திருவாரூரைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனதுஇடுப்பில் மறைத்துக்கொண்டு சென்ற பீர் பாட்டில் வெடித்து இறந்திருக்கிறான்! எத்தனை சிறிய வயதிலேயே குடிப்பழக்கம் தொடங்கிவிடுகிறது என்பதற்கான ஒரு சின்ன ஆதாரம் இது! வெறும் 45மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை.
இந்தக் குடிநோயின் அறிகுறிகள் என்னென்ன? இந்தப் புதைகுழிக்குள் விழாமல் இருப்பது எப்படி? தப்பித்தவறி விழுந்துவிட்டவர்கள் குடியின் ஆக்டோபஸ் பிடியிலிருந்து மீண்டு வருவது எப்படி? குடிநோயிலிருந்துஒருவர் மீண்டுவர சொந்தமும் நட்பும் எப்படி உதவ முடியும்?அடுக்கடுக்காகப் பிறக்கும் அத்தனை கேள்விகளுக்கும் வல்லுநர்களிடம் விடை உண்டு.
''ஆரம்பத்தில் வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மதுஅருந்துவார்கள்; பின்பு அதில் தொடர்ந்து நாட்டம் ஏற்பட்டு குடிக்கஆரம்பிக்கிறார்கள். நாளடைவில், இன்னும் அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும். எங்கே, எப்படிக் குடிக்கலாம் என்று மதுவைப் பற்றிய சிந்தனைதான் அதிகமாக இருக்கும். இவையே ஆரம்பக்கட்ட நிலை.
அடுத்து, குடிப்பதைக் கட்டுப்படுத்தவோ, மதுவின் அளவைக் குறைக்கவோமுடியாது. வற்புறுத்தலின்பேரில் சிறிது காலம் நிறுத்துவதுபோல்இருந்துவிட்டு, மறுபடியும் அதிகமாகக் குடிப்பார்கள். கோபம், வெறுப்பு,சண்டை, இவையே இடைப்பட்ட காலகட்ட நிலை; தொடர்ந்து அதிகமாகக் குடிப்பது, குடிப்பதற்காகக் கடன் வாங்குவது, பொய் பேசுவது, திருடுவது,குடிக்கத் தடுப்பவர்களை அடிப்பது, காரணமே இல்லாமல் மனைவியின் நடத்தையைச் சந்தேகிப்பது என நிலைமை விபரீதமாகும். 'குடித்தால்தான் சிறிதளவேனும் செயல்பட முடியும்’ என்கிற உச்ச நிலை உருவாகும். இவைதான் தீவிர இறுதிக்கட்ட நிலை'' என்கிறார் டி.டி.கே. மருத்துவமனை சீனியர் தெரபிஸ்ட் மற்றும் கவுன்சிலர் ஜாக்குலின் டேவிட்.
''
மதுவின் தாக்கத்தில் கார் அல்லது பைக் ஓட்டுகிறவர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாக இதுவே காரணம்'' என்கிறார் அவர்.
''குடிநோயாளிகளுக்கு குடிப்பது மட்டும்தான் ஒரே நோக்கமாக இருக்கும்.குடிப்பதற்காக ஏதாவது ஒரு காரணத்தை அவர்களே உருவாக்கிக்கொள்வார்கள். சச்சின் 100-வது சதம் அடித்தாலும் குடி, சச்சின் டக் அவுட் ஆனாலும் குடி என அவர்களுக்குத் தேவை ஏதேனும் ஒரு காரணம் மட்டுமே.
இரண்டாவது கட்டமாக மனரீதியாக சிகிச்சை அளிக்கப்படும். மது அருந்தாமல், மகத்தான வாழ்வு வாழும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளல், குடியால் ஏற்படும் பாதிப்புகளை உணர்தல், வாழ்வின் உன்னதத்தை அறிந்துகொள்ளுதல், குரூப் தெரபி, மீண்டு நல்லபடியாக வாழ்பவர்களுடனான கலந்துரையாடல், ஆலோசனை எனப் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படும்.
ஒருவர் குடிநோயில் இருந்து மீண்டு, நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று மற்றவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், 'விடுபட வேண்டும்’என்ற உறுதியான எண்ணம் குடிப்பவருக்கும் இருக்க வேண்டும். சிகிச்சை முடிந்து சென்ற பிறகும், அதே வேலை, சூழல், சமுதாயம், குடிகார நண்பர்கள் இருக்கத்தான் செய்யும். நமக்காக எதுவும் மாறியிருக்கப்போவது இல்லை. மாற வேண்டியது குடிநோயாளிதான்''என்றார் அறிவுடை நம்பி.
நட்பை கவனிக்கவும், நண்பர்கள் யார் என்ற தெரிந்து வைக்கவும் .
வெளியூரில் படிக்கும் மகனாக இருந்தால், அடிக்கடி அவனிடம் போனில் பேசுவது, அந்த ஊரில் இருக்கும் அக்கறையுள்ள குடும்ப நண்பர்களைப் போய் பார்க்கச் சொல்வது, 'நாங்கள் உன் அருகில்தான் இருக்கிறோம்’ என்று அடிக்கடி அவருக்கு உணர்த்துவது... இவையெல்லாம் அவருக்குள் பெற்றோர் மீதான அன்பு கலந்த மரியாதையை ஏற்படுத்தும்;தவறான செயல்களுக்கு அடிமையாகாமல் இருக்க உதவும்.
1,30,000...
மது 'உள்ளே’ சென்றவுடன் உடலில் அப்படி என்னதான் செய்கிறது?
''
குறிப்பாக, நம்முடைய மூளையில் கட்டுப்பாடு மற்றும் உணரும் திறன்இருக்கிற கார்டெக்ஸ் பகுதி பாதிக்கப்படுவது முக்கியக் காரணம். எந்தவேகத்தில் ஓட்ட வேண்டும் என்பது ஸ்பீடா மீட்டர் பார்க்காமலேயே நமக்குத் தெரிந்திருக்கும். அதற்குக் காரணம், கார்டெக்ஸுக்குள் இருக்கும் ஓர் ஒழுங்குமுறையானது நம்மை வழிநடத்திக்கொண்டே இருப்பதுதான். ஆனால், மது அருந்திய பிறகு இந்தக் கட்டுப்பாடு போய்விடும். எல்லோரும் ஓர் ஒழுங்கில் வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கும்போது, மது அருந்தியவர் மட்டும் தாறுமாறாக ஓட்டுவதால், விபத்து நடந்துவிடுகிறது.
மூளைக்குள் ஒரு செல் இன்னொரு செல்லுக்குத் தகவல்களை அனுப்பும் நியூரோ ட்ரான்ஸ்மீட்டர்கள்பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த நியூரோ டிரான்ஸ்மீட்டரில் குளுட்டோமைன், காபா என்று இரண்டு நல்ல,கெட்ட தூதுவர்கள் இருக்கின்றனர். ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கு குளுட்டோமைன் என்ற நல்ல நியூரோ தூதுவர்கள் அதிகமாகச்செயல்படும்; காபா தூதுவர்களின் செயல்கள் குறைவாக இருக்கும். ஆல்கஹால் அருந்தியவர்களுக்கு இது தலைகீழாக மாறிவிடும். குழப்பங்களும், விபத்துகளும் நடக்க இந்தக் காபா முக்கியக் காரணம்.
மது அருந்திவிட்டு விபத்துக்குள்ளாவதோடு, விபத்துக்குப் பிறகுமருத்துவமனையில் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. எந்தத் தகவலையுமே பெற முடியாமல் சுய நினைவற்ற ஒருவருக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும். அதனால், முதலில் அவருக்கு என்ன பாதிப்பு, வேறு ஏதேனும் குறைபாடுகள் இருக்கின்றனவா, எப்படி விபத்துக்குள்ளானார்... போன்ற விபரங்களைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கத் தாமதமாகும்.
அதேபோல், மது அருந்திவிட்டு அடிபட்டவருக்குப் பக்க விளைவாக வலிப்பு போன்ற வேறு பாதிப்புகளும் வரலாம். இதோடு, அவர் குணமாவதும் பாதிக்கப்படும்!''
மது அருந்திவிட்டு விபத்துக்குள்ளாவதோடு, விபத்துக்குப் பிறகுமருத்துவமனையில் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. எந்தத் தகவலையுமே பெற முடியாமல் சுய நினைவற்ற ஒருவருக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும். அதனால், முதலில் அவருக்கு என்ன பாதிப்பு, வேறு ஏதேனும் குறைபாடுகள் இருக்கின்றனவா, எப்படி விபத்துக்குள்ளானார்... போன்ற விபரங்களைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கத் தாமதமாகும்.
அதேபோல், மது அருந்திவிட்டு அடிபட்டவருக்குப் பக்க விளைவாக வலிப்பு போன்ற வேறு பாதிப்புகளும் வரலாம். இதோடு, அவர் குணமாவதும் பாதிக்கப்படும்!''
மதுவை மறப்போம்! மதுவை ஒழிப்போம்!
"மது தீமைகளின் தாய்" - நபிகள் நாயகம்
ஒரு நல்லவன் மது அருந்த ஆரம்பித்துவிட்டால் அணைத்து தீமைகளையும் செய்ய ஆரம்பித்துவிடுவான்,
கத்துவது, வெட்கத்தை இழப்பது, ஆடுவது, பாடுவது, பெண்களை செக்ஸ் எண்ணத்தோடு பார்ப்பது,
நண்பர்களோடு அல்லது மற்றவர்களோடு வேண்டுமேன்றே சண்டைக்கு போவது,
வாகனத்தை வேகமாக ஓட்டுவது, etc முடிவில்
அடிதடி, தஹரார், கொலை, விபச்சாரம், கற்பழிப்பு, போலீஸ் கேஸ், ஜெயில் வாழ்கை,
அவனது குடும்பம் நடுத்தெரு, வறுமை, தற்கொலை, அடிக்கடி கணவன் மனைவி சண்டை, அதனால் குழந்தைகள் பாதிப்பு,
அதனால் விவாகரத்து etc
நபிகள் நாயகம் "மது தீமைகளின் தாய்" என்று சொன்னது எவ்வளவுபொருத்தமாக இருக்கிறது.
ஆதலால் தான் இறைவன் இந்த மதுவை மனித குலத்துக்கு தடை செய்தான்
மதுவை வாங்குவதும் விற்பதும் பரிமாறுவதும் உற்பத்திசெய்வதும் கொண்டுசெல்வதும் அனைத்தும் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் தண்டனை உண்டு. அனைவரும் பாவத்தில் சமமானவர்கள். அனைவரும் சபிக்கப்பட்டவர்கள்.
இதே போல்தான் வட்டியும் இறைவன் இந்த மனித குலத்துக்கு தடை செய்தான்.
வட்டி வாங்குவதும் கொடுப்பதும் அதற்கு சாட்சியாக இருப்பதும்அனைத்தும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் தண்டனை உண்டு. அனைவரும் பாவத்தில் சமமானவர்கள். அனைவரும் சபிக்கப்பட்டவர்கள்
வட்டியினால் பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளன
இதே போல்தான் வரதட்சனையும் இறைவன் இந்த மனித குலத்துக்கு தடை செய்தான்.
வரதட்சனை கேட்டு வாங்குவதும், அதற்கு உடந்தையாக இருப்பதும்,ஆண் வீட்டார்க்கு திருமண விருந்து போடுவதும் அனைத்தும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் தண்டனை உண்டு. அனைவரும் பாவத்தில் சமமானவர்கள். மாறாக ஆண் தான் பெண் வீட்டார்க்கு திருமண விருந்து போட வேண்டும். ஆண் தான்பெண்ணுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும்.
வரதட்சனையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். திருமணம் கால தாமதம் ஆகிறது. பெண்கள் ஓடி போகிறார்கள். மாமியார் கொடுமை, etc
மதுவையும் வட்டியையும் ஒழிக்க வேண்டிய அரசாங்கமே அதை நடத்தினால்
மக்கள் எங்கே திருந்துவது !!!!!!!!!!!!!! மக்கள் திருந்த நினைத்தாலும் கூட அரசாங்கம் திருந்த விடாது !!!!!!!!!!
என்ன கொடுமை சார் !!!
No comments:
Post a Comment