Friday, October 29, 2010

சகோதரி அன்னுவின் "தாய் தரும் கல்வி"

அந்த சிறுவனின் வயது இரண்டோ மூன்றோதான். ஆனால் அவனின வருகை, சபையில் உள்ள எல்லோரையும் மகிழ்ச்சியடைய வைக்கும். ஏன்? ஏனெனில் அவனுடைய 'அதப்'(Adaab - குணநலன்க‌ள்) அத்தனை அழகானது. எப்பொழுதும் மரியாதையுடன் எல்லோரையும் அழைப்பதும், அழைப்பிற்கு தாழ்ந்து பதில் சொல்வதும், நம்முடைய அகராதியில் சொல்ல வேண்டுமென்றால் ப்ளீஸ், தேன்க்யூ, மே ஐ?...போன்ற மதிப்பை ஏற்படுத்தும் சொற்களை உபயோகிப்பதும், அடக்கத்தை தன் செயல்களில் காட்டுவதாலும் அச்சிறுவனை ஊரே மெச்சியது. இந்த பாராட்டுக்கெல்லாம் உரிய அந்த சிறுவன் யார், இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹி). 

***********************************************************
* கட்டளை கிடைத்தது கனவில், கொல்லும்படி தன் உயிரினும் மேலான மகனை. பிறந்த சில வருடங்களிலேயே இறைவனுக்காக தாயையும் தந்தையையும் வளர்த்த ஊரையும் பிரிந்த தனயனுக்கு தன் மகனை கொல்லும்படி கனவு வந்ததும் அஞ்சவில்லை, அசரவில்லை, உயிரினும் மேலாய் நேசித்த தன் மகனை தானே பலியிடவும் தயக்கமின்றி புறப்பட்டார் அத் தந்தை*...
*************************************************************

  • நாம் எவ்வளவு தூரம் நம் குழந்தைகளுக்காக து'ஆ செய்கின்றோம்?
  • அவர்களின் உடல் நலனுக்காகவும், பாட சம்பந்தமாகவும் கட்டாயம் செய்வோம். அவர்களின் ஆகிரத்திற்காக?
  • அல்லாஹ்விடம் அவர்களுக்காக தவ்பா செய்து?
  • அவர்களின் அமல்களை அல்லாஹ் பொருந்திக்கொள்ள?
  • நாளை கப்ரில் நாம் சென்ற பிறகு நமக்காக து'ஆ செய்யும் ஹிக்மத்திற்காக?

யோசியுங்கள். முடிவு உங்கள் கையில். எப்பொழுதும் நம்மை மாற்றிக் கொள்ளலாம்...திண்ணமாக அல்லாஹ்வின் உதவி மிக மிக அருகில் உள்ளது!!

***************************************************************

சாம்பிளுக்கு சில வரிகள்.படித்துப் பாருங்கள் முத்தான நல அறிவுரைகள்.

செய்திகளை நயம்பட சொல்லும் விதமும் - எந்த வித அசிங்க ஆபாசமோ இன்றி பிளாக் எழுத முடியும் என நிரூபித்துக்கொண்டிருக்கும் சகோதரி.அன்னுவுக்கு வாழ்த்துக்கள்.

எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்,உங்கள் எழுத்து சேவையை பொருந்திக்கொள்வானாக.ஆமீன்.






5 comments:

  1. சகோதரி அன்னுவுக்கு வாழ்த்துக்கள்.
    மிக அருமையான சகோதரியை அறிமுகபடுத்திய பேனா முனைக்கு மிக்க் நன்றி

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ். நான் எதிர்பாராத ஒரு அறிமுகம் இது. இதனால் இன்னும் பலர் இஸ்லாமிய தகவல்களையும் கட்டுரைகளையும் படித்து பயன் பெறுவர் என்பதே சந்தோஷம். மாஷா அல்லாஹ். இன்னும் அதிகமாக எழுத ஒரு ஊக்குவிப்பு இந்த பதிவு. தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்திய குழுவினருக்கும், ஊக்கமளிப்பவர்களுக்கும், படித்து பயன் பெற் விழைபவர்களுக்கும் மிக்க நன்றி, ஜஸாகுமுல்லாஹு க்ஹைரான் ஃபித் துன்யா வல் ஆக்ஹிராஹ். :)

    வ ஸலாம்,

    ReplyDelete
  3. அன்னு சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.தெரிவு செய்த பேனாமுனைக்கும் வாழ்த்துக்கள்.ஜமாய்ங்க சகோதரி

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    அன்புள்ள பேனாமுனை நிர்வாகத்திற்கு., சகோதரியின் அருமையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி., பயனுள்ள வெவ்வேறு இணைய ஆக்கங்களை இங்கு தெரியப்படுத்துவதால் ஏராளமானோர் படித்து பயன்பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    ReplyDelete
  5. வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. அல்லாஹ்வின் பாதையில் மென்மேலும் முன்னேற தங்களுக்கும் என் வாழ்த்துக்கள். நம்முடைய நல் அமல்களை பொருந்திக் கொள்ள அல்லாஹ்விடம் து'ஆ செய்யவும்.

    ReplyDelete