புடமிடு தங்கமென புத்துணர்வை யூட்டி
தடம்புர ளாவண்ணம் தக்கவழி காட்டி
நடந்துள தேர்வினில் ஞானமும் கூட்டி
கடந்துதான் செல்லுதே கண்ணிய மாதம்
கடமையைச் செய்ய கருணை வரவாய்
உடனிருந் தாயே உளம்நிறை தோழா
விடைபெறும் முன்னே விழிநீர் சுரந்து
மடைதிறக் கச்செய்த மாதமே சென்றுவா
பட்டினித் தீசுட்ட பக்குவம் பெற்றதால்
மட்டிலா பக்தி வளமுடன் கற்றதால்
கொட்டிடும் கண்ணீரும் கோபம் கழுவியதே
கட்டியே காத்திட்டக் கட்டுப்பா(டு) நோன்புடன்
நட்டமே இல்லா நடுநிசி வித்ருடன்
சட்டமாய்க் கூறும் சகாத்தின் கொடையையும்
திட்டமிட் டோதும் திருமறையின் நன்மையையும்
கட்டியே தந்ததைக் கொண்டுசேர் ரப்பிடம்!
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
"கவித்தீபம்”, “கவியன்பன்” கலாம்,
அதிராம்பட்டினம் ( பாடசாலை),
அபுதபி (தொழிற்சாலை)
வலைப்பூந் தோட்டம்:
http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844/ 055 7956007
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com , kalamkader2@gmail.com
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com , kalamkader2@gmail.com
True feelings.of ramalaan
ReplyDelete