Sunday, February 21, 2010
இனிய பாதையில் ஒரு அரசி..........
அஸ்ஸ்லாமு அலைக்கும்.
என்னைப்பற்றி என்னசொல்வது. நான் அதிரையும், முத்துப்பேட்டையையும் சேர்ந்தவள். தற்போது துபையில் வசிப்பவள்.அன்பான அமைதியான குடும்பத்தைப்பெற்றவள்.அதிகம் படிக்காதவள், இறைவன் மீது அளவுகடந்த பிரியம் வைத்திருப்பவள். அவனின்றி அணுவும் அசையாது என்பதில் உறுதியானவள் உண்மைச்சொல்லனுமென்றால் இறைவனை நேசிபதில் இன்பம் பெறுபவள்.
எனக்கு தெரிந்த நான் அறிந்த சன்மார்க்கத்தை, பிறருக்கும் புரியும் வகையில் இஸ்லாத்தை அனைவருக்கும் எத்திவைக்கவேண்டும் என்பது என் ஆவல்,அதற்கான முயற்ச்சியில் தற்போது இனிய பாதையில். என்ற என் வலைப்பூவிலன்மூலம் ஆரம்பிதிருக்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவனும் துணைப்புரியவேண்டும்,அவனுடைய அருளிருந்தால் எதையும் வெல்லலாம் இன்ஷா அல்லாஹ்..
கவிதை எழுதுவதிலும் மிகுந்த ஆர்வம்.
கைவண்ணக்கலைகளிலும் ஆர்வம் .
மிக்க நன்றி
அன்புடன் மலிக்கா
இது சகோதரி அவர்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு.
இனிய பாதையில்
இருளை அகற்றி சிறு ஒளியைத் தேடும் என் ஆன்மாவின் பயணம் என்ற அவர்களின் அந்த பிளாக்,எளிய நடையில்-குரான் மற்றும் ஹதீஸின் விளக்கங்களைப்பற்றி பேசுகிறது.
இப்போதுள்ள பிளாக் உலகில் சிலர் தம்மைப் பற்றி பெருமை பேசவும்,அவர்களுடைய பிளாகிற்கு வரும் புகழ் மாலைகளுக்கு மயங்கியும்,விமர்சனம் என்றால் தாங்கிக் கொள்ளாமலும் இருக்கும் பலருக்கு மத்தியில் சத்தியம்-உண்மை எது என்று அறிந்து,அதை மக்களிடயே எடுத்துவைக்கும் சகோதரி மலிக்கா அவர்களுடைய இந்த நல் முயற்சி மிக பாராட்டத்தக்கது.
உண்மை எது என்று தெரிந்து கொண்டுவிட்டு,இதை எழுதினால் நமக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு போய்விடும் என்றோ,நாம் பொதுவாகவே எழுதிவிட்டு போய் விடுவோம் என்று எண்ணமுள்ளவர்கள்,சகோதரி மலிக்காவின் இந்த தளம் சென்று நோக்கி திருந்திக் கொள்ள ஒரு வாய்ப்பு.
உண்மையை எழுதும்போது எல்லாரும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு,அவர்களின் கருத்துக்கு கிடைத்த வரவேற்பை கண்டு புரிந்து கொள்ளலாம்.
அன்புச்சாமி said...
/சோதனை. மண்ணில் பிறந்த, பிறக்கின்ற, பிறக்கப்போகின்ற, ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் உண்டு/
சத்தியமான உண்மை நாங்களும் நல்ல்வைகளை அறிய இன்னும் எதிர்பார்க்கிறோம்.
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்ல அருமையான விளக்கங்கள் மலிக்கா
அருமையான துவா
இறைவன் நம் பிராத்தனைகளை செவி சாய்ப்பானாக ஆமீன்
Rajakamal said...
புகழ் போதைக்கு மயங்காத மனிதனே இல்லை இறையச்சம் உடைய மூமீன்களைத் தவிர, இப்போதெல்லாம் மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏதோ ஒரு பலன் கருதிப் புகழ்கினர் உணமையான நெஞ்சார்ந்த புகழ்ச்சிக் குறைவு, தகுதியே இல்லாதவர் புகழப் படுகிறார் முகத்துக்கு நேராகவே. இதன் தீமைகளை விட்டும் அல்லஹ் நம்மை பாதுகாப்பனாக ஆமின். இறைவசனங்களை புகழ்சியின் தீமைக் கெதிராக கேடையமாக பிடித்துக் கொள்வோம். நல்ல அருமையான பதிவு சகோதரி.
இன்னும் நல்ல விளக்கங்கள் பல் எழுதி-ஏகனின் திருப்பொருத்தம் கிடைத்திட இந்த அரசிக்கு (மலிக்கா)வாழ்த்துக்கள் பல.(சகோதரிக்கு சிறு வேண்டுகோள்,சில இடங்களில் எழுத்துப் பிழைகள் காணப்படுகின்றன,அதை திருத்திக்கொள்ளவும்.)
இனி நீங்களும் சென்று-சுவைத்துப் பாருங்கள்.
http://fmalikka.blogspot.com/
Subscribe to:
Post Comments (Atom)
அல்ஹம்துலில்லாஹ்.
ReplyDeleteதாங்களின் இப்பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
உண்மைக்கு ஒருபோதும் அழிவில்லை
உண்மையை உலகுச்சொல்வதில் அச்சமில்லை.
என்னையும், தாங்களையும், இவ்வுலகில் உள்ள அனைத்து மக்களையும். நேரானபாதையில் ஈமானின் பற்றுதலோடு ஈருலகவாழ்க்கைக்கும் நம்மை
தயார்படுத்திக்கொண்டவாறு நடக்கும்படியாக எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் பாலிப்பானாக!
என்னுடைய எழுத்துப்பிழைகளை நிச்சயம் சரிசெய்துக்கொள்கிறேன். இனி பிழைகள் வராதவாறு பார்த்துக்கொள்கிறேன்.
தாங்களின் அன்புக்கு மிக்க நன்றி.
இன்னும் நிறைய தளங்களை தேடி அறிமுகப்படுத்துங்கள்..
அன்புடன் மலிக்கா
உங்கள் அன்புக்கும்,துவாவுக்கும் நன்றி சகோதரி.
ReplyDeleteமலிக்கா என்றால் அரசியா.
ReplyDeleteபெயருக்கேற்ற நல்லவங்க, அவர்களுடைய பிளாக்கில் நான் நிறையக்கற்றுக்கொண்டேன்.
எல்லாத்திலும் நல்ல திறமை கவிகளிலே நிறைய விழிப்புணர்வும் தருபவர்.
அவர்களைபற்றி தாங்கள் அறிமுகப்படுத்தியதில் பெருமையே மிக்க நன்றிங்க..
அவர்களூக்கும் பாராட்டுக்கள்
மலிக்கா வாழ்த்துக்கள்.
ReplyDeleteமலிக்காவின் , என் இனிய பாதையில்,கதை, கவிதை கட்டுரை, சமையல்,கை வண்ணம் அனைத்து படப்புகளும் அருமை மேலும் உங்கள் புகழ் மேன் மேலும் உயர என் அன்பான வாழ்த்துக்கள் ஆண்டவன் அனைவருக்கும் நல் கிருபை புரிவானக.
நல்ல தேர்வு. இவர்களின் படைப்புகள் மிக அருமை
ReplyDeleteதமிழ்குடும்பதிலிருந்தே இவங்களைத்தெரியும்.
நல்ல தோழி. எழுத்துக்கள் மிக அருமை. அனைத்திலும் கலக்குறாங்க.
தாய் தந்தையைப்பற்றியும் மனிதக்கடவுளைபற்றியும் மிக தெளிவாக தெரிந்துக்கொண்டேன். நன்றி பேனாமுனை.
வாழ்த்துக்கள் மலிக்கா
//தாய் தந்தையைப்பற்றியும் மனிதக்கடவுளைபற்றியும் மிக தெளிவாக தெரிந்துக்கொண்டேன்.//
ReplyDeleteசகோதரி நந்துனி, மனிதக் கடவுள் என்று யாரும் கிடையாது.மனிதன் கடவுளாக முடியாது.தாய்-தந்தையானாலும் சரியே.படைத்த இறைவன் ஒருவனே,அவனையே நாம் வணங்கவேண்டும்,அவனால் படைக்கப்பட்டவைகளை அல்ல.நம் தாய்-தந்தையும் அந்த ஏக இறைவனால் படைக்கப்பட்டவர்களே.நன்றி
மிக்க நன்றி ஜலீலாக்கா. தாங்களின் வாத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி
ReplyDeleteநந்து எப்படி யிருக்கீங்க நான் டி கேக்கு வரமுடியலைபா முன்னாடி மாதரி.
ReplyDeleteஆனாலும் என்னைதேடி வந்து வாழ்த்துக்கள் தந்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சியடைக்கிறேன்.
என் எழுத்துகளின் பயனை அறிகிறேன்
அத்தோடு தாங்களுக்கு அழகாய் விளக்கிய பேனாமுனைக்கு மிக்க நன்றி..
நீரோடையில்: நாட்புறப்பாட்டும்.[விவசாயாத்தை பற்றி]
இனிய பாதையில்:
இல்லறமே நல்லறம். எழுதியிருக்கேன் பாருங்க..