ரஸ்டன்பர்க்: இங்கிலாந்து, அமெரிக்க அணிகள் மோதிய பரபரப்பான உலக கோப்பை லீக் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிரா'வில் முடிந்தது. இங்கிலாந்து கோல்கீப்பர் ராபர்ட் கிரீன் செய்த தவறு, அமெரிக்காவுக்கு சாதகமாக அமைந்தது.
தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று இரவு ரஸ்டன்பர்க்கில் நடந்த "சி' பிரிவு லீக் போட்டியில் இங்கிலாந்து, அமெரிக்க அணிகள் மோதின.
ஜெரார்டு கோல்:
முன்னாள் உலக சாம்பியனான இங்கிலாந்து அணி, எதிர்பார்த்தது போலவே துவக்கத்தில் கலக்கலாக ஆடியது. ஆட்டம் துவங்கிய நான்காவது நிமிடத்திலேயே கேப்டன் ஸ்டீவன் ஜெரார்டு சாமர்த்தியமாக கோல் அடிக்க, இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. 14வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஆன்யவு தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணாக்கினார்.
கீப்பர் தவறு:
ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் அந்த அதிர்ச்சி அரங்கேறியது. அமெரிக்காவின் கிளின்ட் டெம்ப்சி அசுர வேகத்தில் பந்தை அடித்தார். அதனை இங்கிலாந்து கோல்கீப்பர் ராபர்ட் கிரீன் பிடித்து, பின் நழுவவிட, பந்து கோல் லைனை கடந்து உள்ளே செல்ல, அமெரிக்க ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். இங்கிலாந்துக்கு எதிராக கோல் அடித்து வரலாறு படைத்தார் டெம்ப்சி. அதே நேரத்தில் மாபெரும் தவறு செய்த கிரீன், ரசிகர்களிடம் கை அசைத்து மன்னிப்பு கேட்டவாறு சோகத்தில் மூழ்கினார்.
பெக்காம் அதிர்ச்சி:
காயம் அடைந்த நிலையில் களத்திற்கு வெளியில் இருந்து இங்கிலாந்து அணிக்கு உற்சாகம் அளித்த பெக்காம், கீப்பர் செய்த தவறை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார். இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க, முதல் பாதி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
முயற்சி வீண்:இரண்டாவது பாதியில் இங்கிலாந்து வீரர்கள் கோல் அடிக்க கடுமையாக போராடிய போதும், பலன் கிடைக்கவில்லை. 52வது நிமிடத்தில் ஹெஸ்கி, வாய்ப்பை நூலிழையில் நழுவ விட்டார். அமெரிக்க தற்காப்பு பகுதி பலமாக இருந்ததால், லாம்பார்ட், ரூனேயின் முயற்சிகளும் வீணாகின. கோல்கீப்பர் கிரீன் செய்த தவறு, இங்கிலாந்தின் வெற்றியை பறிக்க, போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் "டிரா' ஆனது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன.

No comments:
Post a Comment