Friday, April 20, 2012

இலங்கையில் பள்ளிவாசல் உடைப்பு,பதட்டம்



தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாயல் உடைக்கப்பட்டது தொடர்பாக யாழ் முஸ்லிம் வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம்.
தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாயல் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் பௌத்த தேரர்களினால் உடைத்து நொருக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் புனித ஜூம்ஆத்தொழுகைக்காக முஸ்லிம்கள் ஒன்றுசேர்ந்திருந்த நேரத்தில் பெருமளிவலான பௌத்த தேரர்களும் அவர்களுக்கு ஆதரவான பெரும்பான்மையினத்தவர்களும் பள்ளியினுள் கூடியிருந்தவர்களை அப்புறப்படுத்திவிட்டு பள்ளிவாயிலை இடித்து நொறுக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தினராலும் பொலிசாராலும் குறித்த கும்பலைக்கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பள்ளிவாசலுக்கு எதிராக சதித்திட்டங்கள் மற்றும் நாசகார செயற்பாடுகள் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்ததை பள்ளிவாசல் நிர்வாகிகள் பல அரசியல் வாதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தம்புள்ள ஜும்மாஹ் மஸ்ஜித் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவுடன் தொடர்பு கொண்டு பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் மலேசியா விமான நிலையத்தில் இருந்த போது மிலிந்த மொரகொடவுடன் தொடர்பு கொண்டு பாதுகாப்பு செயலாளருடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது பாதுகாப்புகான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள.
பாதுகாப்பு செயலாளர் அமைச்சர் ஜானக்க பண்டார தென்னகோனை தொடர்பு கொண்டு பேசுமாறும் தெரிவித்திருத்தார் . அமைச்சர் ஜானக்க பண்டார தென்னகோனின் தொலைபேசி ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அவரின் இணைப்பு செயலாளருடன் தொடர்பு கொண்டு குறித்த பாதுகாப்பு விடயம் தொடர்பாக பேசியுள்ளார்.
இவற்றையெல்லாம் மீறியே தற்போது தம்புள்ளையில் அல்லாஹ்வின் இல்லம் சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
பள்ளிவாசலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை முன்னமே அறியப்பட்ட நிலையில் இதுதொடர்பில் ஏன் உரிய நடவடிக்கைகளை முஸ்லிம் தலைமைகள் மேற்கொள்ளவில்லையென தற்போது பரவலான கேள்வி எழுந்துள்ளது. இவ்விவகாரத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று முஸ்லிம் அரசியல் தலைமைகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள தவறியுள்ளதாக பரவலாக முஸ்லிம்கள் தரப்பில் குற்றம் சுமத்தபட்டுள்ளது.
முஸ்லிம் தரப்பு ஊடகங்கள் பள்ளிவாசல் பற்றிய அச்சுறுத்தலை நேற்றும் இன்றும் முன்கூட்டியே வெளியிட்டிருந்தன. இதனை முஸ்லிம் அரசியல் தலைமைகள் கவனத்திற்கொண்டு இருக்குமாயின் அல்லாஹ்வின் இல்லம் தகர்க்கப்பட்டிருப்பதை நம்மால் தடுத்திருக்கலாம் அல்லவா..??
Thanks to Jafna Muslim


மேலும் அதிக தகவல்களுக்கு,




http://kattankudi.info/

No comments:

Post a Comment