இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்ல சர்வதேச பாஸ்போர்ட் அவசியமென, தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் செய்திக்குறிப்பு: டில்லியில் கடந்த மாதம் நடந்த இந்திய ஹஜ் குழுவின் கூட்டத்தில், சர்வதேச பாஸ்போர்ட் வைத்துள்ள புனித பயணிகள் மட்டுமே 2011ல் ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பிக்க முடியும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்கும் போது, ஒவ்வொருவரும் சர்வதேச பாஸ்போர்ட் அவசியம் வைத்திருக்க வேண்டும். தங்களிடம் பாஸ்போர்ட் இல்லையென்றால், ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்கும் முன்,பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, ஹஜ் அறிவிப்பு வெளியாகும் முன்பு, பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே குலுக்கல் சமயத்தில் சேர்க்கப்படுவர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பாஸ்போர்ட்???? சரியாக புரியவில்லைங்க... நம் நாட்டு பாஸ்போர்ட் தானா?
ReplyDeleteஆம் நம்ம நாட்டு கடவு சீட்டுதான் அக்கா.முன்பு ஹஜ் செல்லும் மக்களுக்கு என தனி பாஸ்போர்ட் வழங்கப்பட்டது,இப்போது பொது பாஸ்போர்ட் என அறிவிக்கப்பட்டுள்ளது.உங்கள் கருத்து மிக்க நன்றி
ReplyDelete