Saturday, May 26, 2012

உங்களைத் தேடி வரும்


குரான் வசனங்கள்,ஹதீஸ்  மொழி பெயர்ப்புடன் வேண்டுமா?
நபிமார்களின் வரலாறு தெரிய வேண்டுமா?
பெண்கள் ஸ்பெஷல் 
மற்றும் 
இதர அம்சங்களுடன்

பதிவு செய்துகொள்ளுங்கள்,

உங்கள் ஈமெயில் மூலம் 

உங்களைத் தேடி வரும்




http://tharjuma.wordpress.com/

Monday, May 21, 2012

நீங்க உஷாரா இருங்க


By Engr.Sulthan  

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காளான், பேல் பூரி, பானி பூரி விற்கும் தள்ளுவண்டிக் கடைகள் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கில் முளைத்திருக்கின்றன. ஒரு பிளேட் ரூ. 10 என்பதால் மாலை நேரத்தில் இக்கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் மொய்க்கிறது. மாணவர்கள், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் தினமும் விரும்பி காளான் உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

சிலர், மனைவி, குழந்தைகளுடன் கூட கடைகளின் முன் நின்று ருசிக்கின்றனர். அவற்றை உண்பதால் ஆரோக்கியத்துக்கு கேடு ஏற்படும் என்பதை பற்றி, பலரும் அறியாதவர்களாகவே உள்ளனர். பெரும்பாலான கடைகளில் ‘காளான்’ என்ற பெயரில் விற்கப்படும் ‘அயிட்டம்‘ காளான் இல்லை என்பதே உண்மை. முட்டைக்கோஸ், மைதாமாவுடன் உப்பு சேர்த்து பிசைந்து எண்ணையில் வடை போல பொறித்து வைத்துக்கொள்கின்றனர்.

பின்னர் சிவப்பு நிறமேற்றுவதற்காக ஜிலேபிபவுடர், காரத்துக்கு மிளகாய்த் தூளை தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி, அவற்றுடன் ஏற்கனவே பொறித்த முட்டைக்கோஸ் மைதாமாவு கலவை ‘வடை‘களை போட்டு வேக வைத்து வாடிக்கையாளருக்கு பிளேட்டில் பரிமாறுகின்றனர். இவற்றில் காரமும், உப்பும் அதிகம் சேர்த்திருப்பதால் சுவை கூடி நாவை சுண்டியிழுக்கிறது; இதுவே, காளான் என்ற பெயரில் விற்கப்படுகிறது.

இதையறியாத பலரும் ‘காளான்‘ சுவையை மனதில் நினைத்தபடி, போலி காளான் ‘அயிட்டத்தை‘ விரும்பி சுவைக்கின்றனர். இவ்வகையான காரம், ஜிலேபி பவுடர், அதிக உப்பு கலந்த முட்டைக்கோஸ், மைதாமாவு கலவை தீனியை தொடர்ச்சியாக தினமும் வாங்கி உட்கொள்வது, உடல் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் என்கின்றனர் சுகாதாரத் துறையினர்.

மேலும், ஒருமுறை உணவை வேகவைக்க பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதால் அவற்றில் நச்சுதன்மை கலந்து, ஆரோக்கியத்துக்கு ஆபத்தை விளைவிக்கிறது. எனினும், வாடிக்கையாளர் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், தள்ளு வண்டிக்காரர்களின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் இதுபோன்ற போலி ‘காளான்‘ விற்பனை தள்ளுவண்டிக் கடைகள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட இட்லி, தோசை விற்கும் தள்ளுவண்டி கடைகள், சிறு ஒட்டல்களை சுகாதாரத்துறையினர் கண்டுகொள்வதில்லை. இந்த துறையின் அலட்சிய போக்கு, மக்களின் ஆரோக்கியம் மற்றும் பொதுசுகாதாரத்தின் மீது அக்கறை காட்டாததையே காட்டுகிறது.

மாரடைப்பு ஆபத்து

அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது : சுகாதாரமற்ற, அதிக காரத்தன்மையுள்ள உணவுப்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிறு, குடல் சம்பந்தப்பட்ட உபாதைகளுக்காக சிகிச்சை பெற வருவோரிடம், அவர்களது அன்றாட உணவு முறைகள் குறித்து விசாரிப்பது வழக்கம். அப்போது, பலரும் சாலையோரத்தில் விற்கப்படும் அதிக காரத்தன்மையுடைய ‘காளான்’ ‘பானிபூரி’ ‘பேல் பூரி’யை தினமும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.

இது போன்ற, உடல்நலத்துக்கு எதிரான உணவு வகைகளை தவிர்த்தால், ஆரோக்கியம் மேம்பாடும். இல்லாவிடில் அல்சர், ஜீரணக்கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படும். மாசலா, ஜிலேபி பவுடர் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தி சமைக்கப்படும் உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு, ‘கேன்சர்‘ பாதிக்கக்கூடிய வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை மீண்டும், மீண்டும் கொதிநிலைக்கு கொண்டு சென்று அதில் உணவுப்பொருட்களை வேக வைக்கும் போது, ‘ஹைட்ரோ கார்பன்‘ அளவு அதிகமாகிறது. இதில், சமைக்கப்படும் உணவை தொடர்ச்சியாக உட்கொள்வோருக்கு கொழுப்புச் சத்து கூடி ரத்தக்குழாய் அடைப்பு, மாரடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறு எச்சரிக்கின்றனர்
 நன்றி: தினகரன்

Thursday, May 10, 2012

ஜாஹிலிய்யா பேச்சும்,எழுத்தும்





ஒன்று) மார்க்க அறிவு இல்லாமை.

நமக்கு நம் மார்க்கம் எப்படி நடக்கச் சொல்கிறது என்று தெரியாத காலமெல்லாம் - அந்த அறியாமை இருக்கும் போதெல்லாம் மந்திர-தந்திர,தாயத்து,தட்டுக்கள் இன்னும் இது போன்ற மூட நம்பிக்கைகள் இருந்து கொண்டே இருக்கும்.ஆனால் எப்பொழுது குரான்,ஹதீஸ் இப்படித்தான் போதனை செய்கிறது என நாம் தெரிந்து கொண்டு விடுவோமேயானால் இன்ஷா அல்லாஹ் விழித்துக் கொண்டுவிடுவோம்.உதாரணமாக,சுமார் இருபது வருடங்கள் முன்பு இருந்த அறியாமை இருள் இன்று கொஞ்சம் விலகி இருக்கிறது,காரணம் - குரான்,ஹதீஸ் பற்றிய விழிப்புணர்வு.ஆக மார்க்க அறிவு (குரான்-சுன்னா அடிப்படையில்)இல்லையன்றால் மேற்கண்ட முசீபத்துக்கள் நம்மை ஆட்கொண்டுவிடும்.


இரண்டு) மார்க்கத்தில் சமரசம் செய்தல்,

வாழ்க்கையில் பலவற்றில் சமரசம் செய்து கொள்ளலாம்,ஆனால் அல்லாஹ்,ரசூல் ஸல் அவர்கள்,குரான்-ஹதீஸ்,(இஸ்லாம்)விஷயத்தில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது.உதாரணமாக,நமக்குத் தெரிந்தவர்,வேண்டப்பட்டவர் ஒருவர் ஒரு விஷயத்தை எழுகிறார் அல்லது சொல்கிறார் என வைத்துக் கொள்வோம்.அப்படி சொல்லப்படும்,எழுதப்படும் செய்தியை படிப்பவர்கள் முதலில் அதனை குரான்-ஹதீஸ் கண் கொண்டு நோக்கி,மார்க்க முரண் இல்லாத கருத்தாக இருக்கிறதா என பார்க்க வேண்டும்.(அல்லாஹ்,குரானில் கூறப்படும் விஷயங்களாக இருந்தாலும் சிந்தியுங்கள் எனக் கூறுகிறான்).அது சரியான கருத்தாக இருப்பின்,அதை ஊக்கப்படுத்தலாம்,மற்றவர்களிடம் கொண்டு போகலாம்.
ஒரு சமயம்,அது மார்க்கத்திற்கு முரணாக,குரான்,ஹதீஸ் கருத்துக்கு மாற்றாக இருந்தால்,அந்தக் கருத்தை எத்தனை பேர் ஆதரித்தாலும்,நாம் எதிர்த்து வாதிடவேண்டும்,நம்மை திட்டினாலும்,எள்ளி நகையாடினாலும் அல்லாஹ்வுக்காக நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும்.எழுதினவர் நம்ம சாச்சா,பெரியப்பாதானே,நமக்கு தெரிந்தவர்தானே என்று கொண்டு ,மார்க்க விஷயத்தில் சமரசம் பண்ணிக் கொண்டால் ,அந்த மூடக் கருத்துக்கள் நம் மக்களிடையே பரவி,இதுவும் இஸ்லாத்தில் உள்ளதுதானோ எனும் நிலைக்கு வரும்.அல்லாஹ் பாதுகாப்பானாக.

மூன்று) இது போன்ற வார்த்தை பிரயோகம்.

தாயத்துக் கட்டு,சூடம் கொழுத்து,அணைத்து சத்தியம் செய்,படி கட்டு,( அப்ப நான் என்ன மாரியம்மன் கோயில்லயா “படிக்கட்டு”கிறேன்?)இன்னும் இது போன்றும் இன்னும் மற்ற சில வார்த்தைகளையும் நாம் பயன்படுத்துவதால்,புழங்குவதால் நாம் அறியாமையின் காரணமாக் முன்பு செய்த சில தீய பழக்கங்களை அதே பொருள்தரக் கூடிய,அல்லது அதற்க்கு நெருக்கமாக பொருள் வரக் கூடிய வகையில் இருக்கும் போது ,அல்லாஹ் நம்மை மன்னிக்கட்டும்,நாம் பாவியாகிவிடுகிறோம்.அதனால் இது எவ்வளவு விபரீத செயல்.

அல்லாஹ்,இனி மது அருந்தக் கூடாது என தடை விதித்தவுடன்,சாராய ஊரல்களை போட்டு உடைத்தனர் நம் கண்மணிகள் சஹாபா பெருமக்கள்.ஆனால் மது குடிக்கும் கோப்பைகள்,குடுவைகளை வீட்டில் வைத்து இருந்தார்கள்.ஆனால் நம் தலைவர் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அந்தக் கோப்பைகளையும் (மதுக் கோப்பை)இனி பயன்படுத்தக் கூடாது என தடை போட்டார்கள்.சாராயத்தை போட்டு உடைத்தாயிற்று,எனவே அந்த கிண்ணங்களில் தண்ணீர் ஊற்றி வைக்கலாமே?ஏன் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் - மொத்தமாக தடை செய்தார்கள்.இங்கேதான்,நமக்கு நம் தலைவரின் சைக்காலஜி திறன் புரிகிறது.சாராயம் இனி இல்லை என்றாலும்,அந்தக் குடுவை வீட்டில் இருந்தால்,அந்தக் குடுவையை பார்க்கும் போதெல்லாம் சாராய நினைவு வந்து விடும்,அப்படி வந்து,மீண்டும் குடிக்க நேர்ந்து விடக் கூடாது என்ற கணிப்பு.சுபானல்லாஹ்.

அடுத்து,நம் தலைவர் ஸல் அவர்கள், அய்யாமுல் ஜாஹிளிய்யாஹ் (அறியாமைக் காலம்)கால வார்த்தைகளையும் பேச தடை செய்துள்ளார்கள்.அந்த வார்த்தைகள் எல்லாமும் ஷிர்க்கை அடிப்படையாக,மூட வழக்கத்தை அடிப்படையாக கொண்டவை.நாம் மேற்சுட்டி காட்டிய வார்த்தைகளை யார் பயன்படுத்தியது,மூலம் யார் என இப்போது பாருங்கள்.ஒன்று காபிர்கள்,மற்றது குரான்,சுன்னாவை பேணாத,பித் அத களையும்,தர்காக்களையும்,தரீக்காக்களையும் கட்டி மேயும் எத்தர்கள்,(மார்க்க அறிவு இல்லாதவர்கள்).ஆக அந்த வார்த்தைகளையும்,அன்று அவர்கள் புழங்கிய அந்த வார்த்தைகளையும் நாம் ஒப்பிட்டால்,விடை ஒன்றே.ஆக-இப்படி நாம் பயன்படுத்துபோது,நம்மிடம் அந்த செயல் இல்லை என்றாலும் - அந்த நினைப்பு இருக்கிறது,அதனால்தான் அந்த வார்த்தைகளை நாம் பேசுகிறோம்.எனவே,நாம் திருந்தி விட்டோம் என எண்ணுகிறோம்,ஆனால் உண்மையில் அப்படி இல்லை.ஏனென்றால்,அந்த ஜாஹிலிய்யா வார்த்தைகள் நம் உள்ளத்தில் ஊடுருவிக் கொண்டு,சமயம் வரும்போதெல்லாம் வந்து எட்டிப் பார்க்கிறது,அதனால் ஈமான் பலவீனமைடைந்து,அந்த மூட வார்த்தைகள் வலுப்பெறுகின்றன.இப்படி வரும் சூழ் நிலையில் அந்த மூட செயலை(தட்டு,தாயத்து,மந்திரம்,தந்திரம் இன்னபிற) நாம் செய்யும் நிலை வந்துவிட்டால்????????????இந்த நேரத்தில் சைக்காலஜி அணுகுமுறையை நம் தலைவர் கையாண்ட முறையை மீண்டும் சிந்தியுங்கள்.மதுக் கோப்பைக்கும் தடை,அறியாமைக்கால வார்த்திகளுக்கும் தடை!!!!காரணம்,மனோ தத்துவ ரீதியாகவும் நாம் அந்த தீமைகளில் இருந்து விடுபடவேண்டும்.அந்த நினைப்பே வரக் கூடாது என்பது தானே?

இப்போதுள்ள மருத்துவர்கள் ,மனோ தத்துவ அறிஞர்கள் சொல்வதாக நாம் அறிந்துள்ளோம்,
காலையில் எழுந்து பச்சை பசேல் என்ற காட்ச்சிகளைப் பார்த்தால் மனம் உற்சாகப்படும் என்று.
திரைப்படம் அதிகம் பார்க்கும் ஒருவனிடம் பேசினால்,படங்களில் வரும் காட்ச்சிகளை மேற்கோள் காட்டி பேசுவான்.
பழனி பாபா அவர்களை ஒருவருக்கு மிகவும் பிடிக்கும்,அவர் பேச்சை அதிகம் கேட்கிறார்,அவரை கவனியுங்கள்,பாபாவின் பேச்சும்,மானரிசமும் அவரிடம் ஒட்டிக் கொடிருக்கும்.


ஆக,அல்லாஹ்வும்,ரசூலும் கற்றுத் தராத வார்த்தைகள்(யும்)புறக்கணிப்போம்,ஏனெனில் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.


இக் கருத்தில் குறை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்,மனிதன் தவறு செய்யக் கூடியவனே.நிறை இருப்பின்,அது அல்லாஹ்வையே சாரும்.அல்லாஹ் நிறைவானவன்,அழகானவன்,மன்னிக்க கூடியவன்.அவனே நமக்கு போதுமானவன்.

Saturday, May 5, 2012

மறு பிறவி உண்டா?


கேள்வி : என்னுடைய ஒரு ஹிந்து நண்பன் மறு பிறவி இல்லையென்பதை நிரூபித்தால் நான் இஸ்லாத்தில் வந்து விடலாம் எனக் கூறியுள்ளான். எனவே தயவு செய்து பதில் தந்தால் அந்த நண்பனின் சந்தேகம் தீர்க்க வாய்ப்பாக அமையும். ஹெச்.ஜாஃபர் சாதிக்கேரளா.

பதில் : மறு பிறவி என்பது கற்பனையே தவிர வேறில்லை என்பதைச் சிரமமின்றி நிரூபித்து விடலாம்.

அதற்கு முன்னால் மறு பிறவி என்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்கள் இன்று நல்ல வாழ்வைப் பெற்றிருந்தாலும் மோசமான வாழ்வைப் பெற்றிருந்தாலும் அதற்குக் காரணம் முந்தைய பிறவியில் அவர்கள் செய்த வினை தான். இந்தப் பிறவியில் ஒருவன் நல்லவனாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் சகல இன்பங்களையும் பெற்று வாழ்வான்.

இப்படி ஏழு ஜென்மங்களை எடுப்பதாகக் கூறுகின்றனர். மனிதனோடு மட்டும் இதை நிறுத்திக் கொள்வதில்லை. மற்ற உயிரினங்கள் வரை விரிவு படுத்துகின்றனர்.

நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால் அடுத்த பிறவியில் நாம் நாயாகவும் நாய் மனிதனாகவும் பிறப்பெடுப்போம். அப்போது மனிதனாகப் பிறப்பெடுத்த நாய்நாயாகப் பிறப்பெடுத்த நம்மை அதே போன்று சித்திரவதை செய்யும் என்றெல்லாம் உபன்னியாசங்களில் நாம் கேட்டுள்ளோம்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இன்னொரு அடிப்படை உண்மையைக் கவனியுங்கள்.

இன்றைக்கு உலகில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்ததுஇன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள். இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும்.

மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில் போய் முடியும்.

அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிருந்து தான் பல்கிப் பெருகின. மனிதனையும் சேர்த்து எத்தனை வகை உயிரினங்கள் உலகில் உள்ளன என்று நம்மிடம் கணக்கு இல்லை. உதாரணத்துக்காக ஐம்பது லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு வகை உயிரினத்திற்கும் ஒரு ஜோடி என்று வைத்துக் கொண்டால் ஐம்பது லட்சம் ஜோடிகள் அதாவது ஒரு கோடி உயிரினங்கள் இருந்திருக்கும்.

மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாகமனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிரஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது. ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும்.

பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும். 70 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம். நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன.

புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. மறு பிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.

அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன?

இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம்.

ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோதண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது.

இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமாநிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமாஅதுவும் தெரியாது. அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்?

ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாதுஅதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது.

அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதாநான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும்நீதிக்கும் சரியாக இருக்குமா?

எனவே தத்துவ ரீதியாக விவாதித்தாலும் மறு பிறவி சரிப்பட்டு வரவில்லை. காரண காரியத்தோடு அலசினாலும் சரிப்பட்டு வரவில்லை.

 

Tuesday, April 24, 2012

அதிரை கவுன்சிலர்களுக்கும்,இயக்க நண்பர்களுக்கும் அவசர வேண்டுகோள்......


மே 1 முதல் நடைபெற இருக்கும் சாதி,மத,வகுப்புவாரி கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் சரியான தகவல்களை அளிப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி , பதிவுகள் ஏதாவது ஏற்பாடு செய்தால் நல்லது.

பொதுவாக வெளிநாட்டில் வசிப்பவர்களை அதிகாரிகள் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்து விடுகின்றனர். குடும்ப அட்டைக்கு (ரேஷன் கார்டு) பதிவு செய்வதற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் வேறுபாடு உள்ளது. முன்னது உணவுப் பொருள் விநியோகத்திற்காக கணக்கிடப்படுகிறது. அதில் வெளிநாட்டில் வசிப்பவர்களை சேர்க்காவிட்டால் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை. பின்னது அரசு நலத்திட்டங்கள் இடஒதுக்கீடு வேலைவாய்ப்பு ஆகியவற்றை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக இருக்கிறது. 

கணக்கெடுப்பு தொடர்பான விவரங்கள் எழுத்துப்பூர்வமாக இல்லாமல் நேரடியாக கம்ப்ïட்டரில் பதிவு செய்யப்படுகின்றன..எனவே இக்கணக்கெடுப்பில் அதிரையில் பிறந்த அணைவரையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
 

இந்த விஷயத்தில் அசிரத்தையாக இருந்து விடக்கூடாது.

- வழிகாட்டி பதிவுகளை அணைத்து அதிரை வலைப்பக்கங்களிலும் பதிவது.
- அதிரையின் சமுதாய அரசியல் இயக்கங்கள், மற்றும் சங்கங்கள் இவ்விஷயத்தை வீடுகளில் வலியுறுத்துதல்
- பதிவு செய்ய வரும் அதிகாரிகளுடன் தெருவாரியாக தன்னார்வலர்களை உடன் அனுப்புதல்
- கவுன்சிலர்கள் உடனிருப்பதும் அவசியம்.
மிகச்சிரமமான பணியான இந்த கணக்கெடுப்பு அடிக்கடியோ ஆண்டுதோறுமோ ஐந்தாண்டுகளிளோ எடுக்கப்படுவதில்லை. எப்போதாவது அத்தி பூத்தாற்போல் எடுக்கப்படுகிறது. எப்படியும் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே அரசு திட்டங்களும் ஒதுக்கீடுகளும் இருக்கும். நாளேடுகளில் இதர சாதி சங்கங்களின் அறிக்கைகளை படித்து பார்த்தால் இதன் முக்கியத்துவம் விளங்கும்.

Friday, April 20, 2012

இலங்கையில் பள்ளிவாசல் உடைப்பு,பதட்டம்



தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாயல் உடைக்கப்பட்டது தொடர்பாக யாழ் முஸ்லிம் வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம்.
தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாயல் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் பௌத்த தேரர்களினால் உடைத்து நொருக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் புனித ஜூம்ஆத்தொழுகைக்காக முஸ்லிம்கள் ஒன்றுசேர்ந்திருந்த நேரத்தில் பெருமளிவலான பௌத்த தேரர்களும் அவர்களுக்கு ஆதரவான பெரும்பான்மையினத்தவர்களும் பள்ளியினுள் கூடியிருந்தவர்களை அப்புறப்படுத்திவிட்டு பள்ளிவாயிலை இடித்து நொறுக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தினராலும் பொலிசாராலும் குறித்த கும்பலைக்கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பள்ளிவாசலுக்கு எதிராக சதித்திட்டங்கள் மற்றும் நாசகார செயற்பாடுகள் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்ததை பள்ளிவாசல் நிர்வாகிகள் பல அரசியல் வாதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தம்புள்ள ஜும்மாஹ் மஸ்ஜித் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவுடன் தொடர்பு கொண்டு பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் மலேசியா விமான நிலையத்தில் இருந்த போது மிலிந்த மொரகொடவுடன் தொடர்பு கொண்டு பாதுகாப்பு செயலாளருடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது பாதுகாப்புகான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள.
பாதுகாப்பு செயலாளர் அமைச்சர் ஜானக்க பண்டார தென்னகோனை தொடர்பு கொண்டு பேசுமாறும் தெரிவித்திருத்தார் . அமைச்சர் ஜானக்க பண்டார தென்னகோனின் தொலைபேசி ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அவரின் இணைப்பு செயலாளருடன் தொடர்பு கொண்டு குறித்த பாதுகாப்பு விடயம் தொடர்பாக பேசியுள்ளார்.
இவற்றையெல்லாம் மீறியே தற்போது தம்புள்ளையில் அல்லாஹ்வின் இல்லம் சிங்களக் காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
பள்ளிவாசலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை முன்னமே அறியப்பட்ட நிலையில் இதுதொடர்பில் ஏன் உரிய நடவடிக்கைகளை முஸ்லிம் தலைமைகள் மேற்கொள்ளவில்லையென தற்போது பரவலான கேள்வி எழுந்துள்ளது. இவ்விவகாரத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று முஸ்லிம் அரசியல் தலைமைகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள தவறியுள்ளதாக பரவலாக முஸ்லிம்கள் தரப்பில் குற்றம் சுமத்தபட்டுள்ளது.
முஸ்லிம் தரப்பு ஊடகங்கள் பள்ளிவாசல் பற்றிய அச்சுறுத்தலை நேற்றும் இன்றும் முன்கூட்டியே வெளியிட்டிருந்தன. இதனை முஸ்லிம் அரசியல் தலைமைகள் கவனத்திற்கொண்டு இருக்குமாயின் அல்லாஹ்வின் இல்லம் தகர்க்கப்பட்டிருப்பதை நம்மால் தடுத்திருக்கலாம் அல்லவா..??
Thanks to Jafna Muslim


மேலும் அதிக தகவல்களுக்கு,




http://kattankudi.info/

Sunday, April 15, 2012

"மது தீமைகளின் தாய்" - நபிகள் நாயகம்


திருவாரூரைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனதுஇடுப்பில் மறைத்துக்கொண்டு சென்ற பீர் பாட்டில் வெடித்து இறந்திருக்கிறான்! எத்தனை சிறிய வயதிலேயே குடிப்பழக்கம் தொடங்கிவிடுகிறது என்பதற்கான ஒரு சின்ன ஆதாரம் இது! வெறும் 45மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை.
 
இந்தக் குடிநோயின் அறிகுறிகள் என்னென்னஇந்தப் புதைகுழிக்குள் விழாமல் இருப்பது எப்படிதப்பித்தவறி விழுந்துவிட்டவர்கள் குடியின் ஆக்டோபஸ் பிடியிலிருந்து மீண்டு வருவது எப்படிகுடிநோயிலிருந்துஒருவர் மீண்டுவர சொந்தமும் நட்பும் எப்படி உதவ முடியும்?அடுக்கடுக்காகப் பிறக்கும் அத்தனை கேள்விகளுக்கும் வல்லுநர்களிடம் விடை உண்டு.  
 
''ஆரம்பத்தில் வெறும் ஆசைநண்பர்களின் வற்புறுத்தலுக்காக மதுஅருந்துவார்கள்பின்பு அதில் தொடர்ந்து  நாட்டம் ஏற்பட்டு குடிக்கஆரம்பிக்கிறார்கள். நாளடைவில்இன்னும் அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும். எங்கேஎப்படிக் குடிக்கலாம் என்று மதுவைப் பற்றிய சிந்தனைதான் அதிகமாக இருக்கும். இவையே ஆரம்பக்கட்ட நிலை.

 
அடுத்துகுடிப்பதைக் கட்டுப்படுத்தவோமதுவின் அளவைக் குறைக்கவோமுடியாது. வற்புறுத்தலின்பேரில் சிறிது காலம் நிறுத்துவதுபோல்இருந்துவிட்டுமறுபடியும் அதிகமாகக் குடிப்பார்கள். கோபம்வெறுப்பு,சண்டைஇவையே இடைப்பட்ட காலகட்ட நிலைதொடர்ந்து அதிகமாகக் குடிப்பதுகுடிப்பதற்காகக் கடன் வாங்குவதுபொய் பேசுவதுதிருடுவது,குடிக்கத் தடுப்பவர்களை அடிப்பதுகாரணமே இல்லாமல் மனைவியின் நடத்தையைச் சந்தேகிப்பது என நிலைமை விபரீதமாகும். 'குடித்தால்தான் சிறிதளவேனும் செயல்பட முடியும்’ என்கிற உச்ச நிலை உருவாகும். இவைதான் தீவிர இறுதிக்கட்ட நிலை'' என்கிறார் டி.டி.கே. மருத்துவமனை சீனியர் தெரபிஸ்ட் மற்றும் கவுன்சிலர் ஜாக்குலின் டேவிட்.

குடிநோயாளிகள் என்னென்ன பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை,டி.டி.கே. மருத்துவமனையைச் சேர்ந்த  டாக்டர் அனிதாராவ் விளக்குகிறார்.

''
ஏழைபணக்காரர் என்ற பாகுபாடே இல்லாமல் குடிப்பவர்களில் யாருக்குவேண்டுமானாலும் குடிநோய் வரலாம். குடிப்பவர்களில் 10 முதல் 20சதவிகிதத்தினர் மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ரத்தத்தில் 20 மில்லிகிராம் ஆல்கஹால் கலந்தாலே பார்வைத் திறன் குறையும். 30 மில்லி கிராம் என்ற அளவைத் தொட்டால் தசை தன் கட்டுப்பாட்டை இழக்கும். சிந்திப்பதுபுரிந்துகொள்வதுமதிப்பிடும் தன்மை குறைவது என்று சங்கிலித் தொடர்போல் எல்லாம் பாதிக்கப்படும். உடல் அளவிலும் மன அளவிலும் குடிக்கு அடிமையாகிவிடுவதால் வாழ்க்கையில் பலவிதமான பிரச்னைகள் ஏற்பட்டாலும்கூட குடிப்பதை அவர்களால் நிறுத்த முடியாது. ஏனெனில்குடியை நிறுத்தும்போது கை நடுக்கம்தூக்கமின்மை,மனச்சோர்வுசிந்திக்கும் திறனில் பாதிப்புபயம்பிரமைநரம்புத் தளர்ச்சி,உணர்ச்சி இன்மை என்று பல்வேறு பாதிப்புகள் உருவாகும். கணையத்தில் ரணம்தோல் தொடர்பான வியாதிகள்தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னைஊட்டச்சத்துக் குறைபாடுவயிற்றுப்புண்ஜீரணசக்தி குறைதல்,புற்றுநோய் அபாயம்கல்லீரல் வீக்கம்மஞ்சள்காமாலைஇதயத் துடிப்பில் மாற்றம்ரத்தக் குழாய்கள் பாதிப்புஇதய தசைகள் பழுதடைதல் என்று உடலின் எந்த உறுப்பையும் இந்தக் குடிநோய்விட்டுவைக்காது.  குடித்தவுடன் மூளை செயல்படும் திறனும் உடனடியாகக் குறைவதோடு நிரந்தரப் பாதிப்புகளுக்கும் உள்ளாகும்.
 
மதுவின் தாக்கத்தில் கார் அல்லது பைக் ஓட்டுகிறவர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாக இதுவே காரணம்'' என்கிறார் அவர்.

இவர்களை எப்படி மீட்டு எடுப்பதுஎன்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளனவழிக்காட்டுகிறார் சென்னை,  விஸ்டம் போதை மறுவாழ்வு மையத்தின் இயக்குநர் அறிவுடை நம்பி.
''குடிநோயாளிகளுக்கு குடிப்பது மட்டும்தான் ஒரே நோக்கமாக இருக்கும்.குடிப்பதற்காக ஏதாவது ஒரு காரணத்தை அவர்களே உருவாக்கிக்கொள்வார்கள். சச்சின் 100-வது சதம் அடித்தாலும் குடிசச்சின் டக் அவுட் ஆனாலும் குடி என அவர்களுக்குத் தேவை ஏதேனும் ஒரு காரணம் மட்டுமே.  

சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட உடன்முதலில் உடல் பரிசோதனை செய்யப்படும். தொடர்ந்து மது அருந்தியதால் ஏற்கெனவே உடலில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கும்,   நன்றாகப் பசித்து சாப்பிடவும்ஆழ்ந்து தூங்குவதற்கும் வழிசெய்யும் சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படும்.
இரண்டாவது கட்டமாக மனரீதியாக சிகிச்சை அளிக்கப்படும். மது அருந்தாமல்மகத்தான வாழ்வு வாழும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளல்குடியால் ஏற்படும் பாதிப்புகளை உணர்தல்வாழ்வின் உன்னதத்தை அறிந்துகொள்ளுதல்குரூப் தெரபிமீண்டு நல்லபடியாக வாழ்பவர்களுடனான கலந்துரையாடல்ஆலோசனை எனப் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படும்.

உள்நோயாளியாகச் சிகிச்சை முடிந்து சென்ற பிறகும்தொடர்ந்து இரண்டுவருடங்களுக்கு ஆலோசனைகள்மருந்துகள்பிரச்னைகளைச் சமாளிக்க வழிகள் எனச் சிகிச்சை முறைகள் தொடரும். பழைய சகவாசத்தால் சிலர் மறுபடியும் குடிக்க நேரிடலாம். திரும்பவும் குடிக்க ஆரம்பித்த இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் குடிப்பவருக்கு குற்ற உணர்வு இருக்கும். இந்தச் சமயத்தில் குடும்பத்தினர் மறுபடியும் சிகிச்சைக்கு அழைத்து வந்துவிட்டால் அவர்களை எளிதில் மீட்டுவிடலாம்.
ஒருவர் குடிநோயில் இருந்து மீண்டுநல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று மற்றவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், 'விடுபட வேண்டும்என்ற உறுதியான எண்ணம் குடிப்பவருக்கும் இருக்க வேண்டும். சிகிச்சை முடிந்து சென்ற பிறகும்அதே வேலைசூழல்சமுதாயம்குடிகார நண்பர்கள் இருக்கத்தான் செய்யும். நமக்காக எதுவும் மாறியிருக்கப்போவது இல்லை. மாற வேண்டியது குடிநோயாளிதான்''என்றார் அறிவுடை நம்பி.  

குடிநோயிலிருந்து ஒருவரை மீட்டெடுப்பதைவிட அந்தப் புதைக்குழிக்குள்ஒருவர் விழாமல் காப்பாற்றுவது புத்திசாலித்தனம். அதனால்,  குடிபோதைபற்றிய விழிப்பு உணர்வைப் பள்ளிகள்கல்லூரிகளில் இருந்தே தொடங்க வேண்டும். அப்படி செய்தால்தான் ஓர் ஆரோக்கியமான சமூகத்தை நம்மால் கட்டமைக்க முடியும்!

 பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு...

 
குடிக்கும் நேரம் வரும்போதுமனதை ஒருநிலைப்படுத்தும் வகையில் தியானம்பிரார்த்தனை அல்லது மனதை மாற்றும் வகையில் மனைவி,குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிடுவதுபொது இடங்களுக்குச் செல்வதுவிளையாட்டுகளில் ஈடுபடுவது போன்றசெயல்களில் ஈடுபடலாம்.

 
ஆரோக்கியமான பொழுதுபோக்குகளையும் நல்ல நண்பர்களின் நட்பையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

 
எந்தச் சூழலில்யார் குடிக்கக் கூப்பிட்டாலும்மதுவை அருந்தக் கொடுத்தாலும் 'வேண்டாம்’ என்று திடமாகக் கூற வேண்டும்.  

பெற்றோர்களின் கவனத்துக்கு...
 
  நட்பை கவனிக்கவும், நண்பர்கள் யார் என்ற தெரிந்து வைக்கவும் .

  
பார்ட்டிஃபங்ஷன் என்று நேரம் கழித்து வரும் மகனைக் கண்டிப்பாகக் கூர்ந்து கவனிக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். வாய் குளறுதல் மற்றும் மது வாடை வந்தால் நல்ல நிலையில் இருக்கும்போது அவருடன் பேசுங்கள்,  மதுவால் வரும் கேடுகளை எடுத்துச் சொல்லிஉங்களுடைய கனிவான கண்காணிப்பில் அவர்இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

  
கூடுமானவரை பிள்ளைகளின் கையில் அதிகப் பணப்புழக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

  
நட்பு வட்டாரத்தினால்மகன் பாதை மாறுவது தெரிந்தால்ஒரிரு வாரங்கள்குடும்பத்துடன் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வது பலன் தரும். புதிய இடமும் மாறுபட்ட சூழலும் இதற்கு உதவியாக இருக்கும். மனம் விட்டு பேசுவதும் மகத்தான பலனைத் தரும்.

  வெளியூரில் படிக்கும் மகனாக இருந்தால்அடிக்கடி அவனிடம் போனில் பேசுவதுஅந்த ஊரில் இருக்கும் அக்கறையுள்ள குடும்ப நண்பர்களைப் போய் பார்க்கச் சொல்வது, 'நாங்கள் உன் அருகில்தான் இருக்கிறோம்’ என்று அடிக்கடி அவருக்கு உணர்த்துவது... இவையெல்லாம் அவருக்குள் பெற்றோர் மீதான அன்பு கலந்த மரியாதையை ஏற்படுத்தும்;தவறான செயல்களுக்கு அடிமையாகாமல் இருக்க உதவும்.

 போதை ஏறினால்... பாதை மாறினால்...

 1,30,000...
இந்தியாவில் கடந்த ஆண்டு விபத்துகளில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை இது. ஒரு பெரும் பூகம்பம்சுனாமி பேரிழப்புகளுக்கு இணையானது. உலகிலேயே விபத்துகளில் முதலிடம். இந்த மரணங்களில் பெரும்பாலானவற்றுக்கான காரணம்...  மதுப்பழக்கம்! (அதீத வேகத்தால் நேரும் விபத்துகள் 24 சதவிகிதம் என்றால் மதுவால் நேரும் விபத்துகள்40 சதவிகிதத்துக்கும் அதிகமாம்).
மது 'உள்ளே’ சென்றவுடன் உடலில் அப்படி என்னதான் செய்கிறது?

அப்போலோ மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு மருத்துவர் டாக்டர். பி. பொன்முருகன் விளக்குகிறார்.

''
நாம் உண்ணும் உணவு சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டுஅதன் பிறகு கல்லீரலில் போய் பல்வேறு பொருட்களாகப் பிரிந்து ரத்தத்தில் கலக்கும். இதேபோலதான் மதுவும் கல்லீரலுக்குச் சென்று அசிட்டால்டிஹைடு,அசிட்டிக் ஆசிட்கார்பாக்ஸிலிக் ஆசிட் எனும் மூன்று பொருட்களாக உடைந்து ரத்தத்தில் கலக்கிறது. இவை மூன்றும்  மூளையின் முக்கியப் பகுதிகளைப் பாதிக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக கிளர்ச்சியான மனநிலைஅதிக சந்தோஷம்,குழப்பம்சுயநினைவிழப்பு என்று பல்வேறு கட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும். இப்படிக் குழப்பச் சூழல் ஏற்படும்போதோ,சுயநினைவை இழக்கும் தருணத்திலோதான் வண்டி ஓட்டுகையில் விபத்து நேரிடுகிறது. 
குறிப்பாகநம்முடைய மூளையில் கட்டுப்பாடு மற்றும் உணரும் திறன்இருக்கிற கார்டெக்ஸ் பகுதி பாதிக்கப்படுவது முக்கியக் காரணம். எந்தவேகத்தில் ஓட்ட வேண்டும் என்பது ஸ்பீடா மீட்டர் பார்க்காமலேயே நமக்குத் தெரிந்திருக்கும். அதற்குக் காரணம்கார்டெக்ஸுக்குள் இருக்கும் ஓர் ஒழுங்குமுறையானது நம்மை வழிநடத்திக்கொண்டே இருப்பதுதான். ஆனால்மது அருந்திய பிறகு இந்தக் கட்டுப்பாடு போய்விடும். எல்லோரும் ஓர் ஒழுங்கில் வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கும்போதுமது அருந்தியவர் மட்டும் தாறுமாறாக ஓட்டுவதால்விபத்து நடந்துவிடுகிறது.
 
மூளைக்குள் ஒரு செல் இன்னொரு செல்லுக்குத் தகவல்களை அனுப்பும் நியூரோ ட்ரான்ஸ்மீட்டர்கள்பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த நியூரோ டிரான்ஸ்மீட்டரில் குளுட்டோமைன்காபா என்று இரண்டு நல்ல,கெட்ட தூதுவர்கள் இருக்கின்றனர். ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கு குளுட்டோமைன் என்ற நல்ல நியூரோ தூதுவர்கள் அதிகமாகச்செயல்படும்காபா தூதுவர்களின் செயல்கள் குறைவாக இருக்கும். ஆல்கஹால் அருந்தியவர்களுக்கு இது தலைகீழாக மாறிவிடும். குழப்பங்களும்விபத்துகளும் நடக்க இந்தக் காபா முக்கியக் காரணம்.
மது அருந்திவிட்டு விபத்துக்குள்ளாவதோடுவிபத்துக்குப் பிறகுமருத்துவமனையில் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. எந்தத் தகவலையுமே பெற முடியாமல் சுய நினைவற்ற ஒருவருக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும். அதனால்முதலில் அவருக்கு என்ன பாதிப்புவேறு ஏதேனும் குறைபாடுகள் இருக்கின்றனவாஎப்படி விபத்துக்குள்ளானார்... போன்ற விபரங்களைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கத் தாமதமாகும்.
அதேபோல்மது அருந்திவிட்டு அடிபட்டவருக்குப் பக்க விளைவாக வலிப்பு போன்ற வேறு பாதிப்புகளும் வரலாம். இதோடுஅவர் குணமாவதும் பாதிக்கப்படும்!''
 
மதுவை மறப்போம்! மதுவை ஒழிப்போம்!
 "மது தீமைகளின் தாய்" - நபிகள் நாயகம்  
 
ஒரு நல்லவன் மது அருந்த ஆரம்பித்துவிட்டால் அணைத்து தீமைகளையும் செய்ய ஆரம்பித்துவிடுவான்,
 
கத்துவது, வெட்கத்தை இழப்பது, ஆடுவது, பாடுவது, பெண்களை செக்ஸ் எண்ணத்தோடு பார்ப்பது,
நண்பர்களோடு அல்லது மற்றவர்களோடு வேண்டுமேன்றே சண்டைக்கு போவது,
வாகனத்தை வேகமாக ஓட்டுவது, etc  முடிவில் 
 
அடிதடி, தஹரார், கொலை, விபச்சாரம்,  கற்பழிப்பு, போலீஸ் கேஸ், ஜெயில் வாழ்கை,
அவனது குடும்பம் நடுத்தெரு, வறுமை, தற்கொலை, அடிக்கடி கணவன் மனைவி சண்டை, அதனால் குழந்தைகள் பாதிப்பு,
அதனால் விவாகரத்து etc
 
நபிகள் நாயகம்  "மது தீமைகளின் தாய்"  என்று சொன்னது எவ்வளவுபொருத்தமாக இருக்கிறது.
ஆதலால் தான் இறைவன் இந்த மதுவை மனித குலத்துக்கு தடை செய்தான்
மதுவை வாங்குவதும் விற்பதும் பரிமாறுவதும் உற்பத்திசெய்வதும் கொண்டுசெல்வதும் அனைத்தும் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் தண்டனை உண்டு. அனைவரும் பாவத்தில் சமமானவர்கள். அனைவரும் சபிக்கப்பட்டவர்கள்.
 
இதே போல்தான் வட்டியும் இறைவன்  இந்த மனித குலத்துக்கு தடை செய்தான்.
வட்டி வாங்குவதும் கொடுப்பதும் அதற்கு சாட்சியாக இருப்பதும்அனைத்தும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் தண்டனை உண்டு. அனைவரும் பாவத்தில் சமமானவர்கள். அனைவரும் சபிக்கப்பட்டவர்கள்
வட்டியினால் பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளன
 
இதே போல்தான் வரதட்சனையும் இறைவன்  இந்த மனித குலத்துக்கு தடை செய்தான்.
வரதட்சனை கேட்டு வாங்குவதும், அதற்கு உடந்தையாக இருப்பதும்,ஆண் வீட்டார்க்கு திருமண விருந்து போடுவதும்  அனைத்தும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் தண்டனை உண்டு. அனைவரும் பாவத்தில் சமமானவர்கள். மாறாக ஆண் தான் பெண் வீட்டார்க்கு திருமண விருந்து போட வேண்டும். ஆண் தான்பெண்ணுக்கு வரதட்சனை  கொடுக்க வேண்டும்.
வரதட்சனையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். திருமணம் கால தாமதம் ஆகிறது. பெண்கள் ஓடி போகிறார்கள். மாமியார் கொடுமை, etc
 
மதுவையும் வட்டியையும் ஒழிக்க வேண்டிய அரசாங்கமே அதை நடத்தினால்
மக்கள் எங்கே திருந்துவது !!!!!!!!!!!!!! மக்கள் திருந்த நினைத்தாலும் கூட அரசாங்கம் திருந்த விடாது !!!!!!!!!!
என்ன கொடுமை சார் !!!

Monday, April 9, 2012

பார்ப்பணர்களால் திணிக்கப்பட்ட.........


ஜோதிட புரட்டு. அறிவியலுக்குப் பொருந்தாத ஜோதிடத்தைப் புகுத்தியவர்கள் பார்ப்பனர்களே!. 
மனிதன் தோன்றிய நாளிலிருந்து பல பிரச்சினைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறான். முதலில் காற்றுமழைஇடிமின்னல் ஆகியவற்றின் சீற்றத்திலிருந்தும் இயற்கைப் பேரழிவுகளிலிருந்தும்விலங்குகளிலிருந்தும் தன்னை காத்துக் கொள்ள பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருந்தது. மனிதன் அறிவியல் பலமுள்ளவனாக இருந்தாலும்மனவலிமையில் சில நேரங்களில் பலமற்றவனாகவே இருந்து வருகின்றான்.

பயந்த மனிதன்பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் மனிதன் தனக்கு ஒரு வழியில் ஆதரவு கிடைக்கிறதென்றால் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டுஅதன் மூலம் பரிகாரமோ பலனோ கிடைத்திடுமென்ற நம்பிக்கை கொள்வது மனிதனின் இயல்பாக இருந்து வருகிறது.
நல்ல காரியத்திற்கெல்லாம் கைராசி பார்க்கக் கூடியவர்கள் நம் மக்கள். குடு குடுப்பைக்காரன் சொல்லும் குறியையும்குறத்தி சொல்லும் வாக்கையும்சோழி உருட்டி சோதிடம் கூறுபவனையும்கிளி ஜோதிடத்தையும் நம்புகிற நம்மக்களிடத்தில் ஜோதிடம் எளிதாக இடம் பெற்றுவிட்டது.
பொருளாதாரத்தில் சிக்கித் தவிப்பனையும்பெண்ணாசை கொண்டு அலைபவனையும் கயவர்கள்சமூக விரோதிகள்ஏமாற்றுப் பேர்வழிகள் நயந்து பேசி நம்பும் படியாகச் செய்து முடிவில் நம்பியவனை ஏமாற்றி இருப்பதைப் பறித்துச் செல்வதைப் போல, 
சமுதாயத்தில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்களையும்பணம் பணம் என்று அலையும் பேராசைக் காரர்களையும்பிரச்சினைகளைச் சந்திக்க திடமான மன உறுதி இல்லாதவர்களையும்அச்சத்தோடு வாழ்பவர்களையும் அவர்களுடைய பலவீனத்தைப் பயன்படுத்தி, 
ஜோதிடத்தால் எல்லாவற்றுக்கும் பரிகாரம் காணலாம். யோகம் இருக்கிறது. காலம் சரியில்லை என்றெல்லாம் பொய் கூறிபுரட்டுப் பேசிநம்பவைத்து பார்ப்பனர்கள் தங்கள் ஜோதிடத்தை புகுத்தியும் பரப்பியும் ஏமாந்த மக்களையும்அக்கால மன்னர்களையும் ஆட்டிப் படைத்தனர். பார்ப்பனர்களின் சுய நலத்திற்கு ஜோதிடம் நன்கு பயன்பட்டு வந்திருக்கிறது - வருகிறது.
தமிழ் மக்களின் வரலாற்றிலும்வாழ்க்கை முறையிலும் இல்லாத ஜோதிடத்தைப் பார்ப்பனர்கள் தமிழர்களிடையே புகுத்திட அக்கால மன்னர்களும் துணை செய்தனர். பார்ப்பனர்களின் பொய்யையும் புரட்டையும் நம்பியதால் ஜோதிடம் மாத்திரமல்ல,வடமொழி யான சமஸ்கிருதத்தைப் புகுத்தினார்கள். 
திருமண முறையில் வைதிகத்தைப் புகுத்தினார்கள். ஆலய வழிபாட்டை அவர்களின்ஆதிக்கத்திற்கு முழுமையாக ஆக்கிக் கொண்டனர். தமிழர்களின் வாழ்க்கை முறையிலும்வழிபாட்டு முறையிலும் பார்ப்பனர்களின் வேதபுராணக் கொள்கைகள் இடம்பெற்று வரலாயிற்று.

1300
 ஆண்டுகளுக்கு முன் நடந்த கண்ணகி - கோவலன் திருமணத்தில் வயதான பார்ப்பான் வேதம் ஓதி சடங்குகள் நடத்தி தீ வலம் சுற்றி வந்ததாகச் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீ வலம் செய்வது காண்பார்கண் நோன்பு என்னை கி.பி 2-வது நூற்றாண்டிலேயே தமிழர்களின் திருமணச் சடங்குகளில் பார்ப்பனர்கள் ஆரிய கலாச்சாரத்தைப் புகுத்தி விட்டனர்.
ஜோதிடம் பார்ப்பனர்களால்தான் தமிழர்களிடையே புகுத்தப்பட்டது. 
பார்ப்பனராகிய விசுவாமித்திரர் ஒரு ஜோதிடர். இந்த பார்ப்பன ஜோதிடர்களின் கட்டுக்கதையைப் பாருங்கள்.
கிருத்திகை நட்சத்திரத்திலுள்ள 7 நட்சத்திரங்களும் 7 முனிவர்களின் மனைவியர்களாம். அம்மனைவிமார் முறையே அம்பாதுலாநிதத்நிஅப்யந்திமேகயந்தி,வர்ஷயந்தி,சுபுனிகா. இது பார்ப்பனர்களின் அறிவியல். ஜோதிடர்களின் வானவியல்.
விஞ்ஞானம் தரும் விளக்கத்தைப் பாருங்கள். கிருத்திகை நட்சத்திரம் சூரியனைவிட1000 மடங்கு ஒளியுடையது. அதன் குறுக்களவு 90 இலட்சம் கி.மீ. இங் கிருந்து 410ஒளியாண்டுத் தொலைவில் உள்ளது.
வேதத்திற்கும் - விஞ்ஞானத்திற்கும் உள்ள வேறுபாட்டை எண்ணிப்பார். இந்த வேதம் கூறும் சோதிடத்தை நம்ப வேண்டுமாம்.
ரிக் வேதத்தை ஜோதிட நூல் என்கின்றனர்! மேலும் பிருஹத் சம்கிதைசாராவளி,காலப்பிரகாசிகா அர்த்த சாஸ்திரம் ஆகியவைகளும் ஜோதிட நூற்களாம். இந்த நூற்கள் ஒருவருடைய மரணம்நிகழ்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகள்நேரம் ஆகியவற்றை வினாடி சுத்தமாக முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடிய கணித முறைகளை விளக்கியிருக்கிறதாம். இப்படி எழுதி இருக்கிறார் தினமணி ஜோதிடர்.
இந்த வேதங்களிளெல்லாம் அறிவியல் இருக்கிறதாம்நாமெல்லாம் அதை நம்ப வேண்டுமாம். இப்படித் துணிந்து இன்னமும் எழுதிக்கொண்டிருக்கின்றனர் பார்ப்பனர்கள்.
உண்மையிலேயே மனித வாழ்வை நிர்ணயிக்கக் கூடிய கணிதமுறை ஜோதிடத்தில் இருக்குமானால் அறிவியல் உலகம் அதை ஏற்றுக்கொண்டிருக்கும்.
உண்மையில்லாத பொய் நிறைந்த பார்ப்பனர்களின் ஜோதிடத்தை அறிவியல் உலகம் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ளாது. வேத காலத்திலிருந்து பார்ப்பனர்கள் சொல்லிப்பார்க்கிறார்கள் அறிவியல் உலகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லையே.
உலகின் வானவியல் அறிஞர்கள்கோபர்னிக்கஸ்கெப்ளர்பிராகேகலிலியோ,நியூட்டன்லேப்லேஸ்சேம் பர்லின்மவுல்டன்பிரின்சியாஜேம்ஸ்பிரெட் ஹாய்ஸ்,வான்வெய் ஜக்கர்ஹாய்லிஹெயின்ரிச்வேபேஈன்ஸ்டீன் ஆகியோர்களின் வானவியல் கருத்துகளை யெல்லாம் ஏற்றுக்கொண்ட விஞ்ஞான உலகம் ஜோதிடத்தையும்தினமணி ஜோதிடர் கூறியுள்ள அந்த வேதக் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளாததற்குக் காரணம் அதிலே அறிவியல் இல்லைபொய்யும் புரட்டும் கொண்டதாக இருப்பதால் அதை ஏற்றுக்கொள்ள வில்லை. 
அறிவியலுக்குப் பொருந்தாத ஜோதிடத்தைப் புகுத்தியவர்கள் பார்ப்பனர்களே. அதை நம்பி ஏமாந்த இளித்த வாயர்களாக வாழ்பவர்கள் தமிழர்களே.

நன்றி:- "விடுதலை" 12-6-2009