேன்...
இதுதான் நான் துணை முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவிலிருந்து சில.
""மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சார் திருமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு...
என் அன்பான வாழ்த்துக்களுடன்...
வலைதள தமிழை பயன்படுத்தும் தமிழன் என்ற முறையில்,
ஓர் தமிழனுக்கு ஓர் சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்க்கு,
தாங்கள் 'கோவை உலக தமிழ் செம்மொழி மாநாட்டில்' அங்கீகாரம் கிடைக்கும் - தாங்கள் நிச்சயம் செயல்படுத்தி காட்டுவீர்கள் எனும் நம்பிக்கையில் அயல்நாட்டில் வாழும் தமிழர்களின் சார்பாக
இக்கோரிக்கை மனுவினை தங்கள் முன் வைக்கிறேன்...
அனுப்புனர்:
திருமதி. மலிக்காஃபாரூக்
அடுத்தடுத்து யார் யார்க்கு மெயில் அனுப்பனுமோ அவர்களுக்கெல்லாம் மெயில்கள் அனுப்பினேன். அனுப்பியதோடல்லாமல் இடையிடையே விசாரித்துக்கொண்டேயிருந்தேன்.
அதன் காரணமாய். திரு.ஹசன் முகமது ஜின்னா அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்களின் பார்வைக்கு கொண்டுபோய்... துணை முதல்வர் மாநாட்டு செயலாளர் அலாவுதீன் அவர்களுக்கு பரிந்துரை செய்து, இது தொடர்பான குழு அமர்ந்து, இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்து, அதன் தொடர்ச்சியாக மாநாட்டினை முன்னிட்டு மாணவர்களுக்கான கணினி போட்டி நடைபெறுகிறது.. அப்போட்டியில் முதலிடத்தில் வெற்றிபெறும் மாணவருக்கு செம்மொழி இணைய மாநாட்டில் "உமர் தம்பி விருது" வழங்க உத்தேசித்து. பின்பு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தமிழ் இணையதள மாநாடு நடைபெறும் ஐந்து அரங்கத்தில் ஓர் அரங்கினுக்கு "உமர் தம்பி அரங்கம்" என உமர் தம்பி அவர்களுக்கு சிறப்பு சேர்த்துள்ளது தமிழக அரசு.
இறைவனின் உதவியால் உமர்தம்பி அவர்களுக்கு இந்த அங்கீகாரத்தை வழங்கிய தமிழக அரசுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
அதோடு இதற்கு பேருதவியாக இருந்த நல்லுள்ளங்கள். சகோதரர் காஞ்சி முரளி, திருவாரூரில் பிறந்த சகோதரர், வழக்கறிஞர் திரு. ஹசன் முகமது ஜின்னா, உலக தமிழ் மாநாட்டு செயலாளர் திரு. அலாவூதீன். அவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.
என்னுடைய இந்த அன்பான வேண்டுகோளை ஏற்கச்சொல்லி திரு. ஹசன் முகம்மது ஜின்னா அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் சொல்லியபோது மறுக்காமல், செய்ய சொல்வதாய் சொல்லியதோடு இல்லாமல் அதை நிறைவேற்றிதந்த
”உமர் தம்பி அரங்கம்” பெயர் வைத்திட முழுக்காரணமாக இருந்த மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் மாநாட்டு செயலாளர் அலாவுதீன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்..
ஒரு நல்ல விசயத்துக்காக என்னாலான சிறு உதவி. இந்த நல்ல காரியத்தைச் செய்ய என் மனதில் ஊக்கத்தை ஏற்படுத்திய இறைவனுக்கே என் சிரத்தை தாழ்த்துகிறேன்..
எந்த ஒரு அடியானும் அவன் சக்திக்குமீறி சோதிக்கப்படுவதில்லை.
அதேபோல் எந்த ஒரு நல்ல மனிதருக்கும் அவரின் நல்லதொரு செயல்களுக்கு தகுந்த கூலி வழங்கப்படாமலிருப்பதில்லை என்பது இறை வாக்கு. அதன்படி தான் உயிரோடுயிருக்கும்போது செய்த நல்லதொருக் காரியம், தான் இறந்தபின்னும் உலகவாசிகள் பயனடைவதுபோல் செய்து சென்ற உமர்தம்பி அவர்களுக்கு, தற்போது கிடைத்திருக்கும் அங்கீகாரம் சாலச்சிறந்ததே!
இது நன்மை செய்தவருக்காக இறைவன் அளித்த நற்கூலி அல்கம்துலில்லாஹ். எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நான் கலைச்சாரலில் இட்ட பதிவுக்கு ஆதரவு தெரிவித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி..
டிஸ்கி// எனது தந்தையும் அதிரையென்பதால்
எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..
இத்துடன் நான் சகோதரர் தாஜுதீன் அவர்களின் பதிவில் இட்ட கருத்துரைகளும். சகோதரரின் பதில்களும்.
அன்புடன் மலிக்கா, Thursday, April 22, 2010
நிச்சியம் கிடைக்கனும். இன்ஷா அல்லாஹ்.
நானும் இப்பதிவை போட்டுள்ளேன்.
http://kalaisaral.blogspot.com/2010/04/blog-post_21.html
தாஜூதீன், Thursday, April 22, 2010
அன்புடன் மலிக்கா.
வருக்கைக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி.
அன்புடன் மலிக்கா, தங்களின் வலைப்பூவிலும் இந்த வெளியிட்டதற்கு மிக்க நன்றி. இந்த முயற்சிகளுக்கு பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிரகாசமாக உள்ளது.
அன்புடன் மலிக்கா, Sunday, May 02, 2010
அன்புச்சகோதரர் அவர்களுக்கு.
இது சம்மந்தமாக தெரிவிக்கவேண்டி இடத்திற்க்கு என்னால் ஆன ஒரு சிறு முயற்ச்சியை செய்துள்ளேன்.
அந்த முயச்சிக்கு பலன் [கிடைக்குமென்ற நம்பிக்கையிருக்கு]நிச்சயம் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்வோம்..
தாஜூதீன், Sunday, May 02, 2010
சகோதரி மலிக்கா அவர்கள், உங்களின் தனிப்பட்ட முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம், தேனீ உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க உண்மையில் உங்களை போன்ற மற்ற தமிழ் ஆர்வளர்களின் வேண்டுகோள் நிச்சயம் நிறைவேறும் என்று நம் அனைவரின் நம்பிக்கை.
நம்பிக்கையின்படியே இறைவன் நிறைவேற்றித்தந்துவிட்டான்..அல்ஹம்துலில்லாஹ்!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
thanks
http://niroodai.blogspot.com/
நல்லதொரு முயற்ச்சிசெய்து அதை நிறைவேற்றிக்காட்டிய சகோதரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்...
ReplyDelete