Saturday, March 20, 2010

வயிற்றுக்கு உணவு,??? வாங்க,ஜலீலாகிட்டே கேட்போம்!

என் பெயர் ஜலீலா, சென்னையில் பிறந்து வளர்ந்து, இப்போது துபாயில் வசிக்கிறேன். அன்பான‌ க‌ண‌வ‌ன், பாசமான இர‌ண்டு ஆண் குழ‌ந்தைக‌ள்.

எனக்கு தெரிந்த விஷியங்களை பெண்களுக்கான பயனுள்ள டிப்ஸ்கள்,குழந்தை வளர்பு,சமையல், மற்றும் தையற்கலை ,என்னிடம் உள்ள (நான் சேகரித்து வைத்துள்ள)முத்தான தூஆக்களை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

மற்றும் பிரபல வலைதளங்கள் அருசுவை.காம் மில் சமையல் குறிப்புகள், தமிழ்குடும்பம்.காம் மில் டிப்ஸ்கள், சமையல் குறிப்புகள்,குழந்தை வளர்பு கடந்த நான்கு வருடங்களாக கொடுத்து வருகிறேன், சில குறிப்புகள் சமையலறை.காம் மிலும் கொடுத்துள்ளேன்.

நான் கொடுக்கும் ஓவ்வோரு டிப்ஸ்க‌ளும் நேரில் க‌ண்ட‌ அனுப‌வ‌ங்க‌ள்.
அதே போல் குழ‌ந்தை வள‌ர்பும் எல்லாம் என் அனுப‌வ‌ங்க‌ள் ம‌ற்றும் நேரில் க‌ண்ட‌வை.

ச‌மைய‌ல் குறிப்பு கொடுக்க‌ கார‌ண‌ம், வெளிநாட்டில் திரும‌ண‌ம் ஆகி செல்லும் ப‌ல‌ பெண்க‌ள் ச‌ரியாக‌ ச‌மைக்க‌ தெரியாம‌ல், க‌ண‌வ‌ன் ம‌னைவி பெரும் ச‌ண்டைக்குள்ளாகி, பெண்க‌ளுக்கு ம‌ன‌வேத‌னை அடைகிறார்க‌ள், அவ‌ர்க‌ளுக்கு உத‌வும் வ‌ண்ண‌ம் என் குறிப்புக‌ளை போட்டு வ‌ருகிறேன்.

நாம் இம்ம‌ண்ணில் பிறந்து விட்டோம்.அப்படியே அன்றாட வேலைகளை முடித்து கொண்டு திறமைகள் நம்முடன் புதைந்து போகாமல் மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவனும் என்ற எண்ணத்தில் எனக்கு தெரிந்த ப‌திவுக‌ளை வ‌ழ‌ங்கிக்கொண்டிருக்கிறேன்.

இப்படிக்கு
ஜலீலா பானு
துபாய்.

உண்மையிலேயே,இந்த சகோதரியின் ஒவ்வொரு கட்டுரையும் மிக ஆழமான விஷயங்களில் கூட - எல்லாருக்கும் எளிதில் புரியும் வண்ணம் எழுதக்கூடியவர்.அவர்களின் ஒவ்வொரு சமையல் குறிப்பையும் பார்த்து - பெண்கள் மட்டுமல்ல,ஆண்களும் சமையல் கற்றுக் கொள்ளலாம்,அந்த அளவுக்கு எளிமைப்படுத்தி எழுதி வருகிறார்.

சரி வயிற்றுக்கு உணவு??? அதையும் விடவில்லை அந்த சகோதரி.இறைவன் படைத்த அந்த உயிருக்கு முத்தான துவாக்கள் என பிளாக் தொடங்கி-இறைவனை எப்படிப் புகழ வேண்டும் என நமக்கு சொல்லித்தருகிறார்.இறைவனின் நினைப்பில்லா இதயம் செத்துவிட்ட இதயம்.இறைவனை நினைந்து அவனைப் போற்றும் இதயமே உயிருள்ளது,ஜீவனுள்ளது.அதற்கு தன் எழுத்துகள் மூலம் தொண்டு செய்யும் நற்பண்பு எல்லா பெண்களுக்கும் மட்டுமல்ல,ஆண்களுக்கும் அந்த உணர்வு வேண்டும்.

சிலர் பிளாக் வைத்திருக்கிறேன் பேர்வழி என்று நையாண்டி-கேலி-கேளிக்கைகளில் தங்கள் கவனத்தை சிதற விட்டுவிட்டு,சுவனத்தை - இறைவன் நமக்கு பரிசாக தரும் அந்த இன்பத்தை இழந்துவிடுகின்றனர்.ஆனால்,நம்(என்)சகோதரி ஜலீலா அவர்கள் அதற்கெல்லாம் வேறுபட்டு அறுசுவை உணவின் ருசியையும்,இறை நினைப்பின் அவசியத்தையும் உணர்ந்து,செயல்படுத்தி வருகின்றார்.

இதுபோதாதென்று,டிப்சுக்கேன்றே ஒரு பிளாக்,அதில் பல பயனுள்ள தகவல்கள்,குறிப்புக்களை தந்து உதவுகிறார்.
அதேபோன்று குழந்தை வளர்ப்பு பற்றிய அடிப்படை தகவல் கொண்ட அவர்களுடைய பிளாக் மூலம் புதிதாக பிள்ளை பெறப்போகும் பெண்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

(அக்கா,நீங்க ஆண்களுக்கேன்றே ஒரு பிளாக் ஆரம்பிச்சு,அதுல ஆண்கள் பிரயோசனப்படுற மாதிரி எழுதுங்களேன்.)

மொத்தத்துல,எது நல்லதோ,அதை மக்களுக்கு நம்மால் உதவி செய்யவேண்டும் என எண்ணி-தன் எழுத்து மூலம் தொண்டு செய்து வரும் சகோதரியும்,அவர் கணவர்,பிள்ளைகள்,மற்றும் குடும்ப உறுப்பினர் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளுக்கும்அன்புக்கும் பாத்தியதை உடையவர்களாக ஆகி,இம்மையிலும்,மறுமையிலும் வெற்றி பெற நாம் துவா செய்வோமாக.

வாழ்த்துக்கள் ஆல் இன் ஆல் ஜலீலா அக்கா!

சகோதரியின் முகவரிகள்

http://allinalljaleela.blogspot.com/

http://jaleela-duwa.blogspot.com/

http://tips-jaleela.blogspot.com/

http://kidsfood-jaleela.blogspot.com/

Saturday, March 13, 2010

சிறப்புக்கட்டுரை "பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாத்தை ஏற்றார்".

தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் பேராசிரியருமான முனைவர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார் தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மாவில் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று (மார்ச் 12) அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனிதமக்கா சென்று உம்ரா நிறைவேற்றுகிறார்.

பெரியார் தாசன் தனது இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட செய்தி அறிந்து ரியாதில் இருந்த அவரிடம் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பத்தாண்டுகளாக தனது உள்ளத்தில் ஏற்பட்ட முடிவை இப்போது தான் நிறைவேற்ற முடிந்தது என்று பெரியார் தாசன் குறிப்பிட்டார்.

ரியாதில் எமது சிறப்பு செய்தியாளருக்கு டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அளித்த பேட்டியை இன்ஷா அல்லாஹ் விரைவில் எமது இணைத்தளத்தில் பார்க்கலாம்.


COURTESY TMMK.IN

Thursday, March 11, 2010

படிக்கலாமே !!!

"சுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே !! வருக !! வருக !! இங்குள்ள அணைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்" எல்லோரையும் அன்போடு வரவேற்கிறார் சகோ வாஞ்சூர் அலி அவர்கள்.


வீடியோவில் டாகடர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் பல கேள்விகளுக்கு சிரித்த முகத்துடன் நயமாக-அழகாக குரான்-ஹதீஸ் ஆதாரங்களுடன் பதில் சொல்கிறார்.

உதாரணமாக,
பலரின் இரத்தத்தை உறிஞ்சி ஒருவன் வாழும் வட்டித்தொழிலை பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது.?
இஸ்லாம் இசைக்கு எதிரியா?
கெட்டவன் சுகமாக வாழ்கிறானே ஏன்?
அண்டை வீட்டாரை பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?


இப்படி பலவாறான கேள்விகள்.

இப்படி ஒரு வித்தியாசமான பிளாக்கின் சொந்தக்காரர் வாஞ்சூர் அலி அவர்கள்,சொந்த ஊர் இளையான்குடி,வசிப்பிடம் சிங்கப்பூர்.

அவருடைய அந்த பிளாகிலேயே ஒரு தொடர் கட்டுரையின் லிங்க் கொடுத்துள்ளார்.

அது

முஹம்மது நபி (ஸல்), யூதர்கள்‍, பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு.


இஸ்லாத்தின் வானளாவிய வளர்ச்சியின் அஸ்திவாரம்.கலீஃபா உமர்.

பாலஸ்தீன் நிலப்பரப்பின் பொற்காலம். சிலுவைப்போர் தொடக்கம்.

முழங்கால் அளவு ரத்தம்.-நீண்டு போன சிலுவை யுத்தம்.

சுல்தான் ஸலாஹுதீன்..கிறிஸ்தவர்களிடம் கரிசனம்.

அரசர் ரிச்சர்ர்டும் சுல்தான் ஸலாஹுதீனும்.சுல்தான் ஸலாஹுதினின் மரணமும் கிறிஸ்தவர்களும்.

ஸ்பெய்னில் வெளியேற்றப்பட்ட யூதர்கள். யூதர்களும் துருக்கி உதுமான் அரசும்
.


என முஸ்லிம்களுக்குண்டான தொடர்பு(பாலஸ்தீனம்)பற்றி அழகாக நடுநிலையுடன் எழுதப்பட்டுள்ளது.நல்ல தேவையான,அனைவரும் படிக்கவேண்டிய-உண்மையை உணர வேண்டிய தொகுப்பு.

பல நல்ல விஷயங்களை தொகுத்து தரும் அவர் பிளாக் ஒரு தனி ரகம் என்றால் மிகை அல்ல.

நீங்களும் சென்று கேட்டுத்தான்(படித்துத்தான்)பாருங்களேன்.

http://vanjoor-vanjoor.blogspot.com/