அன்பின் பெற்றோர்களே! |
அன்று முதல் இன்று வரை உலகத்தில் ரங்கேறிக்கொண்டிருக்கும் குற்றங்களுக்கும் அநியாயங்களுக்கும் காரணம் என்ன? அல்லது காரணம் யார்? என்பதைப் பற்றி சிந்தித்திருக்கின்றோமா?
அதற்கான காரணம் வாழ்க்கையில் தங்களது பிள்ளைகளை நல்ல முறையில் வழி நடத்தத் தவறும் பெற்றோர்களே (Parenting Failure) என்பதை ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
காரணம்;
எமது பிள்ளைகள் கடுமையான தண்டனைகளுக் குற்படுத்துகின்றமை
பிள்ளைகள் தங்களது பெற்றோர்களிடத்திலிருந்து சரியான அன்பையும் ஆதரவையும் பெற்றுக் கொள்ளத் தவறுகின்றமை,
பிள்ளைகள் அவர்களின் நன்னடத்தையின் போது போதுமான பாராட்டுதலை பெற்றுக் கொள்வதற்கு பதிலாக சிறிய சிறிய தவறுகளுக்காக கடுமையான தண்டணைகளுக்கும் மோசமான வார்த்தைகளுக்கு உற்படுதல்
பிள்ளைகளின் அன்றாட வாழ்க்கையில் அவர்களின் ஆசைகளுக்கும் ஆவேசங்களுக்கும் உதவ பெற்றோர்கள் தவறுகின்றமை.
உண்மையில் பெற்றோர்களின் இப்படிப்பட்ட மோசமான வழிநடத்தல்களும் அறிவீனமான அணுகுமுறைகளும் தான் காரணமாகும்.
இந்த பிள்ளைகள் எதிர்காலத்தில் உலகின் பெயர் சொல்லப்படுகின்ற மிக மோசமான குற்றவாளிகள்.
அன்றாட வாழ்க்கையின் எமது நடத்தைகளை சரிவர நோட்டமிட்டுப் பார்த்தால் இதற்கான ஆதாரங்களை கண்டுகொள்ளமுடியும்.
அதே நேரம் இதற்கான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள, நல்ல எதிர்கால சமூகத்தை உருவாக்க வழி என்ன? என்று சிந்தித்தால் நான் மேலே சொன்னதற்கு எதிரான விடையைப் பெற்றுக்கொள்ள முடியும். அதாவது பிள்ளைகளை மோசமாக வழிநடத்திய பெற்றோர்களுக்கு பதிலாக பிள்ளைகளை சரியான முறையில் வழிநடத்தும் பெற்றோர்கள் (Positive Parenting) என்பதுவாகும்.
இதற்கான உதாரணத்தை எமது சூழலிலே பெற்றுக் கொள்ளமுடியும்,
நல்லமுறையில் வளர்க்கப்படும் ஒரு பிள்ளையையும் அந்த பிள்ளையின் தாய் தந்தையையும் சரிவர நோட்டமிட்டுப் பார்த்தால் இதன் உண்மையை புரிந்து கொள்ளமுடியும்.
அதாவது அந்த குறிப்பிட்ட வீட்டில் அந்த மகன் அல்லது மகள் ஒரு தவறு செய்து விட்டால் அந்த தவறுக்காக உடனே தண்டிக்க மாட்டார்கள், அதற்கு பதிலாக மகனே நீ செய்த இந்த விடயம் பிழை, நீ இந்த பிழையை செய்வதற்குக் காரணம் அதாவது இது உனது தவறல்ல, இது அந்த விடயத்திலுள்ள பிழையாகும், அதனால் திரும்பவும் அதே விடயத்தைச் செய்யாதே என்று அந்த பிள்ளையை அந்த தவறிலிருந்து தடுத்துவிடுகின்றார்கள்.
இந்த பாடத்தை அந்த பிள்ளை தனது பாடசாலை புத்தகத்தில் படிக்கமுன் வீட்டில் பெற்றோர்களின் பாடபுத்தகத்தில் படித்துவிடும்.
அதே போல் பிள்ளைகளை வளர்க்கின்ற விடயத்தில் நாம் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்;
ஒவ்வோரு நாளும் எமது பிள்ளைகளை ஒரு வெற்றியாளனை பார்ப்பது போலும் ஒரு வெற்றியாளனுடன் கதைப்பது போலும் நடந்து கொள்ள வேண்டும். நாங்கள் அவர்களை விரும்புகின்ற நடத்தைகளை கற்றுக் கொடுத்தல், பிறர் எங்களை நேசிப்பதற்கான வழிவகைகளை கற்றுக்கொடுத்தல், செல்கின்ற இடமெல்லாம் அமைதியாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ள தேவையானவைகளை கற்றுக் கொடுத்தல்.
நாங்கள் பெற்றோர் என்ற நிலையை அடைவதற்கு முன்னர் நாங்களும் எமது பிள்ளைகளின் வயதை தாண்டி வந்திருக்கின்றோம், நிறைய தோல்விகளை சந்திருக்கின்றோம், குடி, கூத்து, அநியாயம், பொய், போலி வேசம், விபச்சாரம்,கொலை, கொள்ளை, கடத்தல், தற்கொலை முயற்சி, விவாகரத்து என்று தேவையற்ற, தண்டனைக்குரிய எல்லாவற்றிலும் அனுபவம் பெற்றிருக்கின்றோம்.
இந்த தேவையற்ற அனுபவங்கள் எமது பிள்ளைகளுக்குத் தேவையில்லை,அவர்கள் தவறுகளிலிருந்து விலகி, சிரித்த முகத்துடன் சந்தோஷமாக வாழ வழி செய்வோம், பெற்றோர்களே தயாராகுங்கள்! சபதம் எடுப்போம், இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்.
இன்ஷா அல்லாஹ் எனது இந்த சிறிய தொகுப்பில் எல்லா வயதுடையவர்களுக்கும் எல்லா வயதுடைய பிள்ளைகளை வளர்க்கின்ற பெற்றோர்களுக்கும் அது போல் தன்னை தானே மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முயற்சிக்கின்ற பிள்ளைகளுக்கும் உதவக்கூடிய வகையில் விடயங்களை உள்ளடக்க முயற்சித்திருக்கின்றேன்.
முழுமையாக உள் நுழைவதற்கு முன் எல்லா பெற்றோர்களுக்கும் முக்கியமாக இரண்டு விடயத்தை ஞாபகமூட்ட வேண்டும், அதாவது;
நிபந்தனையற்ற முறையில் எமது பிள்ளைகளை காதலிப்போம்:
எமது குழந்தை எம்மை மதிக்கவேண்டும், கெளரவிக்க வேண்டும், எமது அந்தஸ்தை உணர வேண்டும் என்பதற்கல்லாமல் அது உண்மையில் எமது குழந்தை என்பதற்காக நாம் அவர்களை காதலிக்க வேண்டும். எமது முழுமையான அன்பை செலுத்த வேண்டும்.
அந்த காதலை எமது நடத்தையில் காண்பிப்போம்.
எமது பிள்ளைகளை அடிக்கடி காணும் போது அவர்களை கட்டித்தழுவ வேண்டும்,
அவர்கள் ஆசைப்படும் நேரத்தில் அவர்களுடன் இருக்க வேண்டும், அவர்களின் பாடசாலை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுதல், பெற்றார் சங்க கூட்டங்களுக்கு சமூகமளித்தல்,
பாடசாலை நிகழ்ச்சிகளில் அவர்கள் நிகழ்ச்சி செய்யும் போது அவர்களின் நடத்தைகளை அவர்களுக்கு முன்னாலேயே கண்டு ரசித்தல், அவர்களின் அந்த சிறிய பெரிய சாதனைக்காக வேண்டி அவர்களை அடிக்கடி புகழுதல், அவர்கள் சந்தோஷமாக அழைக்கும் இடங்களுக்கு செல்லுதல், அவர்களுடன் அந்த சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ளுதல் என்று அனைத்திலும் பங்கு கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் பிள்ளைகளை எப்படி காதலித்திருக்கின்றார்கள், எப்படி அன்பு செலுத்திருக்கின்றார்கள் என்பதற்கு கீழ் காணும் சில உதாரணங்கள் போதுமானதாகும்.
நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே நற்குணமுடையவராக விளங்கினார்கள். எனக்கு அபூ உமைர் என்று அழைக்கப்பட்ட ஒரு தம்பி இருந்தார். அப்போது அவர் பால்குடி மறக்க வைக்கப்பட்ட பருவத்தில் இருந்தார் என்றே எண்ணுகின்றேன்.
நபி (ஸல்) அவர்கள் (என் வீட்டிற்கு வந்தால்), "அபூஉமைரே! பாடும் உன் சின்னக் குருவி என்ன செய்கின்றது?'' என்று கேட்பார்கள். அவன் அப்பறவையுடன் விளையாடிக் கொண்டிருப்பான்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரம் : புகாரி 6203
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரம் : புகாரி 6203
ஒர் ஏழைப் பெண் தன் இரு பெண் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு என்னிடத்தில் வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீச்சம் பழங்களைக் கொடுத்தேன். அவ்விரு குழந்தைகளுக்கும் (ஆளுக்கு) ஒரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்து விட்டு, ஒரு பேரீச்சம் பழத்தைத் தான் சாப்பிடுவதற்காக தனது வாய்க்குக் கொண்டு சென்றார். அப்போது அவ்விரு குழந்தைகளும் தங்களுக்கு சாப்பிடத் தருமாறு கேட்டன! தான் சாப்பிட நினைத்த அந்தப் பேரீச்சம் பழத்தை இரு துண்டுகளாகப் பிய்த்து (குழந்தைகளிடம் கொடுத்தார். அந்தப் பெண்ணின் அச்செயல் என்னை ஆச்சரியப்பட வைத்தது. அவர் செய்த அந்தக் காரியத்தை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், "இதன் மூலம் அல்லாஹ் அப்பெண்ணுக்கு சுவனத்தை விதித்து விட்டான்'' என்றோ அல்லது"அப்பெண்ணுக்கு நரகிலிருந்து விடுதலை அளித்து விட்டான்'' என்றோ கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : முஸ்லிம் 4764)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஸன் பின் அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்களுக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்த அக்ரஃ பின் ஹாபிஸ் அத்தமீமி (ரலி), "எனக்குப் பத்து குழந்தைகள் இருக்கின்றன. அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை'' என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்'என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
ஆதாரம் : புகாரி 5997
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?'' என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : அயிஷா (ரலி)
ஆதாரம் : புகாரி
நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கின்றேன். (என்னைப் பின்பற்றித் தொழும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமம் அளிக்கக் கூடாது என்பதால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகின்றேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி),
ஆதாரம் : புகாரி 707, 709, 7105998
ஏன் எமது பிள்ளைகளிடத்தில் முதலில் அன்பை விதைக்க வேண்டும் என்றால்,அன்பும் காதலும் எதையும் சாதிப்பதற்கு மிகமுக்கிய சாதனங்களாகும்.
எமது பிள்ளைகள் நாம் சொல்லுவது போல் கேட்க வேண்டும் என்றால், நாம் சொல்லுவதை எமது பிள்ளைகள் உரிய நேரத்தில் செவியுற்று செயற்பட வேண்டுமென்றால் அவர்களை அன்பான முறையில் வளர்க்கப் பழகிக் கொள்ளவேண்டும்.
எமது அன்பை செயல் ரீதியாக காட்டுவதற்கு மிகமுக்கியமான ஊடகம்தான் நாம் வீட்டில் சில வேலைகளை செய்யும் போது அவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்
உதாரணமாக வீட்டை சுத்தம் பண்ணுதல், பூ மரங்களை நடல், கைப் பணிகளை செய்தல், சித்திரங்களை வரைதல், வீட்டை அலங்கரித்தல் இவ்வாறு அனைத்து காரியங்களிலும் பிள்ளைகளை என்னுடம் இணைத்துக் கொள்ளவேண்டும்.இவ்வாறு இணைந்து செய்யும் போது அவர்களின் நடத்தைகளை இனங்கண்டு பாராட்டவேண்டும்.
மேலே அடையாளப்படுத்திய இரண்டு விடயங்களும் எந்த பெற்றோர்களிடத்தில் நடைமுறையில் இருக்கின்றதோ அவர்கள் தங்களது பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ப்பதில் 60 சதவீத வெற்றியை பெற்றுவிட்டார்கள் என்பதே உண்மை.
மிகுதி 40 சதவீதத்தையும் வென்று எமது பிள்ளைகளை ஒரு வெற்றியாளனாக்குவதற்கு கீழ் வரும் விடயங்களை நடைமுறைப்படுத்தத் தயாராகுவோம்.
No comments:
Post a Comment