Saturday, October 22, 2011

ஹாஜிகள் கவனத்திற்கு


ஹஜ்ஜின் நிபந்தனைகள் – 
1.முஸ்லிமாக இருத்தல் 2.புத்தி சுவாதீனமாக இருத்தல் 3.சுதந்திரமானவனாக இருத்தல் (அடிமையாக இல்லாதிருத்தல்) 4.பருவ வயதை அடைந்திருத்தல் 5.உடல் வலிமையும் பணவலிமையும் பெற்றிருத்தல் 6.ஒரு பெண் மஹ்ரமுடன் (அனுமதிக்கப்பட்டவருடன்) ஹஜ்ஜு செய்தல்.


ஹஜ்ஜின் ருக்னுகள் – 4 

1. இஹ்ராம் கட்டுவது
2. அரஃபாவில் தங்குவது
3.தவர்ஃபுல் இஃபாளா செய்வது.
4.ஸஃபா மர்வாவுக்கிடையே ஸயீ சய்வது

இவற்றுள் ஏதேனும் ஒன்றை விட்டாலும் ஹஜ் நிறைவேறாது

ஹஜ்ஜின் வாஜிபுகள்-7
1. மீக்காத்து எல்லையிலிருந்து இஹ்ராம் கட்டுவது.
2. சூரியன் மறைவது (அஸ்தமனம்) வரை அரஃபாவில் தங்குவது.
3. முஸ்தலிஃபாவில் இரவு தங்குவது.
4. அய்யாமுத்தஷ்ரீக்உடைய நாட்களில் ( பிறை 11,12,13) மினாவில் தங்குவது.
5. மூன்று ஜம்ராக்களில் கல் எறிவது .
6. தலை முடியைச் சிரைப்பது அல்லது (முழுவதும்) வெட்டுவது.
7. தவாபுல் விதாஃ (பயண தவாஃப்)

இவற்றுள் ஏதேனும் ஒன்று விடுபட்டு விட்டால் பிராயச் சித்தமாக தமு கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஹஜ்ஜு நிறை வேறிவிடும்.
தமு என்பது மிருக பலியோ ஆறு ஏழைகளுக்கு உணவளிக்கவோ மூன்று நாட்களக்கு நோன்பு நோற்கவோ செய்வதற்குச் சொல்லப்படும்.


மனதிற் கொள்ளவேண்டியவை



1.அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜை நிறைவேற்றுவதாக (இக்லாஸான)தூய்மையான நிய்யத் வைப்பது.
2. ஹஜ்ஜு சம்பந்தமான சட்டங்களை சரியான முறையில் தெரிந்து நபி (ஸல்) காட்டிய முறைப்படி செய்வது. இதில் தம் விருப்பப்படி செய்ய எவருக்கும் அனுமதி கிடையாது.

3.இதய பூர்வமாக பாவ மன்னிப்புக் கோருவது.
இதன் நிபந்தனைகள்-
1. செய்து வந்த பாவங்களை முற்றிலுமாக விடுதல
2.அதற்காக மனமுருகுதல்
3. மீண்டும் அப்பாவங்களை செய்யவோ எண்ணவோ கூடாது என மன
உறுதி கொள்ளல்.
4. பிறருக்குச்செலுத்தவேண்டிய (ஹக்குகளை) பாத்தியதைகளை உரியவர்களிடம் சேர்பித்தல்.

அதாவது : பிறருக்குச் செலுத்தவேண்டிய ஹக்குகளை (கடமைகளை) நிறைவேற்றுவதும், அநியமாக அபகரிக்கப்பட்ட பொருட்களை உரியவரிடம் ஒப்படைப்பதும் கடன்களை வாங்கியவரிடம் திருப்பிக் கொடுப்பதும் அதற்காக சம்பந்தப்பட்டவரிடம் மன்னிப்புக்கோருவதும் ஹஜ்ஜு ஏற்கப்படுவதற்குpய விதிகளாகும். (இவை நான்கும் தவ்பா ஏற்றுக்கொள்வதற்குரிய விதிகளாகும்.)
4. பெற்றோரின் திருப்தியைப்பெறுவதும் மனைவி கணவரின் அனுமதியைப் பெறுவதும் மிகவும் இன்றியமையாததாகும்.
5. ஹஜ்ஜுக்குரிய செலவுகள் யாவும் ஹலாலான முறையில் ஈட்டியதாக இருக்க வேண்டும்.
6. வஸிய்யத் ஏதும் செய்வதாயின் எழுத்து பூர்வமாக இருக்க வேண்டும்.
7. எல்லோருடனும் நல்லுறவோடும் இண்க்கத்தோடும் நடந்து கொள்ள வேண்டும்.
8. ஹஜ்ஜ்{டைய அமல்களை பாழ்படுத்தும் வீணான எந்தச்செயலிலும் பேச்சிலும் பிறரைப்புண்படுத்துவதிலும் ஈடுபடாமலிருத்தல் வேண்டும்.
9. பயண ஒழுங்குகளை கடைபிடிக்கவேண்டும்.
10. கவனம் முழுவதும் வணக்க வழி பாடுகளிலும், குர்ஆன் ஓதுவதிலும், நபி(ஸல்) காட்டிய திக்ருகளை மட்டும் ஓதுவதிலும் இருக்க வேண்டும்.
11. நல்லவற்றைப் பேசுவதிலும், தாம் செயலாற்றுவதோடு மட்டுமின்றி பிறரையும் நல் அமல் செய்யத்தூண்ட வேண்டும்.
12. அய்யமுத்தஷரீக்குடைய நாட்களிலும், முஸ்தலிஃபாவிலும், குறிப்பாக அரஃபாவுடைய நாளிலும் அல்லாஹ்வை அதிகமதிகமாக நினைத்துப் பாவ மன்னிப்புக் கோருதல்.
13. சிறு தவறுகள் கூட நிகழா வண்ணம் தன்னைப் பேணிக் கொள்ள வேண்டும்.
14. இவ்விதிகள் யாவும் பேணப்பட்டால் அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவங்கள் மன்னிக்கப்பட்டு ‘ஹஜ்ஜு மப்ரூராக (ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக)’ ஏற்றுக் கொள்ளப்படும்.

ஹஜ்ஜு முடிந்ததும் தமது ஹஜ்ஜு ஏற்கப்பட்டு விட்டதாக இறுமாந்து விட வேண்டாம். மவ்த்து வரை உங்கள் அமல்களை எடை போட்ட பிறகே ஹஜ்ஜு ஏற்கப்படுவதும் ஏற்கப்படாததும் தீர்மானிக்கப்படும் என்ற இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்களின் அறிவுரை இங்கே மிகவும் சிந்திக்கத்தக்கதாகும்.


செய்யக்கூடாதவை :-

முடியை வெட்டுதல் அல்லது பிடுங்குதல் நகத்தை வெட்டுதல் ஆண்கள் தலையை மறைத்தல் நறுமணம் பூ}சுதல் ஆண்கள் தையலுள்ள ஆடையை அணிதல்.
(குறிப்பு: தடுக்கப்பட்ட இவற்றுள் ஏதேனும் ஒன்றை வேண்டுமென்றே செய்தால் பிராயசித்தமாக ஒரு ஆட்டை அறுத்துப்பலி கொடுக்கவோ, ஆறு ஏழை களுக்கு உணவு கொடுக்கவோ, மூன்று நாட்கள் நோன்பு நோற்கவோ செய்ய வேண்டும்.)
by Dr. Ahmad Baqavi PhD.

No comments:

Post a Comment