Sunday, February 7, 2010

அநீதிக்கெதிராக ஒரு தூரிகை.


இந்தவார தேர்வாக சகோதரி பாத்திமா ஜொஹ்ராவின் அன்போடு உங்களை அறிமுகப்படுத்தப்படுகிறது.பேச்சு வழக்க முறையில் எழுதினாலும்,வரதட்சணை,வட்டி,ஹராமான சம்பாத்தியம் போன்ற அநியாயங்களை ஒரு பெண்ணாக இருந்து கடுமையாக சாடி,மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு செல்லும் பாங்கு அருமை.அந்த பேச்சு வழக்கு மக்களிடம் நன்றாக ரீச் ஆகி வருகிறது என்பதை அவர்களின் பதிவுக்கு கிடைத்த சில கமெண்ட்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

ஏனோ தானோ என எழுதும் (ஆணோ-பெண்ணோ)இக்காலத்தில் உண்மையை-சத்தியத்தை தைரியமாக எழுதும் எழுத்துப் போராளிகள் பாத்திமா ஜோஹரா,சுமஜலா ஆகியோர் என்றால் மிகை அல்ல.

கமெண்ட்கள் பார்வைக்கு சில............

Anbu Thozhan said...

தெளிவான சிந்தனையோட..... தெள்ள தெளிவான விளக்கத்தோடு..... சம்மந்த பட்டவர்களுக்கு மண்டையில் நறுக்குனு நாலு கொட்டு கொட்டி புரியவைப்பது போன்ற எழிய நடையுடன் கூடிய ஒரு ஆக்க பூர்வமான பதிவு.... எல்லாம் வல்ல இறைவன் நம் எல்லோருக்கும் நேர்வழி புரிவானாக....

thenammailakshmanan said...

உங்கள் கருத்துகள் அனைத்தோடும் ஒத்துஇசைகிறேன் சகோதரி

மிக அருமையாக மென்மையாக கூறி இருக்கிறீர்கள்

ஹுஸைனம்மா said...//இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?//

அதானே?

நல்ல விரிவா, தெளிவா விளக்கியிருக்கீங்க ஃபாத்திமா. மாஷா அல்லாஹ்

அன்புடன் மலிக்கா said...

மிக மிக தெளிவான கட்டுரை அல்ஹம்துல்லிஹ் நம் அனைவரையும் இறைவன் நேரான பாதையின்பக்கம் நம்மை வழிநடத்திச்செல்வாகாக!

கவிக்கிழவன் said...

அழகான வரி நல்லா எழுதி இருக்குது

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு. முயற்சி, உழைப்பு. கூடவே பிரார்த்த்னை. மிகச் சரி.

சக்தி த வேல்..! said...

தகவலுக்கு நன்றி... நான் ஒரு ஹிந்துவாய் இருப்பினும் இஸ்லாம் மீதும் இஸ்லாத் மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவன்...இந்த பாவ பட்ட பூமியில் அல்லாஹ் வின் புகழ் ஒரு நாள் ஓங்கும்... பாவங்களெல்லாம் காணமல் கரைந்து ஓடும் என முஹமது நபிகள் போலவே நானும் நம்புகிறேன்.. அன்புடன் சக்தி..

இது சில துளிகள் மட்டுமே.

இனி,நீங்களும் சென்றுதான் பாருங்களேன்.

அவர்களின் இணைய தள முகவரி.


http://anboduungalai.blogspot.com/

2 comments:

  1. இந்த இரு சகோதரிகளின் எழுத்து மிக அருமையாக இருக்கும், பொதுவாக ஒரு பதிவு வந்தவுடன் படித்து விட்டு அடுத்த பதிவுக்காக ஒவ்வொரு நாளும் சென்று பார்த்து வருவதுண்டு.

    ReplyDelete
  2. அன்பு சகோதரி பாத்திமா வாழ்த்துக்கள்.

    மேலும் நிறைய எழுதுங்கள்.

    //நானும் பாத்திமா ஜொஹ்ராவின் பல பதிவுகள் படித்துள்ளேன். குர் ஆன் வசன எடுத்துக்காட்டுடன் அருமையாக எழுதி இருப்பார்கள்//

    ReplyDelete