Friday, March 4, 2011

சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு ஒரு அவசர மடல்


முஸ்லிம்களின் ஓட்டை தீர்மானிக்கும் TNTJ வின் அவசர மாநிலச செயற்குழு சென்னை டி நகர் இன்ஷா அல்லாஹ் வரும் 6-3-11 அன்று கூடுகின்றது.
இடம் – வேங்கடேஸ்வரா விவாஹ மஹால், பாண்டி பசார் காவல் நிலையம் பின்புறம். டி நகர் சென்னை.
நேரம் – காலை 10 மணி
நாள்  – 6-3-11
------------------------------------------------------------------------------------------------

வரும் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு த த ஜ சென்னையில் அவசர கூட்டத்தைக் கூட்டி,விவாதிக்க உள்ளது.இந்த நேரத்தில் அதன் தலைவர்,சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

அரசியல் வெற்றிடத்தை தற்போது தமிழகத்தைப் பொறுத்தவரை ம ம க,இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்,தேசிய லீக் போன்ற கட்சிகள் மட்டுமே நிரப்பி வருகின்றன.இந்த சூழ்நிலையில் அந்தக் கட்சிகளின் சார்பாக போட்டியிடும் நம் முஸ்லிம் சகோதரர்களுக்காக தங்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிக்கவேண்டும்.
சில சூழ்நிலையின் பேரில்,நபிகள் நாயகம் ஸல் அவர்கள் யூதர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
நாம் நம் மார்க்க சகோதரர்களிடம் அழகிய ஒப்பந்தம் போடலாம் அல்லவா?
நம்மை அழிக்க என்னும் பா ஜ க போன்ற கட்சிகளுக்கு நாம் மறைமுகமாக உதவக்கூடாது.

நாம் தி மு க,அதிமுக ,காங்கிரஸ்,மற்றும் எந்தக் கட்சியை ஆதரித்தாலும் அவர்கள் நம் பிரச்னையை பேச மாட்டார்கள்.மாறாக நாம்தான்,நம் முஸ்லிம் வேட்பாளர்தான் வெற்றி பெற்றால் சட்டசபை சென்று பேசமுடியும்.நமக்கென குறைந்தது ஐந்து சட்ட மன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள் எனில் சட்ட சபையை நம் சமுதாய பிரச்சனைகள் பற்றி கவனம் செலுத்தி பேசும் அளவுக்கு கொண்டு சென்று இன்ஷா அல்லாஹ் சாதிக்க இயலும்.

நம்மிடையே என்னதான் பிரச்சனைகள் என்றாலும்,தங்கள் இயக்கம் ஒரு குழு அமைத்து ம ம க,முஸ்லிம் லீக்,தேசிய லீக் போன்ற கட்சிகளிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு,நம் பிரச்சனைகள் என்னென்ன இருக்கிறது,அவற்றை களைய நாம் செய்ய வேண்டியது என்ன,நீங்கள் வெற்றி பெற்றால் இப்படி செய்யவேண்டும்,நமக்குள் எவ்வித சண்டை,சச்சரவு எதுவும் இல்லாமல் சமுதாய நலன் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவோம் போன்ற கோரிக்கைகள் வைத்து,ஒப்பந்தம் போட்டு,இந்த சமுதாயத்தின்,அல்லாஹ்வின் மார்க்கம் தழைத்தோங்கவும்,நபிகள் நாயகம் ஸல் அவர்களின் உம்மத் இன்னும் வளம் பெறவும் சேர்ந்து களப்பணி ஆற்றலாம் அல்லவா?

தமிழகத்தைப் பொறுத்தவரை லட்சக்கணக்கான மக்கள் த த ஜவில் இருக்கிறார்கள்.அதன் தலைவராக நீங்கள் இருக்கிறீர்கள்.இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.சமுதாயம் ஒன்றுபட இனிய தருணம்.அல்லாஹ்விடம் கூலி வேண்டி - என்னைப்போன்ற லட்சக்கணக்கான மக்களின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளேன்.
தயவு செய்து,எல்லா முஸ்லிம் இயக்கங்களும், கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே குரலில் பாடுபடுவோம்,நமக்கு எதிரான சதியை இன்ஷா அல்லாஹ் முறியடிப்போம்.
எனவே,தாங்கள் கூட்டும் இந்த அவசர கூட்டத்தில் நல்லதொரு முடிவெடுக்கும்படி அன்போடு வேண்டும் உங்கள் மார்க்க சகோதரன்.

1 comment:

  1. என்னுடைய மனதில் உள்ளதை அப்படியே சொல்லி இருக்கீங்க :-)

    ReplyDelete