Sunday, June 20, 2010

ஜெய்லானி காக்காவும்,தனி பாணியும்...........

இவர் பேனாவில் என்ன ஊற்றி எழுதுகிறார் என்றே தெரியவில்லை.அவ்வளவு நளினம்.ஒவ்வொரு கட்டுரையும் தனி ரகம்.சம்பவங்களை சொல்லும் பாங்கு மிக அருமை.

//போனதும்  முட்டை ஃபிரை ஆகிடுமோ
சுட்டதும் அது கேக் ஆகிடுமோ
கடைக்கு வந்த பிறகும் தவிக்கும் இந்தச் மனசு
எதுக்கு இங்கே வெட்டிப் கொக்..கொக்...( கொக்கொரக்கோ..)
தொண்டை தண்ணீர்தானே வத்திப்போச்சு
இன்னும்  ஏது?//

நான் ரசித்து சிரித்த கவிதை.



        //மொபைல் போன் கலாச்சாரமாக மாறியதால்  ஏர் போர்ட் போவதிலிருந்து  விமானம் கிளம்பும் நேரம் வரை பேசிய பேச்சுக்கள எத்தனை எத்தனை..... தனிமையில் வருடங்கள் சில போனாலும் சில மனிநேர பயணம் தவிப்பாய் அல்லவா போகிறது.//


மனம் நமக்கும் கனக்கிறது.சமீபத்தில் ஏர்  இந்தியா விமானம் மங்களூரில் விபத்துக்குள்ளானதை இப்படி விவரிக்கிறார்.

மொத்தத்தில் மகிழ்வோ - சோகமோ எதையும் விலாவரியாக நன்றாக விளக்கும் தன்மை இவரிடம் மேலோங்குகிறது.

நான் ரசிச்சத,நீங்களும் போய்   பார்த்து ரசிங்களேன்.

வாழ்த்துக்கள் ஜெய்லானி காக்கா 
         
http://kjailani.blogspot.com/

5 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் .( வரஹ் )பல பேர் ரொம்பவும் உபயோகமாக விஷயங்கள் எழுதி வருவதால் ஒரு ரிலாக்ஸாக வே இப்படி எழுதுவது. பாராட்டுக்கு ரொம்ப நன்றி.

    இன்னும் சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன்.இன்ஷா அல்லாஹ். வ அஸ்ஸலாம்.

    ReplyDelete
  2. பேனா முனையில் என்னுடைய பெயருமாஆஆஆ.ஜெய்லானீஈஈ புகழ்போதை கண்ணை மறச்சிடும் உஷாராயிக்கோ. பல நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்தும் பேனா முனைக்கு என் உள்ளம் கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  3. ஆகா. ஜெய்லானி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். அறிமுகப்படுத்திய பேனாமுனைக்கு நன்றி..

    நீரோடைப்பக்கம் வந்துபோங்க..

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,உங்கள் விருதுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  5. சகோ.ஜெய்லானிக்கு வாழ்த்துக்க்ள்.

    ReplyDelete