பெங்களூரில் தண்ணி அடித்துவிட்டு குஷியாக இருக்க வந்த சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியரை ஒரு கும்பல் மயக்க மருந்து தெளித்து, அடித்து உதைத்து, ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள லேப்டாப், ஐபோன், பணம், நகைகளைப் பறித்துவிட்டு, ரோட்டில் வீசிவிட்டுச் சென்றது.
சென்னையை சேர்ந்தவர் ராஜ் (25) ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை பெங்களூர் வந்தார். இரவு 11 மணிக்கு பெங்களூர் கலாசிபாளையம் பஸ் நிலையத்தில் வந்திறங்கினார். அவர் வந்ததே, குடும்பத்தாரிடம் இருந்து தூரமாக இருக்கவும், தண்ணி அடித்துவிட்டு ஜாலியாக இருக்கவுமே.
பஸ்சை விட்டு கீழே இறங்கியதும் நேராக ஒரு பாருக்கு சென்று மூக்கு முட்ட குடித்தார். இதையடுத்து லாட்ஜில் ரூம் போட நடந்து சென்ற அவரை
பெங்களூர் மருத்துவக் கல்லூரி அருகே ஒரு கும்பல் வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டியது.
இதையடுத்து அவர் மீது மயக்க மருந்தை வீசி அவரை மயக்கமடைய வைத்தது. அதன் பிறகு நடந்தது எதுவும் ராஜுக்குத் தெரியவில்லை. மறுநாள் அதிகாலை 3 மணிக்கு மயக்கம் தெளிந்து சுய நினைவுக்கு வந்த அவர் பசவனகுடி மேம்பாலம் அருகே நேஷனல் கல்லூரிக்கு பக்கத்தில் ரோடோரத்தில் கிடந்தார்.
அவரிடம் இருந்த லேப்டாப், ஐ போன், லேப்டாப், தங்க சங்கிலி, பிரேஸ்லெட், மோதிரங்கள், ரூ. 20,000 பணம் உள்பட ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அவர் பசவனகுடி போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்கச் செல்லவே, அவர்கள் உன்னை மயக்கப்படுத்தியது கலாசிபாளையம் என்பதால் அங்கே போய் புகார் கொடு என திருப்பி அனுப்பிவிட்டனர்.
அங்கு போனால், நீ மயங்கிக் கிடந்த இடம் பசவனகுடி. இதனால் அங்கே போ என மிரட்டினர். இதையடுத்து கடுப்பான ராஜ் பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
இதையடுத்து கமிஷனர் அலுவலக அதிகாரிகள் பசவனகுடி போலீஸ் இன்ஸ்பெக்டரை வரவழைத்து டோஸ் விட்டதோடு, வழக்குப் பதிவு செய்ய வைத்தனர். கையில் ஒரு பைசா கூட இல்லாமல், டீ குடிக்கக் கூட வழி இல்லாமல், பசியால் தவித்த ராஜ் கண்ணீர் விட அதைக் கண்ட போலீஸ் அதிகாரிகள் அவருக்கு சென்னைக்கு பஸ் டிக்கெட் எடுத்துக் கொடுத்து, கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
ராஜ்.. இது தேவையா?!

No comments:
Post a Comment