Saturday, September 1, 2012

மல்லிகை

மன்னன் மயங்கும்
பொன்னான மலர் கைபட்டு
கசக்கினாலும் கைக்குள் வாசம்
காண்போம் அதன் தியாகம்!

மலரைத் தீண்டிச் செல்லும் மலரின் வாசம் போலவே
புலரும் ஆற்றலைச் சொல்லும் புலமையோர்ப் பாட லேன்பேனே

கானகத்தில் எத்தனை மலர்களைக்
கண்ட போதிலும் மல்லிகைத்
தானாக நம்மைக் கவர்ந்திழுப்பது
தனிச்சுவைப் பொருந்திய கவிதைபோல்


பாத்ததுண்டா மல்லிகை
சிவப்பு நிறத்தில் வாடா மல்லிகை

மழலையின் மாசிலாப்
புன்சிரிப்பு மல்லிகைப் பூ

என்று மினிக்கும் இலக்கியம் போலவே
தென்றலும் பூவாசம் தூவிட- நன்றாய்
அகத்தி லிறங்கிடும் அப்பொழுதில் பூவின்
சுகந்தம் தருமே சுகம்

அங்கொரு மல்லிகை மெல்லிதழ் கோதியே
ஆகா, மதுர கவி மொழிவாள்
எங்கும் இயங்கும் இயக்கம் அனைத்திலும்
ஏற்றதோர் ஆசு கவி பொழிவாள்

வசந்தமும் நின்வரவேற்கும் - சுகந்த
வாசலும் நீவரப் பார்க்கும்
அசைந்தசைந் தேமது வார்க்கும் - மலர்
அணிக்கும்நின் மேல் அன்றோ நோக்கும்


கனவினில் வந்த கணவனைப் பற்றி
மனதினை ஈர்க்கின்ற மல்லிகைப் பாவால்
மலரவும் வைத்தநீ மல்லிகைப் பூவே
புலருமுன் பாடற் புகழ்

மருதாணி, மல்லிகை வாசம்
நீ தரும் பாசம்
இதனைக் காண வரவேண்டும்
இந்திய தேசம்



அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர் “கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை) அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844 வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை) மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

No comments:

Post a Comment