Friday, September 17, 2010

'தோட்டாக்கள்'


தமிழ் முஸ்லிம் சமூகத்திலிருந்து, கலை இலக்கிய ஊடகத் தளத்தில் தீவிர செயலாற்றி வரும் குறிப்பிட்ட சிலரில் ஒருவர். முஸ்லிம்களின் அரசியல் எழுச்சிக்காகவும், மறுமலர்ச்சிக்காகவும் வேண்டி அழுத்தமான பதிவுகளை தந்து கொண்டிருப்பவர். இந்தியச் சூழலில் தலித்துகளும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து அரசியல் சக்தியாய் பரிணமிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். குஜராத் இனப்படுகொலை குறித்த அவரது 'தோட்டாக்கள்' கவிதை தொகுப்பு [2003] இலக்கிய மற்றும் அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்திய ஒன்று. முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு குறித்து இவர் இயக்கி வெளியிட்ட 'பிறப்புரிமை' என்னும் ஆவணப்படம் [2006] அனைவரது கவனத்தையும் பெற்றது. அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை குறித்த 'கைதியின் கதை' ஆவணப்படம் [2007] அதிகாரத்தை நோக்கிய உண்மையின் குரலாக ஒலித்தது. தற்போது, இந்திய முஸ்லிம்களின் ஒப்பில்லா தலைவர் காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக எடுத்து வருகிறார். கவிதை, எழுத்து,பேச்சு,ஆவணப்படம்,அரசியல் ஆர்வம் என தொடர்ச்சியாக இயங்கி வருகிறார். பிறப்பிடம் கன்னியாகுமரி மாவட்டம் ஆளூர் கிராமம்.



அப்துல் நாசர் மதானி - அதிகாரத்தின் இரை


திருமாவளவனின் முஸ்லிம் அரசியல், மாற்றமா ஏமாற்றமா?


ஆளூர் ஷாநவாஸ் இயக்கும் காயிதே மில்லத் ஆவணப்படம்!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEMtFs19ZZcvGGUEPLImrwmJdny4FyzH9vn1rUgQOxoTQjMcs0qmJ5U33UGjXcdS_RSvYWt7kMvbVPJ5K-PcRhp1tBfdLr87sQfiXVhjBXYCM627GnxipWv9lt8ylj4quPar5_Okt1QUk/s1600/QM.jpg
பெரியாரைப் பற்றி ஒருவர் அறிய வேண்டும் என்றால்,அவர் எந்நேரமும் பெரியார் திடலுக்கு செல்லலாம். பெரியாரைப் பற்றிய வகை வகையான புத்தகங்களை அள்ளிக்கொண்டு போகலாம்.இணைய தளங்களில் 'பெரியார்' என்று தட்டினால் விரல் நுனியின் அசைவில் விழித்திரையின் முன் வந்து விழுகிறது, அவர் வரலாறு.

அண்ணாவுக்கும் இதே நிலை. காமராஜருக்கும் இதே நிலை. நம் காயிதே மில்லத்துக்கு என்ன நிலை?

தமிழ்நாட்டுத் தெருக்களில் நடமாடிக் கொண்டு இருக்கும் இன்றைய இளைய தலைமுறையினரில் ஒருவரை பிடித்து நிறுத்தி, பெரியாரின் புகைப் படத்தைக் காட்டி இவர் யாரென்றுக் கேட்டால்,உடனே பதில் கிடைக்கும். அண்ணாவைக் காட்டினாலும், காமராஜரைக் காட்டினாலும் அதே நிலைத் தொடரும்.
ஆனால் காயிதே மில்லத்தைக் காட்டினால்....?

நாங்கள் காட்டினோம்.தமிழ்நாட்டுத் தெருக்களில் நடமாடும், பொது இளைஞர்களிடம் அல்ல; காயிதே மில்லத்தின் பெயர் தாங்கிய கல்வி நிறுவனங்களில் பயிலும் முஸ்லிம் இளைஞர்களிடம்.

காயிதே மில்லத்தின் புகைப் படத்தைப் பார்த்த உடன் இளைஞர்கள் சொன்ன பதில், 'இவர் நாகூர் ஹனிபா'.

இந்த புது ரத்தம் பாய்ச்சும் இந்த புயலின் பிளாக் http://aloorshanavas.blogspot.com/

நீங்களும் சென்றுதான் பாருங்களேன்,
புல்லரிக்கும் உணர்வை
உங்களுக்குள்ளே கண்டுகொள்வீர்கள்

4 comments:

  1. யோசிக்க வைத்து இருக்கீங்க. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. தேவையான பகிர்வு.

    ReplyDelete