அநீதிக்கு எதிராக நியாத்தின் குரலாக
உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
அசத்தலான அறிவிப்போடு சிந்திக்க சொல்கிறது இத்தளம்.
இப்போதுள்ள எல்லா பிளாகுகளும் மத,அரசியல்,கட்டுரைகள்,இலக்கியம்,கவிதை என்று ஏதோவதொரு பிரிவிலோ,அல்லது ஊர் சார்ந்த செய்திகள் என்றோ,கதம்பமாக என்றோ பலதரப்பட்டு விஷயங்களை வழங்கி வருகின்றன.
ஆனால்,அதிலெல்லாம் வித்தியாசப்பட்டு-இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் இணைய தளம் மிக மிக வித்தியாசமாக,தினசரி செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து,சிந்திக்க வைக்கிறது.
மேலும்,வெறும் செய்தியாக மட்டும் சொல்லி விடாமல்,அதில் வெளிப்படும் உள் விஷயங்களையும் ஆராய்ந்து ,மூடி மறைக்கப்பட்ட செய்திகளை வெளிக் கொணர்ந்தும் ,உண்மைக்குப் புறம்பான செய்திகளை ஆய்ந்து,உண்மை எது என பறை சாற்றியும் சொல்லும் பாங்கு மிக அருமை.
ஒரு தின செய்திப் பத்திரிகை நடத்தும் தகுதியில் இருக்கிறார் இந்த இணைய தள நடத்துனர் PUTHIYATHENRAL அவர்கள். அவர்களின் அந்த தள முகவரி http://sinthikkavum.blogspot.com/
PUTHIYATHENRAL அவர்கள் தூத்துக்குடி பகுதியை சேர்ந்தவர்.பள்ளிப் படிப்பை சொந்த ஊரில் முடித்து,சொந்த தொழில் பல செய்து(அரிசி மண்டி)இப்போது அமெரிக்காவில் வணிகம் புரிந்து வருகிறார்.படிக்கும் காலத்திலிருந்தே சமூக நாட்டம் கொண்டு,பல தொண்டுகளை செய்து வருகிறார்.
அவரைப்பற்றிய சிறு வரைவு,அவரே கூறுகிறார்,"எனக்கு 19 வயது இருக்கும் இலங்கையில் இருந்த என்மாமா முறை உறவினர் ஒருவர் வூர் வந்திருந்தார். அவரு என்னையும் எங்கள் வூரு சில முஸ்லிம் பையன்கலயும் அழைத்து ஒரு விருந்து கொடுத்தார். விருந்து முடிஞ்சதும் ஒரு பயான் செய்தார் இளஞ்சர்கள் எல்லாம் ஒழுக்கமா இருக்கணும், இஸ்லாத்தை பத்தி நல்லா தெரிஞ்சிகிடனும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லணும் என்றார். எங்களுக்கு எல்லாம் நிறைய இஸ்லாமிய புத்தகங்கள் கொடுத்தார். நாங்க அப்போ 6 பேர் அவர் அழைப்பை ஏற்று அந்த விருந்தில் கலந்துகிட்டோம். எங்க 6 பேரை வைத்து ஒரு சங்கத்தை அவர் உண்டாக்கினார். அதன் பேர் லஜ்னதுள் இர்ஷத் ( தமிழில் நேர்வழி என்று பொருள்) இதன் செயலாளர் ஆகா இருந்து என் முதல் சமூக பணிகளை தொடங்கினேன். என் 21 வயதில் தௌஹீத் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தர்கா வழிபாடுகளை விட்டு விலகினேன் அல்ஹம்துலில்லாஹ்"
வாழ்த்துக்கள் PUTHIYATHENRAL.
இன்ஷா அல்லாஹ்,அடுத்த வாரம்,நல்லதொரு தள அறிமுகம் காணலாம்.
அதுவரை,சிந்திச்சுகிட்டே இருங்க!
//என் 21 வயதில் தௌஹீத் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தர்கா வழிபாடுகளை விட்டு விலகினேன் அல்ஹம்துலில்லாஹ்"//
ReplyDeleteஎல்லாம் வல்ல இறைவன் தான் நாடியவர்களுக்குதான் நேர் வழி காட்டுவான்
ல்லதொரு அறிமுகம். எல்லாம் வல்லைறைவன் நம் அனைவரையும் இணைவைப்பதைவிடும் காப்பாற்றுவானாக.
ReplyDeleteநீங்கள் கேட்ட என்னைப்பற்றிய குறிப்பை எப்படி தெரிவிப்பது உங்களுக்கு என்பதை தெரிவிக்கவும்..
அஸ்ஸ்லாமு அலைக்கும்.
ReplyDeleteஎன்னைப்பற்றி என்னசொல்வது. நான் அதிரையும், முத்துப்பேட்டையையும் சேர்ந்தவள். தற்போது துபையில் வசிப்பவள்.அன்பான அமைதியான குடும்பத்தைப்பெற்றவள்.அதிகம் படிக்காதவள், இறைவன் மீது அளவுகடந்த பிரியம் வைத்திருப்பவள். அவனின்றி அணுவும் அசையாது என்பதில் உறுதியானவள் உண்மைச்சொல்லனுமென்றால் இறைவனை நேசிபதில் இன்பம் பெறுபவள்.
எனக்கு தெரிந்த நான் அறிந்த சன்மார்க்கத்தை, பிறருக்கும் புரியும் வகையில் இஸ்லாத்தை அனைவருக்கும் எத்திவைக்கவேண்டும் என்பது என் ஆவல்,அதற்கான முயற்ச்சியில் தற்போது இனிய பாதையில். என்ற என் வலைப்பூவிலன்மூலம் ஆரம்பிதிருக்கிறேன்.
எல்லாம்வல்ல இறைவனும் துணைப்புரியவேண்டும்,அவனுடைய அருளிருந்தால் எதையும் வெல்லலாம் இன்ஷாஅல்லாஹ்..
கவிதை எழுதுவதிலும் மிகுந்த ஆர்வம்.
கைவண்ணக்கலைகளிலும் ஆர்வம் .
மிக்க நன்றி
அன்புடன் மலிக்கா
வாழ்த்துக்கள் சகோதரி அபு சுமையா.
ReplyDeleteவா அலைக்கும் அஸ்ஸலாம் பேனா முனை,
ReplyDeleteசிறந்த இனைய தளமாக தேர்ந்தெடுத்ததற்காகா மிக்க நன்றி + சந்தோஷம்.
என்னை பற்றி பெருசா சொல்லிக்க ஒன்றுமில்லை, என் பெயர் ஜலீலா, சென்னையில் பிறந்து வளர்ந்து, இப்போது துபாயில் வசிக்கிறேன். அன்பான கணவன், பாசமான இரண்டு ஆண் குழந்தைகள்.
எனக்கு தெரிந்த விஷியங்களை பெண்களுக்கான பயனுள்ள டிப்ஸ்கள்,குழந்தை வளர்பு,சமையல், மற்றும் தையற்கலை ,என்னிடம் உள்ள (நான் சேகரித்து வைத்துள்ள)முத்தான தூஆக்களை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
மற்றும் பிரபல வலைதளங்கள் அருசுவை.காம் மில் சமையல் குறிப்புகள், தமிழ்குடும்பம்.காம் மில் டிப்ஸ்கள், சமையல் குறிப்புகள்,குழந்தை வளர்பு கடந்த நான்கு வருடங்களாக கொடுத்து வருகிறேன், சில குறிப்புகள் சமையலறை.காம் மிலும் கொடுத்துள்ளேன்.
நான் கொடுக்கும் ஓவ்வோரு டிப்ஸ்களும் நேரில் கண்ட அனுபவங்கள்.
அதே போல் குழந்தை வளர்பும் எல்லாம் என் அனுபவங்கள் மற்றும் நேரில் கண்டவை.
சமையல் குறிப்பு கொடுக்க காரணம், வெளிநாட்டில் திருமணம் ஆகி செல்லும் பல பெண்கள் சரியாக சமைக்க தெரியாமல், கணவன் மனைவி பெரும் சண்டைக்குள்ளாகி, பெண்களுக்கு மனவேதனை அடைகிறார்கள், அவர்களுக்கு உதவும் வண்ணம் என் குறிப்புகளை போட்டு வருகிறேன்.
நாம் இம்மண்ணில் பிறந்து விட்டோம்.அப்படியே அன்றாட வேலைகளை முடித்து கொண்டு திறமைகள் நம்முடன் புதைந்து போகாமல் மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவனும் என்ற எண்ணத்தில் எனக்கு தெரிந்த பதிவுகளை வழங்கிக்கொண்டிருக்கிறேன்.
இப்படிக்கு
ஜலீலா பானு
துபாய்.