Monday, February 14, 2011

.எச்சரிக்கை வாய்ஸ் டிரான்ஸ்மிட்டர்


பெண்ணை நிர்வாண படம் பிடித்து, 'இன்டர்நெட்டில்வெளியிடுவேன் என மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் பயன்படுத்திய 'வாய்ஸ் டிரான்ஸ்மிட்டர்சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒட்டு கேட்கும் கருவி என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விருத்தாசலம் அரசகுழியைச் சேர்ந்த மா.கம்யூ.பிரமுகர் ரட்சகர் மகன் கிளமென்ட் எஸ்லின் ராஜ்(25); தமிழர் விடுதலைப் படை இயக்கத்தைச் சேர்ந்தவர். இவர்விருத்தாசலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து,மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம் எடுத்துள்ளார். அப்பெண்ணை திருமணம் செய்து வைக்கவில்லையெனில்ஆபாச படத்தை, 'இன்டர்நெட்டில்வெளியிடுவேன் என பெண்ணின் பெற்றோரை மிரட்டினார். அவர்களுக்கு தெரியாமல் வீட்டில், 'வாய்ஸ் டிரான்ஸ்மிட்டர்பொருத்தி,வீட்டில் நடைபெறும் 'சம்பாஷணைகளைமொபைல் போன் மூலம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து பெண்ணின் பெற்றோர்எஸ்.பி.,யிடம் புகார் தெரிவித்தனர். எஸ்.பி.அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில்ரவுடிகள் ஒழிப்பு சப்-இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார்கிளமென்ட் எஸ்லின் ராஜை கைது செய்து, 'வாய்ஸ் டிரான்ஸ்மிட்டர்எனப்படும் ஒட்டு கேட்கும் கருவியை கைப்பற்றினர். அதில், 'ஜெர்மன் மிலிட்டரி டெக்னாலஜிமற்றும்'மேட் இன் சைனாஎன குறிப்பிட்டுள்ளது.விசாரணையில்அந்த கருவியை10 ஆயிரம் ரூபாய்க்கு ராமநாதபுரத்தில் வாங்கியது தெரிய வந்தது. தீப்பெட்டி அளவில் கைக்கு அடக்கமாக உள்ள அக்கருவியில் ஏதேனும் ஒரு 'சிம் கார்டுபொருத்திஎவருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் வைத்து விட்டால்,உலகின் எந்த மூலையில் இருந்தும் அந்த எண்ணுக்கு, 'மொபைல் போன்'மூலம் 'டயல்செய்தால்கருவி இருக்கும் இடத்தில் 'ரிங் டோன்வராது.
மாறாக போன் செய்பவருக்கே ஒரு, 'ரிங் சவுண்டுமட்டும் கேட்கும். பின்னர்,கருவி உள்ள இடத்திலிருந்து 15 மீட்டர் சுற்றளவில் என்ன பேசிக் கொள்கின்றனர் என்பதை தெளிவாகக் கேட்க முடியும். 5 மணி நேரம் பேட்டரி சார்ஜ் நீடிக்கும். பேசினால் தான் சார்ஜ் டவுண் ஆகும்.தற்போது பரவலாக விற்பனைக்கு வந்துள்ள இந்த வகை கருவியால்ரகசியம் காக்க வேண்டிய ஒரு சில அலுவலகங்கள் மட்டுமின்றிவேறு விதமான தவறான நடவடிக்கைகளில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment