Showing posts with label ரமலான் பரிசு. Show all posts
Showing posts with label ரமலான் பரிசு. Show all posts

Friday, July 27, 2012

ரமலான் பரிசு ...!


நான் வசிக்கும் கலிபோர்னியா மாகாணம் vallejo எனும் ஊரில் கணிசமான முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர் .
குறிப்பாக அதிரையை சேர்ந்தவர்களும் அதிகளவில் வசிக்கின்றனர்.அரேபியர் ,பாகிஸ்தானியர் , இந்தியா முஸ்லிம்கள் என பல தரப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் . 

இங்கு ஒரு பள்ளிவாசல் இருந்து,அது சிறியதாக இருப்பதாலும்,முஸ்லிம் சனத் தொகை கூடுவதாலும் அதிக மக்கள் தொழ சிரமமாக இருந்தது.அச் சூழ்நிலையில் புதிதாக பள்ளி வாசல் கட்டுவதாக இருந்தால் .இரண்டு மூன்று மில்லியன் டாலர் தேவைப்படும் .இதற்கிடையே ..நம்மவர்கள் பல தரப்பட்ட முயற்ச்சியில் ஈடு பட்டுவந்தார்கள்.
இந்த சூழ்நிலையில் பெரிய சர்ச் ...புதிய கட்டிடம் என்று கட்டிய   சில மாதங்களிலேயே மக்கள் வருகை தராததால் நிர்வாகம் தேவாலத்தை மூடி விட்டார்கள் .தேவாலயத்தை கட்டிட நிர்வாகம் குறிப்பிட்ட வங்கியில் கடன் வங்கி ..அதை செலுத்தாமல் போகவே ..வங்கி அந்த கட்டிடத்தை கையாக படுத்தி கொண்டது ...
                  இதையறிந்த vallejo இஸ்லாமிக் சென்டர் ..நிர்வாகிகள் மிக நியாயமான விலையில் கட்டிடத்தை வாங்கி புனரமைப்பு செய்து நவீன வசதியோடு ..விசாலமான பெரிய பள்ளியாக காட்சி தருகிறது ..ரமலான் முதல் பிறையில் தொழுகையும் ஆரமமாகி சிறப்பாக நடைபெற்று வருகிறது .அல்ஹம்துலில்லாஹ் 
*அதான் நவீன ஒலி பெருக்கியில் ஒலிக்கிறது.
*எல்லாத் தொழுகைகளுடன் - இரவுத் தொழுகையும் நடை பெறுகிறது .

இது எங்களுக்கு ரமலான் பரிசாக அல்லாஹ் தந்துள்ளதாக கருதுகிறோம் .

அதே போன்று எங்கள் ஊரில் அருகில் உள்ள பேர்பீல்ட் என்ற ஊரிலும்(முன்பு சிறிய பள்ளியாக இருந்தது) சென்ற வாரம் புதிய பள்ளிவாசல் திறக்கப்பட்டது.இங்கும் அதிரை மக்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்,எங்கள் பக்கத்து கவுண்டியான சொனோமா கவுண்டியில் உள்ள பள்ளிவாசல் தற்போது - கிறிஸ்தவ ஆலயத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்டு - தொழுகை நடந்து வருகிறது,இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் பள்ளி கட்ட உள்ளார்கள்.

அந்தப் பள்ளியின் ஜும்மா பயான் கேட்க இங்கு கிளிக்கவும் 


மேலும் உலகம் முழுதும் உள்ள முஸ்லிம்களுக்கு இதே போன்று ரமலான் பரிசு கிடைக்கட்டும் ..ஆமீன் 


 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
'உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குச் சென்றால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்!" 
என அபூ கதாதா(ரலி) அறிவித்தார். SAHIH AL BUKHARI # 444
அதிரை சித்தீக்